வெளியிடப்பட்ட நேரம்: 19:49 (03/10/2018)

கடைசி தொடர்பு:19:49 (03/10/2018)

நாளை குருப்பெயர்ச்சி... சிறப்பு பூஜைகளுக்குத் தயாராகும் சிவாலயங்கள்

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி, நிகழும் விளம்பி வருடம் 04.10.2018 (நாளை) குருப்பெயர்ச்சி நிகழவிருக்கிறது. குரு பகவான்,  துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார். குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, அனைத்து சிவாலயங்களிலும் குருவுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் பரிகார ஹோமங்கள் நடத்தப்பட இருக்கின்றன.

 

குருப்பெயர்ச்சி


புகழ், பதவி, அந்தஸ்து, திருமணம், புத்திர பாக்கியம் என ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் முக்கிய அம்சங்களைத் தீர்மானிப்பதில் குரு பகவானுக்கு முக்கியப் பங்குண்டு.  'குரு பார்க்க கோடி நன்மை' என்று கூறுகிறார்கள். குருவின் பார்வை உச்சத்தில் இருக்கும் ஒருவன், வாழ்க்கையில் அனைத்து இன்பங்களையும் பெறுவான்.

ஆங்கீரச முனிவருக்கும், வசுதாவுக்கும் பிறந்த பிள்ளைகளில் ஒருவர் குரு பகவான். அறிவு, வித்யை, ஞானம் ஆகியவற்றுக்கு இவரே காரகத்துவம் வகிக்கிறார். இவரை 'பிரகஸ்பதி' என்றும் அழைப்பார்கள். தேவர்கள் அனைவருக்கும் குருவாகத் திகழ்வதால், 'தேவகுரு' என்றும் அழைப்பார்கள். நவகிரகங்களில் முழு சுபராகத் திகழ்கிறார் குரு.

குருப்பெயர்ச்சி

குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, நாளை அனைத்து சிவாலயங்கள் மற்றும் குருபகவான் தலங்களில் சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் நடக்கின்றன. குறிப்பாக, மயிலாடுதுறை மயூரநாதசுவாமி திருக்கோயில், திருவலிதாயம், சாட்சி நாதேஸ்வரர் கோயில், திருப்புறம்பியம், குருவித்துறை  குருபகவான் கோயில், தக்கோலம் ஜலநாதீசுவரர் கோயில், திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயில், திருவேங்கை வாசல் போன்ற குருஸ்தலங்களில் சிறப்பு யாகங்கள் மற்றும் பரிகார பூஜைகள் நடைபெற இருக்கின்றன. குருபகவானுக்கு உரிய மஞ்சள் ஆடை உடுத்தி,  கோயில்களுக்குச் சென்று குருபகவானின் அருளைப் பெறலாம்.  

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க