வெளியிடப்பட்ட நேரம்: 07:43 (22/09/2018)

கடைசி தொடர்பு:08:38 (22/09/2018)

புரட்டாசி மாத விழாக்கள்... விஷேசங்கள்! #VikatanPhotoStory

புரட்டாசி மாதத்தில் வரும் விழாக்கள் மற்றும் விரதங்கள் குறித்த தகவல் தொகுப்பு உங்களுக்காக...

புரட்டாசி மாத விழாக்கள்... விஷேசங்கள்!  #VikatanPhotoStory

புரட்டாசி பெருமாளுக்கு உகந்த மாதம் மட்டுமல்ல; அந்த மாதத்தில்தான் அம்பிகையை வழிபடக்கூடிய நவராத்திரி, முன்னோர்களை வழிபடுவதற்கு உகந்த மஹாளய அமாவாசை ஆகிய புண்ணிய தினங்கள் வருகின்றன. புரட்டாசி மாதத்தில் வரும் விழாக்கள் மற்றும் விரதங்கள் குறித்த தகவல் தொகுப்பு உங்களுக்காக...

22.9.18 சனி மகா பிரதோஷம்

புரட்டாசி மகா பிரதோஷம்

பிரதோஷ காலத்தில் நந்திதேவரையும், சிவபெருமானையும் தரிசித்து வழிபட்டால் அளவற்ற நன்மைகள் கிடைக்கும். மாதம்தோறும் இரண்டு பிரதோஷங்கள் வரும். பிரதோஷம் சனிக்கிழமைகளில் வருவது மிகவும் விசேஷமாகும். அன்று சிவபெருமானை வழிபட்டால், ஒரு வருடம் பிரதோஷ வழிபாடு செய்த புண்ணியம் கிடைக்கும்.

23. 9. 18 கதலீ கௌரி விரதம்
 

கதலீ கௌரி விர்தம்

இன்று கதலீ கௌரி அம்மனை வழிபடச் சிறந்த நாள். வாழை இலை மீது அம்மன் உருவச்சிலையை வைத்து 16 உபசார பூஜைகள் செய்தால் துன்பம் அனைத்தும் விலகி இன்பம் வந்துசேரும். கௌரி அம்மனின் பரிபூரண அருள் கிடைக்கும்.

 

24. 9. 18 உமா மகேஸ்வர விரதம்

உமா மகேஸ்வரர்
 

சிவசக்தியாக அருள்புரியும் உமாமகேஸ்வரரை வழிபடுவதற்கு ஏற்றத் தினம் புரட்டாசி பௌர்ணமி. இன்று விரதமிருந்து உமாமகேஸ்வரராக சிவபெருமான் அருள்புரியும் சிவத் தலங்களுக்குச் சென்று வழிபட்டால் அனைத்து தோஷங்களும் விலகும் என்பது நம்பிக்கை. கடன் தொல்லை நீங்கி, காரியத் தடங்கல் விலகும்.

 

28. 9. 18 சங்கடஹர சதுர்த்தி


சங்கடஹர சதுர்த்தி

கணபதியை பூஜிக்க சிறந்த நாள் சங்கடஹர சதுர்த்தி. புரட்டாசி சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு விரதமிருந்து வழிபட்டால் ஆனைமுகத்தானின் அருள்பெற்றுத் தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும்.
 

28. 9. 18 மஹா பரணி

மஹா பரணி

மஹாளய பட்சத்தில் தினமும் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்க இயலாதவர்கள் மஹாபரணி தினத்தில் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.

5. 10.18 சர்வ ஏகாதசி

ஏகாதசி

புரட்டாசி மாத சர்வ ஏகாதசிக்கு 'அஜா ஏகாதசி' என்று பெயர். இன்று விரதமிருந்து திருமாலை வழிபட்டால் குடும்ப ஒற்றுமை வளரும்.

8. 10. 18 சர்வ மஹாளய அமாவாசை

மஹாளய அமாவாசை

மறைந்த நம்முடைய முன்னோர்கள் ஒருசேரக் கூடும் காலமே மஹாளய பட்சம் என்று கருதப்படுகிறது. முன்னோர்களை வழிபடுவதற்கு மிகச் சிறந்த நாள் மஹாளய அமாவாசை பக்தியுடனும், நம்பிக்கையுடன் தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபடுவதால், நமக்கும் நம் சந்ததியினருக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
 

09. 10. 18 நவராத்திரி பூஜை ஆரம்பம்

நவராத்திரி

மூன்று மாபெரும் சக்திகளான துர்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகியோரைப் போற்றி 9 நாள்கள் கொண்டாடப்படும் நவராத்திரி பூஜை தொடங்கும் நாள் இன்று.

14. 10. 18 சஷ்டி விரதம்
 

சஷ்டி விரதம்

'சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும்' என்பது ஆன்மிக மொழி. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சஷ்டி விரதம் மேற்கொண்டால் குழந்தை வரம் கிட்டும்.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க