மகாளய அமாவாசை: முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரத்தில் அலைமோதிய கூட்டம் | short news about ramesvaram Mahalaya amaavasai

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (08/10/2018)

கடைசி தொடர்பு:19:00 (08/10/2018)

மகாளய அமாவாசை: முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரத்தில் அலைமோதிய கூட்டம்

மாதந்தோறும் வரும் அமாவாசை தினங்களில் விரதம் இருந்து தங்களது முன்னோர்கள் நினைவாக வழிபாடு நடத்துவது இந்துக்கள் வழக்கம். இவற்றில் ஆடி, தை, மாசி மற்றும் புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசைகள் சிறப்பானதாகும். இதில் புரட்டாசி மாத அமாவாசை மட்டும் மகாளய அமாவாசை என்று சிறப்பிக்கப்படுகிறது.

மகாளய அமாவாசை

மகாளய அமாவாசையை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் குளம், ஆறு, கடல் ஆகியவற்றில் நீராடி மறைந்த தமது முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர். ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் புனித நீராடி இறந்துபோன தங்களது முன்னோர்கள் நினைவாகத் தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்துவது வழக்கம். அதன்படி இந்த வருடமும் ராமேஸ்வரத்தில் பக்தர்கள் கூடி தமது முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்து ராமநாதசுவாமியைத் தரிசித்து வணங்கினார்கள்.

அமாவாசை

இன்று மஹாளய அமாவாசையை முன்னிட்டு நேற்றிரவு முதலே பக்தர்கள் ராமேஸ்வரத்தில் பேருந்து, ரயில் மூலம் குவியத்தொடங்கினார்கள். அதனால் காலை முதலே ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் பக்தர்கள் கூட்டத்தினால் நிரம்பி வழிந்தது. அக்னி தீர்த்தக் கரையில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்து புனித நீராடினர்.பிறகு  22 புனித தீர்த்தங்களில் நீராடி ராமநாதசுவாமி மற்றும் அம்பாளை வழிபடலானார்கள்.

ஆடி அமாவாசை, தை அமாவாசைகளில் தங்களின் முன்னோர்களை வழிபடத் தவறியவர்கள் இந்த மஹாளய அமாவாசையன்று தங்கள் முன்னோர்களை வணங்கினால், முன்னோர்களின் பாவங்கள் அனைத்தும் விலகி ஆன்மா சாந்தி அடையும் என்பது ஐதீகம். அதனால், புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே ராமேஸ்வரத்தில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து புனித நீராடிச் செல்கின்றனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close