சென்னையில் வாழைப்பூ, தேங்காயால் உருவாக்கப்பட்ட பிரமாண்ட விநாயகர் சிலை!

நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா பிரமாண்டமாகக் கொண்டாடப்பட்டது. கோயில்கள், கடைத்தெருக்கள், பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்து இடங்களும் விழாக்கோலம் பூண்டிருந்தன. சைக்கிள் ஓட்டும் விநாயகர், காளையை அடக்கும் விநாயகர், கிரிக்கெட் விளையாடும் விநாயகர். நீச்சல் குளத்தில் படகில் செல்லும் விநாயகர், ரயில் ஓட்டும் விநாயகர் எனப் பல வித்தியாசமான விநாயகர் சிலைகள் பார்ப்பவர்கள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

விநாயகர்

சென்னை சிட்லப்பாக்கத்தில் ஒரே இடத்தில் 10,000 ஆயிரம் சிலைகளுடன் பிரமாண்ட கண்காட்சி நடத்தப்பட்டது. இந்தக் கண்காட்சி வரும் 23-ம் தேதி வரை, காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 4.30 மணியிலிருந்து இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். அந்தவகையில் சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் தேங்காய் மற்றும் வாழைப்பூக்களால் செய்யப்பட்ட பிரமாண்டமான விநாயகர் சிலைகள் வைத்து வழிபடப்பட்டது. மக்களின் பார்வைக்காக சில நாள்கள் வைக்கப்பட்டு பின்னர் தேங்காயையும், வாழைப்பூவையும் மக்கள் அனைவருக்கும் பிரித்துக் கொடுக்க இருப்பதாக விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

விநாயகர்

``பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், சுட்ட களிமண், காகிதக்கூழ் போன்றவற்றால் செய்யப்படும் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கும்போது நீர்நிலைகள் மாசுபடுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அதைத் தவிர்ப்பதற்காகவே இந்த முறையில் சிலைகள் உருவாக்கி வழிபடுகிறோம். கடந்த வருடம் கரும்பால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டோம். இந்தவருடம் தேங்காய் மற்றும் வாழைப்பூ. பயன்படுத்தப்பட்ட தேங்காய், வாழைப்பூ போன்றவற்றை மக்களுக்கே பிரித்துக் கொடுத்து விடுகிறோம். இந்த முறையில் சிலைகள் செய்து வழிபடுவது மக்களுக்கும் பயனுள்ள வகையில் இருக்கிறது``  என்கிறார்கள் விழாக்குழுவினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!