வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (31/08/2018)

கடைசி தொடர்பு:17:15 (31/08/2018)

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா: சிறப்பு தரிசனங்கள் ரத்து! #Tirupati

திருப்பதியில் செப்டம்பர் 9-ல் தொடங்குகிறது பிரம்மோற்சவம் - முழுமையான நிகழ்ச்சி விவரங்கள்!

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா: சிறப்பு தரிசனங்கள் ரத்து! #Tirupati

திருப்பதி வேங்கடேச பெருமாள் பக்தர்களுக்கு இந்த ஆண்டு இரண்டு கொண்டாட்டங்கள். வழக்கமாக ஆண்டுதோறும் ஒரு பிரம்மோற்சவம்தான் நடைபெறும். இந்த ஆண்டு இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெற உள்ளன. 

புராண - இதிகாச காலத்தில் பிரம்மனே திருமலைக்கு வந்து மலையப்பசாமிக்கு இந்த ஒன்பது நாள் விழாவைக் கொண்டாடியதாக ஐதீகம். இதையொட்டி வைகாநஸ ஆகம விதிமுறைகளின்படி வேங்கடேச பெருமாளுக்கு தினமும் பூஜைகளும் அலங்காரங்களும் செய்விக்கப்பட்டு நான்கு மாடவீதிகளில் சுவாமி வீதி உலா வருகிறார்.

திருப்பதி

இந்த ஆண்டுக்கான முதல் பிரம்மோற்சவம் வருகிற செப்டம்பர் மாதம் 12 - ம் தேதி தொடங்கி, 21 - ம்தேதி வரை நடைபெறுகின்றது. 
இரண்டாவது பிரம்மோற்சவம் அக்டோபர் 9 - ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சம்ப்ரோக்ஷணம் கடந்த ஆகஸ்ட் 16 -ம் தேதி நடைபெற்றதைத் தொடர்ந்து நடைபெறும் பிரம்மோற்சவம் என்பதால், இந்தப் பிரம்மோற்சவங்கள் கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றன.

திருப்பதி

சிறப்பு தரிசன சலுகைகள் ரத்து!

பிரம்மோற்சவத்துக்குப் பக்தர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ள இருப்பதால், திருமலை திருப்பதி தேவஸ்தானம் விழா நடைபெறும் நாள்களில், அனைத்து வகையான சிறப்பு தரிசனங்கள், ஆர்ஜித சேவைகள், மூத்தக் குடிமக்கள், கைக்குழந்தைகளுடன் வருபவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு வழங்கி வரும் சிறப்பு தரிசன சலுகைகள் யாவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவை தவிர வி.ஐ.பி. தரிசனம், பரிந்துரை மற்றும் சிபாரிசுக் கடிதங்களின் அடிப்படையில் வருபவர்களுக்கும் சிறப்பு தரிசன அனுமதி மறுக்கப்படுகிறது.

பிரம்மோற்சவ விழா நிகழ்ச்சிகள் விவரம்:

11-9-18 - கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் (சுத்திகரிப்புப் பணி)

12-9-18 - இரவு 7 மணி முதல் 9 மணிக்குள் அங்குரார்ப்பணம்

13-9-18 -  மாலை 4.30 மணிக்கு கருடக் கொடியேற்றம் இரவு 7 மணிக்கு பெரிய சேஷ வாகன வீதி உலா

14-9-18 - காலை 9 மணிக்கு சிறிய சேஷ வாகன வீதி உலா
இரவு 7 மணிக்கு ஹம்ச (அன்னப்பறவை) வாகன வீதி உலா

15-9-18 - காலை 9 மணிக்கு சிம்ம வாகன வீதி உலா
 இரவு 7 மணிக்கு முத்துப்பந்தல் நிகழ்ச்சி

16-9-18 - காலை 9 மணிக்கு கற்பக விருட்ச வாகன வீதி உலா
இரவு 9  மணிக்கு சர்வ பூபால வாகன வீதி உலா

திருப்பதி

17-9-18 - காலை 9 மணிக்கு மோகினி அவதாரத்தில் பல்லக்கு வாகன வீதி உலா 
இரவு 7 மணிக்கு கருட சேவை

18-9-18 காலை 9 மணிக்கு அனுமன் வாகன வீதி உலா
 மாலை 5 மணியளவில் தங்கத் தேரோட்டம், 
இரவு யானை வாகன வீதிஉலா, 

19- 9-18  காலை 9 மணிக்கு  சூர்ய பிரபை வாகன வீதி உலா
இரவு 7 மணிக்கு சந்திர பிரபை வாகன வீதி உலா

20-9-18 காலை 7 மணிக்கு தேரோட்டம், 
இரவு 7 மணிக்கு குதிரை வாகன வீதி உலா, 
21-9-18 காலை 7 மணிக்கு சக்கர ஸ்நானம் இரவு 7 மணிக்கு கொடி இறக்கத்துடன் விழா நிறைவு.

பிரம்மோற்சவ விழாவின்போது பகலில் வழக்கம்போல் காலை 9 மணியிலிருந்து பகல் 11 மணிவரை நான்கு மாட வீதிகளில் சுவாமி வாகனத்தில் வீதி உலா நடைபெறும். இதில் எந்தவித மாற்றமும் இல்லை. ஆனால், இரவுப்பொழுதில் வாகன வீதி உலா நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
வழக்கமாக இரவு 8 மணிக்குத் தொடங்கும் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி ஒரு மணி நேரம் முன்னதாக இரவு 7 மணிக்கே தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரம்மோற்சவம் நடைபெறும் இந்த ஒன்பது நாள்களும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்