வெளியிடப்பட்ட நேரம்: 16:23 (13/09/2018)

கடைசி தொடர்பு:16:23 (13/09/2018)

தொடங்கியது திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழா...!

திருமலை திருப்பதியில் ஒன்பது நாள்கள் நடைபெறும் பிரம்மோற்சவத் திருவிழா இன்று பக்தர்கள் சூழ கோலாகலத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தையொட்டி திருப்பதி திருமலையில் வைகாநஸ ஆகம முறைப்படி வேங்கடேசப் பெருமாளுக்கு தினமும் பூஜைகளும் அலங்காரங்களும் செய்விக்கப்பட்டு நான்கு மாடவீதிகளில் பல்வேறு வாகன வீதி உலா நடைபெறுகிறது. 

திருப்பதி திருமலை

இன்று இரவு 7 மணிக்கு பெரிய சேஷ வாகன வீதி உலா, 14-ம் தேதி காலை 9 மணிக்கு சிறிய சேஷ வாகன வீதி உலா, 14-ம் தேதி இரவு 7 மணிக்கு ஹம்ச (அன்னப்பறவை) வாகன வீதி உலா, 15-ம் தேதி காலை 9 மணிக்கு சிம்ம வாகன வீதி உலா, 15-ம் தேதி இரவு 7 மணிக்கு முத்துப்பந்தல் நிகழ்ச்சி, 16-ம் காலை 9 மணிக்கு கற்பக விருட்ச வாகன வீதி உலா, 16-ம் தேதி இரவு 9  மணிக்கு சர்வ பூபால வாகன வீதி உலா, 17-ம் தேதி காலை 9 மணிக்கு மோகினி அவதாரத்தில் பல்லக்கு வாகன வீதி உலா, 17-ம் தேதி இரவு 7 மணிக்கு கருட சேவை, 18-ம் தேதி காலை 9 மணிக்கு அனுமன் வாகன வீதி உலா,  18-ம் தேதி மாலை 5 மணியளவில் தங்கத் தேரோட்டம், 18-ம் தேதி இரவு யானை வாகன வீதிஉலா, 19-ம் தேதி காலை 9 மணிக்கு  சூர்ய பிரபை வாகன வீதி உலா, 19-ம் தேதி இரவு 7 மணிக்கு சந்திர பிரபை வாகன வீதி உலா, 20-ம் தேதி காலை 7 மணிக்கு தேரோட்டம், இரவு 7 மணிக்கு குதிரை வாகன வீதி உலா, 21-ம் தேதி காலை 7 மணிக்கு சக்கர ஸ்நானம், 21-ம் தேதி இரவு 7 மணிக்கு கொடி இறக்கத்துடன் விழா நிறைவு.

பிரம்மோற்சவம் நடைபெறும் இந்த ஒன்பது நாள்களும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க