வள்ளலார் அவதரித்த தினம் இன்று! | Vallalaar birth day today

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (05/10/2018)

கடைசி தொடர்பு:08:17 (05/10/2018)

வள்ளலார் அவதரித்த தினம் இன்று!

வள்ளலார் சுவாமிகள் அவதரித்த தினத்தில் அவரைப் போற்றி வழிபடுவோம்...

`வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்னும் ஜீவகாருண்ய தத்துவத்தை உலகத்துக்கே வழங்கிய வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் அவதரித்த தினம் இன்று (அக்டோபர் - 5 ).

ராமலிங்க அடிகளார்

 

கடலூர் மாவட்டம், மருதூர் கிராமம்தான் ராமலிங்க அடிகளார் பிறந்த ஊர். இறைவனைத் தேடி ஆன்ம வேட்கையுடன் பல ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டவர் இறுதியில் இறைவன் 'ஒளி வடிவமானவன்' எனும் பேருண்மையைக் கண்டறிந்தார். தான் உணர்ந்த பேருண்மையை உலக மக்களிடையே கொண்டு செல்லவேண்டி, 'சத்திய ஞான சபை' எனும் சன்மார்க்க சபையைத் தோற்றுவித்தார். ஏழை எளிய மக்களின் பசிப்பிணியைப் போக்குவதே ஆகச் சிறந்த இறைப்பணி என்பதில் எள்முனையளவும் மாறாத கருத்தைக் கொண்டிருந்தார் வள்ளலார். தான் உருவாக்கிய சத்திய ஞான சபைக்கு அருகிலேயே 'தர்ம சாலை'யை அமைத்து  ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்தார்.

வள்ளலார்


'எங்கெங்கு இருந்து ஏதெது வேண்டினும்
அங்கங்கு இருந்து அருள் அருட்பெருஞ்ஜோதி' 

என்று அனைவருக்கும் அருள்புரியும்படி பரம்பொருளை வேண்டிய வள்ளலார் சுவாமிகள் அவதரித்த தினத்தில் அவரைப் போற்றி வழிபடுவோம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close