பொதுமக்கள் வரிசையில் சுவாமி தரிசனம் செய்த வெங்கைய நாயுடு! | Vice-President Venkaiah Naidu took darsan at Tirupati

வெளியிடப்பட்ட நேரம்: 16:25 (25/09/2018)

கடைசி தொடர்பு:16:25 (25/09/2018)

பொதுமக்கள் வரிசையில் சுவாமி தரிசனம் செய்த வெங்கைய நாயுடு!

திருமலை திருப்பதிக்கு வேங்கடேசப் பெருமாளை சுவாமி தரிசனம் செய்வதற்காகத் துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு, இன்று 25-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) திருப்பதிக்கு வந்தார். இதேபோல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தன் குடும்பத்தினருடன் திருமலைக்கு வந்து இன்று சுவாமி தரிசனம் செய்தார்.

வெங்கையா நாயுடு

வழக்கமாக வி.ஐ.பி-க்கள் வரும்போது புரோட்டாக்கால் காரணமாக அவர்களை மகாதுவாரம் வழியாக சுவாமிதரிசனம் செய்ய வழி அனுப்பி வைப்பார்கள். ஆனால், துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு பொதுமக்கள் சர்வ தரிசனம் செய்யும் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் வழியாக நடந்து வந்து சுவாமி தரிசனம் செய்தார். 

எடப்பாடி பழனிச்சாமி

பாதுகாப்பு கருதி மக்களோடு மக்களாக வரவில்லையென்றபோதிலும் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் வழியாக வந்தது பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்தது. அப்போது அவர் தன் பால்யகால நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். அதன் பிறகு, அவர் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் வழியில்

அப்போது அவர், ``திருமலை திருப்பதிக்கு சாதாரண மக்களுடன் மக்களாக நான் என்னுடைய சிறிய வயது முதல் என் குடும்பத்தினருடன் வந்து சுவாமிதரிசனம் செய்திருக்கிறேன். வரும்போதெல்லாம் என் மனத்தில் புத்துணர்வும் புதிய சக்தியும் உற்சாகமும் பிறக்கும். புதிய புதிய பொறுப்புகளும் எனக்குக் கூடிக்கொண்டே போகும். ஆனால், அவற்றையெல்லாம் வழிநடத்த மலையப்ப சுவாமியே எனக்குத் துணையிருப்பார். இப்போதும் பெருமாளுக்கு நன்றி சொல்லவே நான் என் குடும்பத்தினருடன் வந்தேன்'' என்று கூறினார்.

முன்னதாக, அவருக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி, அனில்குமார் சிங்கால் மற்றும் துணை நிர்வாக அதிகாரி சீனிவாசராவ் ஆகியோர் கோயில் நுழைவாயில் (மகா துவாரம்) அருகே வரவேற்றனர். பிறகு, அவர் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு வசந்த மண்டபத்தில் கோயில் பிரசாதம், லட்டு மற்றும் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி வெளியிடப்படும் காலண்டர், டயரி ஆகியவை வழங்கப்பட்டன. 
     
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க