வெளியிடப்பட்ட நேரம்: 09:33 (04/10/2018)

கடைசி தொடர்பு:10:39 (04/10/2018)

இன்று குருப்பெயர்ச்சி... பரிகாரம் செய்யவேண்டிய ராசிக்காரர்கள் யார் யார்?

இன்று இரவு குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

இன்று குருப்பெயர்ச்சி... பரிகாரம் செய்யவேண்டிய ராசிக்காரர்கள் யார் யார்?

வகிரகங்களில் ஒருவரான குருபகவானின் பெயர்ச்சி இன்று நடைபெற இருக்கிறது. வியாழன் எனும் வானியல் கிரகமே ஜோதிட சாஸ்திரத்தில் குரு. பிரகஸ்பதி, தனகாரகன், புத்திரகாரகன், லோகபூஜ்யர், வாகீசர், பீதாம்பரர், பொன்னன் என்றெல்லாம் குரு பகவானைச் சிறப்பித்துச் சொல்வார்கள். இவர் தேவர்களின் குரு, சகல சாஸ்திரங்களும் அறிந்தவர், நவகிரகங்களில் சக்தி வாய்ந்தவர், முழுமையான சுபகிரகம் இவர். எப்போதும் நன்மை செய்பவர், எப்போதும் மற்றவர்களுக்கு  உதவக்கூடியவர் என்று ஜோதிடம் இவரைப் பலவாறாகப் போற்றும்..

குருப்பெயர்ச்சி

நீர்த்தன்மை வாய்ந்த கிரகமான குரு பகவான், புனித நூல்களையும், மேதைத் தன்மையையும், நல்ல பண்புகளையும் குறிப்பவர். செல்வம், அதிர்ஷ்டம், புகழ், பக்தி, மந்திர ஞானம், ஆன்மிக நாட்டம், நல்லொழுக்கம், தியானம், தர்மம், குழந்தைகள், நீதிபதிகள், அமைச்சர்கள், வழக்கறிஞர்கள், மதம் மற்றும் அரசியலில் தலைமைப் பதவியில் இருப்பவர்களை இவரே ஆள்கிறார்.

தீர்க்க ஆயுள், வாக்குவன்மை, கல்வியில் மேன்மை, மனதுக்கு உகந்த உத்தியோகம் மற்றும் தொழில், திருமண யோகம் ஆகிய பேறுகளுக்கு குருவின் திருவருள் அவசியம் தேவை.

தனுசு, மீனம் ஆகிய உபயராசிகளின் அதிபதி இவர். சூரியனை,  'ஆத்மகாரகன்' என்போம். அந்த ஆத்மாவின் ஒளி, ஜீவன் என்றெல்லாம் கூறப்படுவது குருவே! இவர் லக்னம், கேந்திரம், திரிகோணம் ஆகிய இடங்களில் நற்பலன்களை அள்ளித் தருகிறார்.

ஒருவரது ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்தில் இருந்து 1, 4, 7, 10 - ல் குரு இருக்கும் அமைப்பை 'கஜகேசரி யோகம்' என்பர். இந்த யோகம் உள்ளவர்களுக்கு, மற்ற கிரகங்களால் ஏற்படும் தோஷங்களால் பாதிப்புகள் இல்லை.சந்திரனும் குருவும் சேர்ந்திருந்தால், குருச்சந்திர யோகம். இதனால் பேரும் புகழும் தேடி வரும். செவ்வாயும் குருவும் இணைந்து நின்றால், குருமங்கள யோகம். இதன் பலனாக நிலபுலன்கள், வண்டி வாகன சேர்க்கை உண்டாகும்.

தட்சிணாமூர்த்தி

ஜாதக ரீதியாக குரு பகவான் பாதிக்கப்பட்டால், நரம்புக் கோளாறுகள், தோல் மற்றும் வயிற்று நோய்கள், மூட்டு வலி, இதய நோய்கள், ரத்தம் அசுத்தம் அடைதல், கவலையும் பதற்றமும் தோன்றுதல் ஆகிய பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும்.

ஜாதகத்தில் குருபலம் குறைந்திருப்பவர்கள், வியாழன்தோறும் விரதம் அனுஷ்டித்து, அருகில் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று, குருபகவானை வழிபட்டு வரலாம். குரு பகவான் சிறப்பாக அருளும் தலங்கள், அவர் வழிபட்டுப் பேறுபெற்ற ஆலயங்கள் ஆகியவற்றுக்குச் சென்று தரிசித்து நன்மை பெறலாம். அது மட்டுமின்றி, குருவின் அதிதேவதைகளான பிரம்மா, தட்சிணாமூர்த்தி ஆகியோர் அருள்பாலிக்கும் தலங்களைத் தரிசிப்பதும் நலம் பயக்கும்.

குரு பகவான்

குருபகவான் ஒரு ராசியில் ஒரு வருட காலம் சஞ்சரிப்பார். தான் இருக்கும் இடத்தைவிட பார்க்கும் இடத்துக்கு நன்மை செய்பவர் குருபகவான். அதன் காரணமாகத்தான், 'குரு பார்க்க கோடி நன்மை' என்கிறது ஜோதிட சாஸ்திரம். குருபகவான், தான் இருக்கும் இடத்திலிருந்து 5, 7, 9 ஆகிய இடங்களைப் பார்ப்பார். கோசார ரீதியாக ஒருவருக்கு குருப்பெயர்ச்சி பாதகமாக இருந்தாலும், அவருடைய பார்வை படும் இடங்களைப் பொறுத்து பாதிப்புகள் குறையும். இது குருபகவானின் பார்வைக்கு உள்ள தனிச் சிறப்பாகும். 

இன்று இரவு குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அடுத்த வருடம் அக்டோபர் மாதம் 28-ம் தேதி வரை அவர் விருச்சிகத்தில் இருந்துகொண்டு பலன்களைத் தரவிருக்கிறார்.

2018-2019 ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் ஏற்படும்..? முழுமையான குருபெயர்ச்சி பலன்களை தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...

இந்த குருப்பெயர்ச்சினால் ரிஷபம், கடகம், துலாம், மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு குருபகவான் பல நற்பலன்களைத் தரவிருக்கிறார். மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் குரு பகவானுக்கு பரிகாரம் செய்துகொள்வதன் மூலம் பாதிப்புகளிலிருந்து நிவாரணம் பெறலாம்.

குரு

இன்று குருவுக்கு உரிய வியாழக்கிழமை என்பதால் விரதம்  இருப்பதும் மிகவும் நல்லது. காலையில் நீராடி, பூஜையறையில் தீபமேற்றி, குருவுக்கு உரிய ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்து வழிபடலாம். உணவைத் தவிர்த்து பால் மட்டும் எடுத்துக்கொள்ளலாம். அன்று இரவு அருகிலுள்ள கோயிலுக்குச் சென்று, குருபகவானுக்கு உகந்த மஞ்சள் வஸ்திரம் மற்றும் மஞ்சள் நிற மலர்கள் சமர்ப்பித்து, நெய்தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்து வழிபட்டால், குருபகவானின் திருவருள் பெற்று, குருப்பெயர்ச்சியினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து விடுபடலாம். மறுநாள் காலை மறுபடியும் பூஜையறையில் தீபமேற்றி, குருபகவானை வழிபட்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க