பாளையங்கோட்டையில் களைகட்டும் தசரா சூரசம்ஹாரம் திருவிழா! | surasamharam festival at Palaiyankottai

வெளியிடப்பட்ட நேரம்: 19:05 (09/10/2018)

கடைசி தொடர்பு:19:05 (09/10/2018)

பாளையங்கோட்டையில் களைகட்டும் தசரா சூரசம்ஹாரம் திருவிழா!

மைசூர், குலசை ஆகிய ஊர்களில் தசரா விழா கோலாகலமாக நடைபெறுவது நமக்குத் தெரியும். அதற்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் மற்றொரு ஊரிலும் தசரா சூரசம்ஹாரம் திருவிழா மிகவும் விமர்சையாக நடைபெறுவது உங்களுக்குத் தெரியுமா?

சூரசம்ஹாரம்

திருநெல்வேலி, பாளையங்கோட்டையிலும் தசரா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. தசராவை முன்னிட்டு நேற்று காலை பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோயிலில் கொடியேற்றம் நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 9 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து காலை 10 மணிக்கு கொடியேற்றும் வைபவம் நடைபெற்றது. பகல் 11.30 மணிக்கு காப்பு கட்டப்பட்டது. மாலை தாமிரபரணி ஆற்றிலிருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டது.

விஸ்வகர்ம உச்சி மாகாளி, வடக்கு உச்சி மாகாளி, முப்பிடாதி அம்மன், கிழக்கு உச்சி மாகாளி, தூத்துவாரி அம்மன், தெற்கு முத்தாரம்மன், வடக்கு முத்தாரம்மன், யாதவ உச்சி மாகாளி, புதுப்பேட்டைத் தெரு உலகம்மன் ஆகிய கோயில்களிலும் சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்றன. இரவு அனைத்து கோயில்களிலும் அம்மன்கள் சப்பரத்தில் எழுந்தருளி காட்சி தந்தனர்.

இன்று காலை துர்கா பூஜை விமர்சையாக நடைபெற்றது. இரவு ஆயிரத்தம்மன் கோயிலில், அனைத்து ஆலயங்களில் இருந்தும் அம்மன்கள் சப்பரத்தில் எழுந்தருளும் வைபவம் நடைபெற இருக்கிறது.


[X] Close

[X] Close