வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (04/10/2018)

கடைசி தொடர்பு:14:40 (04/10/2018)

திருப்பதியில் 10-ம் தேதி தொடங்குகிறது நவராத்திரி பிரம்மோற்சவ விழா!

அக்டோபர் 10-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் மலையப்ப சுவாமி காலை, மாலை இரண்டு வேளைகளிலும் திருமலையின் நான்குமாட வீதிகளில் ஊர்வலம் வருவார்...

திருப்பதி வேங்கடேசப்பெருமாள் கோயிலில் ஆகஸ்ட் 16-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது.  வருடாந்திர பிரம்மோற்சவம் செப்டம்பர் 13-ம் தேதி தொடங்கி 9 நாள்கள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள முடியாத பக்தர்களுக்கு வசதியாக இந்த ஆண்டு திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. 

அக்டோபர் 10-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில்  மலையப்ப சுவாமி காலை, மாலை இரண்டு வேளைகளிலும் திருமலையின் நான்கு மாட வீதிகளில் ஊர்வலம் வருவார். 

திருப்பதி

பிரம்மோற்சவத்தில் பக்தர்கள் பெருமளவில் கலந்துகொள்வார்கள் என்பதால், விழா நடைபெறும் நாள்களில் அனைத்து வகையான சிறப்பு  தரிசனங்கள், ஆர்ஜித சேவைகள், மூத்தக் குடிமக்கள், கைக்குழந்தைகளுடன் வருபவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான சிறப்பு தரிசன சலுகைகள் வி.ஐ.பி. தரிசனம், பரிந்துரை மற்றும் சிபாரிசுக் கடிதங்களின் அடிப்படையில் வருபவர்களுக்கும் சிறப்பு தரிசன அனுமதி உட்பட அனைத்தையும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்துசெய்துள்ளது. 

பிரம்மோற்சவ விழா நிகழ்ச்சிகள் விவரம்:

10-10-2018 -  இரவு 7 மணிக்கு பெரிய சேஷ வாகன வீதி உலா

11-10-2018 - காலை 9 மணிக்கு சிறிய சேஷ வாகன வீதி உலா,

இரவு 7 மணிக்கு ஹம்ச (அன்னப்பறவை) வாகன வீதி உலா

12-10-2018 - காலை 9 மணிக்கு சிம்ம வாகன வீதி உலா,

 இரவு 7 மணிக்கு முத்துப் பந்தல் நிகழ்ச்சி

13-10-2018 - காலை 9 மணிக்கு கற்பக விருட்ச வாகன வீதி உலா,

இரவு 9  மணிக்கு சர்வ பூபால வாகன வீதி உலா

14-10-2018 - காலை 9 மணிக்கு  மோகினி அவதாரம் பல்லக்கு வாகன வீதி உலா, இரவு 7 மணிக்கு கருட சேவை

15-10-2018 காலை 9 மணிக்கு அனுமன் வாகன வீதி உலா, மாலை 5 மணியளவில் தங்கத் தேரோட்டம், இரவு யானை வாகன வீதிஉலா, 

16-10-2018  காலை 9 மணிக்கு  சூர்ய பிரபை வாகன வீதி உலா, இரவு  7 மணிக்கு சந்திர பிரபை வாகன வீதி உலா

17-10-2018 காலை 7 மணிக்கு தேரோட்டம், இரவு  7 மணிக்கு குதிரை வாகன வீதி உலா, 

18-10-2018  காலை 7 மணிக்கு சக்கர ஸ்நானம், இரவு 7 மணிக்கு கொடி இறக்கத்துடன் விழா நிறைவு.

பிரம்மோற்சவம் நடைபெறும் இந்த ஒன்பது நாள்களும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்கிறார்கள். இதற்காக விரிவான ஏற்பாடுகளைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க