வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (06/10/2018)

கடைசி தொடர்பு:21:20 (06/10/2018)

தாமிரபரணி மகா புஷ்கரம்... நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

இந்தியாவின் புண்ணிய நதிகளில் ஒன்றான தாமிரபரணி நதியில், இந்த வருடம் அக்டோபர் மாதம் 11-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் விழாவான 'மகா புஷ்கரம்’ கொண்டாடப்படவிருக்கிறது. அதையொட்டி தென்னக ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்திருக்கிறது. 

மகா புஷ்கரம்

தாமிரபரணி புஷ்கரம் சிறப்பு ரயில்கள் பற்றிய விவரங்கள்...

தாம்பரம் - திருநெல்வேலி இடையே அக்டோபர் 11 மற்றும் 13-ம் தேதி மாலை 5.15 மணி, திருநெல்வேலி  -  தாம்பரம் இடையே அக்டோபர் 12 மற்றும் 14 ஆகிய தேதிகளில் பகல் 2 மணிக்கும், அக்டோபர் 16-ம் தேதி மாலை 6.15 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கின்றன. 

தாம்பரம் -  திருநெல்வேலி இடையே அக்டோபர் 15-ம் தேதி இரவு 7.15 மணிக்கும், அக்டோபர் 14-ம் தேதி மாலை 6.15 மணிக்கும், அக்டோபர் 17-ம் தேதி பகல் 3 மணிக்கும், அக்டோபர் 6-ம் தேதி மாலை 5.15 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். 

தென்னக ரயில்வே அறிவித்திருக்கும் இந்தச் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை (7.10.2018) காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.

தாமிரபரணி புஷ்கரத்துக்குச் செல்கிறவர்கள் பயன்பெறுங்கள்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க