வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (17/09/2018)

கடைசி தொடர்பு:15:45 (17/09/2018)

`திருக்குடை, ஆண்டாள் சூடிய மாலை' - திருப்பதியில் களைகட்டும் பிரம்மோற்சவம்!

திருமலை திருப்பதி வேங்கடேசப் பெருமாள் கோயிலில் கடந்த 13 - ம் தேதி தொடங்கி, பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகின்றது. இதில் பங்கேற்பதற்காக இந்தியா மட்டுமன்றி பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.

திருப்பதி


குறிப்பாக இன்று 17 -ம் தேதி இரவு 7 மணிக்கு நடைபெறும் கருட சேவையில் கலந்துகொள்வதற்காக கிட்டத்தட்ட 3 லட்சம் பக்தர்கள் திருமலைக்கு வந்து மலையப்பசுவாமியின் அருளைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்பதி, ஸ்ரீரங்கம், அழகர்கோவில் போன்ற பெருமாள் கோயில்களில் நடைபெறும் சிறப்பு விசேஷங்களின்போது, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு மாலை அணிவித்து, அதை அங்கிருந்து கொண்டு சென்று மலையப்பசுவாமிக்குச் சமர்ப்பிப்பது வழக்கம். ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்ட மாலையை தனிக்கூடையில் வைத்து மேளதாளங்கள் முழங்க திருமலைக்குக் கொண்டு வந்து சேர்த்தனர்.

இதேபோல் பிரம்மோற்சவத்தின்போது, வேங்கடவனுக்குக் குடைகள் அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியும் அற்புத நிகழ்வு. சென்னையிலிருந்து திருப்பதி குடை புறப்பாடு கடந்த 11 -ம் தேதி தொடங்கியது. 

திருக்குடைகள்

ஐந்தாம் நாளான இன்று நடைபெறும் கருட சேவைக்காக, இந்தத் திருக்குடைகளும், ஆண்டாள் அணிந்த மாலையும் பெருமாளுக்குச் சமர்ப்பிக்கப்பட்டன. அப்போது, சுற்றி நின்ற பக்தர்கள் அனைவரும் `கோவிந்தா'... 'கோவிந்தா' என்று பக்தி முழக்கமிட்டனர்.


படங்கள் உதவி: திருமலை திருப்பதி தேவஸ்தானம்


மேலும் படங்களுக்கு....https://www.vikatan.com/news/album/festival/10743-celebration-of-tirupati-brahmotsavam.album

நீங்க எப்படி பீல் பண்றீங்க