இன்று மகாளய பட்சம் ஆரம்பம்..! | Today magalaya patcham started

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (25/09/2018)

கடைசி தொடர்பு:07:00 (25/09/2018)

இன்று மகாளய பட்சம் ஆரம்பம்..!

மகாளய அமாவாசையன்று புனிதத் தலங்களிலோ அல்லது அருகில் இருக்கும் கோயிலுக்கோ சென்று மறைந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும்.

முன்னோர் வழிபாடு என்பது நம் ஒவ்வொருவருக்கும் விதிக்கப்பட்ட கடமையாகும். ஒவ்வொரு அமாவாசையன்றும் நம் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வழிபடவேண்டும். முடியாதவர்கள் ஆடி அமாவாசை, புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை மற்றும் தை அமாவாசை ஆகிய நாள்களில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்கவேண்டும். ஆடி அமாவாசையன்று நம் முன்னோர்கள் பித்ருலோகத்திலிருந்து பூமிக்கு வருவதால் அன்றைய தினமும், மகாளயபட்சம் தொடங்கும் நாளில் அவர்கள் பூமியை அடைவதால் அன்று முதல் மகாளய அமாவாசை வரையும், பின்னர் அவர்கள் பித்ருலோகத்துக்குச் செல்லும் தை அமாவாசையன்றும் தர்ப்பணம் கொடுக்கவேண்டியது அவசியம்.

மகாளய பட்சம்

மகாளய அமாவாசைக்கு முந்திய 15 தினங்கள் மகாளயபட்சம் என்று அழைக்கப்படும். புரட்டாசி மாதம் பிரதமை தொடங்கி, மகாளய அமாவாசை முடிய உள்ள தினங்கள் மகாளயபட்ச காலமாகும். இந்த நாள்களில் நம் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து அவர்களை வழிபடவேண்டும். அதன் மூலம் நமக்கும் நம் சந்ததிக்கும் வளமான வாழ்க்கை அமையும். 

மற்ற நாள்களில் தர்ப்பணம் கொடுக்க முடியவில்லை என்றாலும், மகாளய அமாவாசையன்று புனிதத் தலங்களிலோ அல்லது அருகில் இருக்கும் கோயிலுக்கோ சென்று மறைந்த நம் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்கவேண்டும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close