`கருத்துச் சொல்லும் நிலையில் இல்லை!' - சபரிமலை தலைமைத் தந்திரி | Supreme Court allows women of all age groups to enter Sabarimala temple

வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (28/09/2018)

கடைசி தொடர்பு:14:20 (28/09/2018)

`கருத்துச் சொல்லும் நிலையில் இல்லை!' - சபரிமலை தலைமைத் தந்திரி

''கோயில் வழிபாடுகளில் பெண்களுக்குப் பாகுபாடு காட்டக் கூடாது. பெண்கள், ஆண்களுக்கு நிகரானவர்கள். வழிபாடு நடத்த அவர்களுக்கு அனுமதி மறுப்பது அரசியல் சாசனம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும்`` என்று  சபரிமலையில் பெண்கள் வழிபடுவது தொடர்பான வழக்கில், 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்திருக்கிறது. 

சபரிமலை

சபரிமலையில், 10 முதல் 50 வயதுடைய பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கு, நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில், ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன  அமர்வுக்கு கடந்த ஜூலை மாத இறுதி வாரத்தில் விசாரணைக்கு வந்தது.  எட்டு நாள்கள் வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைத்தனர். இந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.             `` சபரிமலையில், அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்க வேண்டும்'' என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருக்கிறது.

இது தொடர்பாக சபரிமலை கோயில் தலைமைத் தந்திரி மகேஷ் மோகனருவைத் தொடர்பு கொண்டோம், `` தற்போது எந்தக் கருத்தும் சொல்ல முடியாது. கருத்து சொல்லும் நிலையிலும் இல்லை'' என இணைப்பைத் துண்டித்துக்கொண்டார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close