நெல்லையிலிருந்து சிவாஜி வீட்டுக்கு ரயிலில் வந்த தாமிரபரணி தண்ணீர்! | Thamirabarani River water special pooja held in sivaji house

வெளியிடப்பட்ட நேரம்: 15:05 (11/10/2018)

கடைசி தொடர்பு:15:05 (11/10/2018)

நெல்லையிலிருந்து சிவாஜி வீட்டுக்கு ரயிலில் வந்த தாமிரபரணி தண்ணீர்!

நெல்லையில் தாமிரபரணி புஷ்கர விழா இன்று காலை கோலாகலமாகத் தொடங்கியது. இதையொட்டி நெல்லை விழாக்கோலம் பூண்டுள்ளது. இதற்காக, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

துறவிகள், மடாதிபதிகள் உட்பட  ஏராளமானோர் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து குவிந்துள்ளனர். ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். விழா 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஏற்கெனவே கழிவுகள், குப்பைகள் நிறைந்திருந்ததால் தண்ணீர் மாசடைந்து இருந்தது. புஷ்கரத்துக்காகச் சுத்தம் செய்ததால் தற்போது  தாமிரபரணி நதிப்பகுதி தூய்மையாகக் காட்சியளிக்கிறது. இதனால் பக்தர்கள் உற்சாகமாக நீராடுகிறார்கள். 

புஷ்கர விழா
 

இந்த புஷ்கர விழாவில் கலந்துகொள்ள வந்துள்ளவர்கள் பலரும் தாமிரபரணி நீரை கேன்கள், பாட்டில்களில் வெளியூர்களில் உள்ள உறவினர்களுக்காகக் கொண்டு சென்றனர். நடிகர் சிவாஜி கணேசன் வீட்டுக்குத் தாமிரபரணி தண்ணீரை அவரின் ரசிகர்கள் நெல்லையிலிருந்து ரயிலில் கொண்டு வந்தனர். ஐந்து லிட்டர் பிளாஸ்டிக் கேன்கள் இரண்டில் ரசிகர்கள் லட்சுமணன் மற்றும் முருகேசன் ஆகியோர் இன்று  நடிகர் சிவாஜி கணேசன் வீட்டுக்குக் கொண்டு சென்று சிவாஜி குடும்பத்தினரிடம் அளித்தார்கள். அங்கு சிவாச்சாரியார்களை வைத்து தாமிரபரணி தண்ணீருக்குச் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் சிவாஜி குடும்பத்தினர் அனைவரும் கலந்துகொண்டனர்.


[X] Close

[X] Close