வெளியிடப்பட்ட நேரம்: 07:36 (02/09/2018)

கடைசி தொடர்பு:08:38 (02/09/2018)

"மயில்பீலி சூடி நிற்கும் மன்னவா...!" - இறையருள்- கோகுலாஷ்டமி சிறப்பிதழ் #EBook

கோகுலனின் பல்வேறு லீலைகளை ஓவியர் கேசவ் தன் தெய்வீகத் தூரிகையால் உயிர்பிக்க, கண்ணன் பற்றிய அபூர்வ செய்திகள் இதழ் முழுவதும் நிறைந்திருக்கிறது. வாசியுங்கள்... அன்பின் வடிவமான கண்ணனின் அருளமுதத்தை அள்ளிப் பருகுங்கள்...

ஷ்டமி திதி சுபகாரியத்துக்கு ஆகாது' என்பார்கள்.  இதற்கு என்ன காரணம் தெரியுமா? அன்று பகவான் கிருஷ்ணன் மதுராவில் அவதரித்தபடியால், எல்லோரும் கண்ணனை வழிபடுவதில் மட்டுமே தங்களை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும் என்பதுதான். எனவேதான், 'அஷ்டமியன்று சுபகாரியங்களில் ஈடுபடக்கூடாது' என்று பெரியோர்கள் கூறிச் சென்றிருக்கிறார்கள்.

கோகுலாஷ்டமி

"மயில்பீலி சூடி நிற்கும் மன்னவா..." -  இறையருள் : ஆவணி - கோகுலாஷ்டமி சிறப்பிதழ்!
  டவுன்லோடு செய்ய இங்கே க்ளிக் செய்க...

அதே அஷ்டமி திதியன்றுதான் கோகுலத்தில் விஷ்ணுதுர்கையின் அவதாரமும் நிகழ்ந்தது.  அதன் காரணமாகவே மாதம்தோறும் அஷ்டமி திதி துர்கை வழிபாட்டுக்கு உரியதாகிறது.  

வருடந்தோறும் எத்தனையோ விழாக்கள் கொண்டாடப்பட்டாலும், கோகுலாஷ்டமி தனிச் சிறப்பு கொண்டதாகத் திகழ்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கொண்டாடும் பண்டிகை கோகுலாஷ்டமி. 

கிருஷ்ணன் பாலகனாக கோகுலத்தில் வளர்ந்து வந்தபோது, அவன் செய்த பால லீலைகள் அனைத்தும் பரவசப்படுத்தக் கூடியவை. அதன் காரணமாகவே குழந்தைகள் கண்ணனை விரும்புகிறார்கள்; பெண்களோ அவனுடைய பிரேமைக்குக் கட்டுப்பட்டவர்களாக அவனை விரும்புகிறார்கள்;  குருக்ஷேத்திரத்தில் ஆசார்யனாக இருந்து கீதையை உபதேசித்ததால் ஆசார்யபுருஷர்கள் அவனைப் போற்றுகிறார்கள்;

 'தனக்கு ஒரு கனி, ஒரு மலர், ஒரு இலை அல்லது சிறிது நீர் கொடுத்தாலும் பக்தியுடன் கொடுப்பதை ஏற்றுக்கொள்கிறேன்' என்று வறியவரும்  தன்னை வழிபட எளியதொரு வழியைக் காட்டி  அருளிய காரணத்தினால் அவனை ஏழைப் பங்காளனாக எல்லோரும் கொண்டாடுகிறார்கள். 

மயில்பீலி சூடிநிற்கும் அந்த மன்னவனைப் போற்றும் விதமாக, ஆவணி மாத 'இறையருள்' E-Book, கண்ணன் சிறப்பிதழாக வெளிவருகிறது.  கோகுலனின் பல்வேறு லீலைகளை ஓவியர் கேசவ் தன் தெய்வீகத் தூரிகையால் உயிர்பிக்க, கண்ணன் பற்றிய அபூர்வ செய்திகள் இதழ் முழுவதும் நிறைந்திருக்கிறது. வாசியுங்கள்... அன்பின் வடிவமான கண்ணனின் அருளமுதத்தை அள்ளிப் பருகுங்கள்!

"மயில்பீலி சூடி நிற்கும் மன்னவா..." -  இறையருள் : ஆவணி - கோகுலாஷ்டமி சிறப்பிதழ்!   டவுன்லோடு செய்ய இங்கே க்ளிக் செய்க...
 

 

 

 


டிரெண்டிங் @ விகடன்