ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் தர்ப்பணம்!

டி அமாவாசை தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் தங்கள் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்தனர்.

முக்கடல் சங்கமம்

ஆடி அமாவாசை தினமான இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால் அவர்களுடைய ஆன்மா நற்கதி அடையும் என்பது நம்பிக்கை. கன்னியாகுமரி மாவட்டத்தில் குழித்துறை தாமிரபரணி ஆறு மற்றும் கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் ஆகிய இடங்களில் இன்று முன்னோர்களுக்கு பலி தர்ப்பணம் கொடுக்க லட்சக்கணக்கானோர் திரண்டனர். கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் சங்கிலித்துறை கடற்கரைப் பகுதியில் இன்று காலை முதலே மக்கள் திரண்டனர். அவர்கள் வேத விற்பன்னர்கள் மூலம் மந்திரம் ஜெபித்து உணவுப் பொருள்களைக் கடலில் கரைத்து தன் முன்னோருக்குத் தர்ப்பணம் கொடுத்தனர்.

முக்கடல் சங்கமம்

அதுபோல, குழித்துறை தாமிரபரணி ஆற்றங்கரையில் லட்சக்கணக்கான மக்கள் பலிதர்ப்பணம் செய்தனர். லட்சக்கணக்கான மக்கள் பலிதர்ப்பணம் செய்வதற்கான ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் செய்யப்பட்டிருந்தது. ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!