ஒருநாள் சிறையில் இருந்தால் லாக்-அப் தோஷம் நீங்கும்! பகீர் நம்பிக்கை

ஒருநாள் சிறையில் இருந்தால் லாக்-அப் தோஷம் நீங்கும்! பகீர் நம்பிக்கை

ஜோதிடத்தின் பெயரால், ஆன்மிகத்தின் பெயரால் திடீர் திடீரென புற்றீசல் போல் அவ்வப்போது மூடநம்பிக்கைகளும் அதையொட்டிய சடங்குகளும் பரிகாரங்களும்  கிளம்புவது வாடிக்கைதான். பச்சைக் கயிறு கட்டிக் கொண்டால் பணக்காரனாகலாம் என்பது தொடங்கி, தங்கைக்குப் பச்சை நிறச் சேலை எடுத்துக்கொடுப்பது, வீட்டில் தீபம் ஏற்றுவது வரை அடிக்கடி பல வதந்திகளைப் பரப்பிவிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார்கள். அந்த வகையில் இப்போது உத்தரபிரதேசத்தில் 'லாக்-அப்' பரிகாரம் என்று சொல்லி சில  புண்ணியவான்கள் பரபரப்பைப் பற்ற வைத்திருக்கிறார்கள்.

லாக்-அப்

எதற்கு இந்த லாக் - அப் பரிகாரம்?  

'ஜாதகத்தில் சிறைக்குச் செல்லும் அமைப்பு இருப்பவர்கள், போலீஸ் லாக் - அப்பில் ஒரு நாள்  இருந்து தண்டனையை அனுபவித்தால், அந்த ஆபத்து நீங்கிவிடும்' என்று புதிதாகக் கிளப்பிவிட்டுள்ளார்கள். குறிப்பாக உத்தரபிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் இந்த நம்பிக்கை தலைவிரித்தாடுகிறது.   

ரமேஷ் சிங் எனும் 38 வயது நபர், உள்ளூர் போலீஸ் நிலையத்தில் உள்ள ‘லாக்-அப்’பில் ஒரு நாள் முழுவதும் இருந்திருக்கிறார். இவரது  ஜாதகத்தில் உள்ள ‘சிறை செல்லும் தோஷ'த்தைப் போக்க இப்படிச் செய்தாராம். இத்தனைக்கும் இவர் ஒரு தொழிலதிபர். 

இவரது குடும்ப ஜோதிடர், 'இப்படிப்பட்ட அமைப்பு உங்கள் ஜாதகத்தில் இருக்கிறது. அதற்குப் பரிகாரமாக நீங்கள் ஒருநாள் போலீஸ் ஸ்டேஷன் லாக் - அப்பில் இருந்தால் தோஷம் நீங்கிவிடும்' என்று கூறியதும், ஒருநாள் லாக் அப்பில் இருக்க மாவட்ட நிர்வாகத்திடம் முறையாக விண்ணப்பித்திருக்கிறார். அவர்கள் அனுமதி அளித்த பிறகு,  இவர் லாக் அப்பில் இருந்திருக்கிறார். சிறையில் கொடுக்கப்பட்ட சாப்பாட்டையே சாப்பிட்டிருக்கிறார். 

இவரைப் போலவே லாக் - அப்பில் இருந்த சதுர்வேதி என்பவர், 'வாழ்வதற்குத் தேவையான குறைந்தபட்ச பொருட்கள் இருந்தாலே போதும் என்பதை எனக்கு இந்த அனுபவம் உணர்த்தியது' என்று தத்துவம் பேசுகிறார்.

ஜாதகம்

சரி, சிறை தோஷம் என்றால் என்ன? 

''ஒவ்வொருவருடைய ஜாதகத்திலும் 6, 8 மற்றும் 12-ம் இடங்களை மறைவு ஸ்தானங்கள் என்று சொல்லுவார்கள். 6-ம் இடம் என்பது எதிரி, கடன்  மற்றும் நோய் ஆகியவற்றையும் 8-ம் இடம் என்பது தலைமறைவு வாழ்க்கை, மரணம் ஆகியவற்றையும் 12-ம் இடம் அயன, சயன, சுகம் மற்றும் மறுபிறப்பு ஆகியவற்றையும் குறிக்கும். 8-ம் இடத்து அதிபதி 12-ம் இடத்திலிருந்தாலும், 8-ம் இடத்து அதிபதி 12-ம் இடத்து அதிபதியுடன் சேர்ந்திருந்தாலும், 8-ம் அதிபதியுடன் கேது சேர்ந்திருந்தாலும் ஒருவருக்குச் சிறை செல்லும் நிலை ஏற்படும்.

3-ம் இடம் தைரிய ஸ்தானமாகும். 3-ம் இடத்து அதிபதியும் எதிரியைக் குறிக்கும் 6-ம் இடமும் வலுவாக இருந்தால் கட்டுக்கடங்காத ஆஸ்ட்ரோ கிருஷ்ணன்கோபம் வருபவர்களாக ஜாதகர் இருப்பார்.  3-ம் இடத்துக்கு அதிபதியும்  6-ம் இடத்துக்கு அதிபதியும் சேர்ந்து 8-ம் இடத்தில் இருந்தால், அந்த ஜாதகர்  மற்றவர்களைத் தற்கொலைக்குத் தூண்டுவார்.  இதில் செவ்வாய், ராகு  சேர்க்கை ஏற்பட்டால், ஜாதகரே கொலையும் செய்வார். 

3, 6, 8  மற்றும் 12 ஆகிய இந்த நான்கு இடங்களின் தொடர்புகள்தான் ஒருவரைத் தவறிழைக்கச் செய்வதுடன் சிறைக்கும் செல்ல வைக்கும்.

இப்படிப்பட்ட ஜாதகர்களுக்கு லாக் - அப் பரிகாரங்கள் என்பதெல்லாம் ஜோதிடத்தைக் கேலிக்குரியதாக்கும். இந்த மாதிரியான பரிகாரங்களின் மூலம் நற்பலன் தேடுவதைவிட, அவர்களுக்குக்  கவுன்சிலிங் கொடுத்து அவர்களுடைய மனப் போக்கை மாற்ற முயற்சி செய்யலாம்.

சிறைக்குச் செல்லக்கூடிய ஜாதக அமைப்பைப் பெற்றவர்களை யோகா, தியானத்தில் ஈடுபடுத்தி அவர்களுடைய மனதைப் பண்படுத்தலாம். கோயில்களுக்கு மாலையணிந்து விரதம் அனுஷ்டிக்கச் செய்யலாம்'' என்று தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!