"சபரிமலை தந்திரிகள் பதவி விலகுகிறார்களா?" - தலைமைத் தந்திரி மகேஷ் மோகனரு பதில் | sabarimala temple case in supreme court

வெளியிடப்பட்ட நேரம்: 15:05 (03/10/2018)

கடைசி தொடர்பு:15:05 (03/10/2018)

"சபரிமலை தந்திரிகள் பதவி விலகுகிறார்களா?" - தலைமைத் தந்திரி மகேஷ் மோகனரு பதில்

சபரிமலை தீர்ப்பு வெளியான பின்னர் ஏராளமான தகவல்கள் வாட்ஸ் -அப்பில் உலா வருகின்றன. தந்திரிகள் கூட்டாகப் பதவி விலகுவதாகவும், பந்தள அரண்மனையின் சார்பாக ஆபரணங்கள் தர மறுப்பதாகவும் வந்த செய்தியும் அவற்றில் ஒன்று. 

``ந்திரிகள் எல்லோரும் கூட்டாகப் பதவி விலகுவதாக வந்த செய்தி உண்மையல்ல`` எனச் சபரிமலை தலைமைத் தந்திரி மகேஷ் மோகனரு தெரிவித்துள்ளார்.

ஐயப்பன் கோயில்

`10 வயது முதல் 50 வயது வரையுள்ள பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரமுடியாது’ என்ற நடைமுறையை நீக்கி, `அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம்’ என உச்ச நீதிமன்றம் கடந்த 28 - ம் தேதி தீர்ப்பளித்தது. இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பு எனச் சமூக செயற்பாட்டாளர்களும், பல்வேறு அமைப்பினைச் சேர்ந்தவர்களும் வரவேற்றனர். அதேசமயம், இது பழங்காலமாகப் பின்பற்றிவரும் மரபை மீறும் செயல் என எதிர்ப்பும் கிளம்பியது.

சபரிமலை

சபரிமலை தீர்ப்பு வெளியான பின்னர் ஏராளமான தகவல்கள் வாட்ஸ் -அப்பில் உலா வருகின்றன. தந்திரிகள் கூட்டாகப் பதவி விலகுவதாகவும், பந்தள அரண்மனையின் சார்பாக ஆபரணங்கள் தர மறுப்பதாகவும் வந்த செய்தியும் அவற்றில் ஒன்று. இதுகுறித்து சபரிமலை தலைமைத் தந்திரி மகேஷ் மோகனருவைத் தொடர்பு கொண்டோம்,

``கோயிலின் விதியை மீறுவதால், நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இன்னும் பல போராட்டங்கள் நடக்கவிருக்கின்றன. ஆனால், தந்திரிகள் பதவி விலகுவதாக வந்த கருத்துகள் உண்மையல்ல. ஆபரணப் பெட்டியைத் தரமாட்டோம் எனப் பந்தள அரண்மனை நிர்வாகம் தெரிவித்ததாக வெளியாகும் கருத்திலும் உண்மையில்லை. இரண்டு கருத்துகளுமே வதந்திதான்`` என்றார் அவர்.  

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close