நாடு முழுவதும் மொஹரம் நோன்பு இன்று கடைப்பிடிக்கப்படுகிறது! | Moharam fasting is observed today across the country!

வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (21/09/2018)

கடைசி தொடர்பு:07:32 (21/09/2018)

நாடு முழுவதும் மொஹரம் நோன்பு இன்று கடைப்பிடிக்கப்படுகிறது!

இஸ்லாமியர்களின் புனித நோன்புகளில் ஒன்றான, ஆஷூரா நோன்பு இன்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. அதிகாலையில் எழுந்து சஹர் உணவைச்சாப்பிட்டு இந்த நோன்பை அவர்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.

மொஹரம்

இஸ்லாமியர்களின் மாதங்களில் முதல் மாதம்  மொஹரம்.  இஸ்லாமிய மாதங்கள் 1) மொஹரம்,  2) ஸஃபர்,  3) ரபீஉல் அவ்வல் 4) ரபீஉல் ஆகிர் , 5) ஜுமாதா அல்ஊலா, 6) ஜுமாதா அல்உக்ரா 7) ரஜப், 8) ஷஅபான்,  9) ரமலான், 10) ஷவ்வால், 11) துல்கஅதா 12) துல்ஹஜ்ஜு ஆகிய பன்னிரண்டு மாதங்கள். இவற்றில் துல்கஅதா, துல்ஹஜ்ஜு, மொஹரம், ரஜப் ஆகிய நான்கு மாதங்களும் புனிதமானவை.  இந்த மாதங்களில் பாவம் புரிவது மற்ற மாதங்களைக் காட்டிலும் மிகவும் தீங்கானது. அதேசமயம், இவற்றில் நல்ல அமல்கள் செய்வது, பல மடங்கு நன்மைகளைக் கொடுக்கும். இதில் மொஹரம் மாத பத்தாவது நாளான இன்று 21-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மொஹரம் நோன்பு  இஸ்லாமியர்களால் நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நோன்புக்கு ஆஷூரா நோன்பு என்று பெயர். இது தொடர்பாக முஹம்மது நபி அவர்கள் கூறும்போது, ``ஆஷூரா நாள் நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டுக்குப் பாவப்பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்கள் புத்தாண்டு துவக்க தினத்தைக் கொண்டாடுவதில்லை; மாறாக மொஹரம் நாளில் நோன்பிருந்து, இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் மாண்பை  கடைப்பிடித்து வருகின்றனர்.  ரமலானுக்குப் பின் சிறந்த நோன்பு மொஹரம் நோன்பாகும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close