குருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது? #Astrology | Guru transition benefits for people expecting marriage

வெளியிடப்பட்ட நேரம்: 08:12 (16/10/2018)

கடைசி தொடர்பு:08:12 (16/10/2018)

குருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது? #Astrology

செவ்வாயின் வீடான விருச்சிக ராசியில் குரு வந்து அமர்வதால் காலபுருஷ ராசிக்கு 8-ம் ராசியில் குரு அமர்வதால் எந்தெந்த ராசியினர் மற்றும் நட்சத்திரக்காரர்களுக்கு திருமணம் கைகூடிவரும் என்பது பற்றி பார்ப்போம்.

குருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது? #Astrology

ஜோதிடரிடம் போய் ஜாதகத்தைக்கொடுத்து திருமணப் பேச்சுவார்த்தையை எடுத்தாலே, 'பொண்ணுக்கோ, பையனுக்கோ இன்னும் குருபலம் வரவில்லையே! வந்ததும் ஜாதகத்தை எடுத்துக்கிட்டு வாங்க' என்று சொல்வார். அப்படிப்பட்ட குருபலம் இந்தக் குருப்பெயர்ச்சியால் இப்போது உங்களுக்கு வந்துவிட்டதா?.

குருப்பெயர்ச்சி

இதுபற்றி ஜோதிட நிபுணர் ஆஸ்ட்ரோ கிருஷ்ணனிடம் கேட்டோம்.  

"ஆண்டுக்கொருமுறை நடக்கும் குருப்பெயர்ச்சி இந்த ஆண்டு கடந்த 4.10.18 அன்று அதாவது புரட்டாசி மாதம் 18-ம் தேதி வியாழக்கிழமை இரவு 10 மணிக்கு சர வீடான துலாம் ராசியிலிருந்து ஸ்திர வீடான விருச்சிகம் ராசிக்குள் சென்று அமர்ந்தார். இந்த விருச்சிக ராசியில் 4.10.18 முதல் 28.10.19 வரை இருந்து மக்களின் வாழ்வில் பல மாற்றங்களை நிகழ்த்த இருக்கிறார். குறிப்பாக, திருமணத்தை எதிர்நோக்கியிருக்கும் பலரது வாழ்வில் ஒளியேற்றப் போகிறார்.

இதில் 13.3.19 முதல் 9.4.19 வரை அதிசாரமாகவும், 10.4.19 முதல் 18.5.19 வரை வக்ர கதியிலும் தன் சொந்த வீடான தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார்.

குருபகவான் தனது இந்தப் பெயர்ச்சியின்போது ஏறக்குறைய 243 நாள்களுக்குக் கேட்டை நட்சத்திரத்திலேயே பயணம் செய்கிறார்.

திருமணம்

செவ்வாயின் வீடான விருச்சிக ராசியில் குரு வந்து அமர்வதால் காலபுருஷ ராசிக்கு 8-ம் ராசியில் குரு அமர்வதால் எந்தெந்த ராசியினர் மற்றும் நட்சத்திரக்காரர்களுக்கு திருமணம் கைகூடிவரும் என்பது பற்றி பார்ப்போம்.

''குரு பகவானுக்கு உரிய ராசிகள் தனுசு, மீனம் ஆகிய ராசிகள். இதில் தனுசு ராசிக்கு 12 - வது வீடான விருச்சிக ராசிக்கு வந்திருக்கிறார். விருச்சிகத்திலிருந்து 7 -ம் பார்வையாக ரிஷபராசியைப் பார்க்கிறார். இதனால், ரிஷப ராசியில் சுக்கிரன், சந்திரன் இருந்தால் அவர்களுக்கு குருபலம் வந்து விட்டது. களத்திரகாரகன் சுக்கிரன், குடும்பக்காரகன் சந்திரன் இவர்கள் மற்ற ராசிகளில் இருந்து, குரு பார்வை செய்தாலும் திருமணம் நடைபெறும்.

ஆஸ்ட்ரோ கிருஷணன்

ஒருவருடைய ஜனன ஜாதகத்தில் மீனம், ரிஷபம், கடகம் ஆகிய வீடுகளில் குரு பகவான் இருந்தால், அவருக்குத் திருமணம் நடைபெறும். அதாவது, ஜனன ஜாதகத்தில் இருக்கும் குருவை கோசாரத்தில் இருக்கும் குரு பார்த்தால் அவர்களுக்குத் திருமணம் நடக்கும். அதாவது, குரு மீனத்தை 5 - ம் பார்வையாகவும் ரிஷபத்தை 7-ம் பார்வையாகவும் கடகத்தை 9-ம் பார்வையாகவும் பார்க்கிறார். 

எவருடைய ஜாதகமாக இருந்தாலும், லக்னத்திலிருந்து 7 -ம் வீட்டுக்கு உடையவனை குரு பார்த்தாலும் அவர்களுக்கு இந்த ஓராண்டுக்குள் திருமணம் நடக்கும். உதாரணமாக, சிம்ம லக்னக்காரருக்கு 7-ம் வீட்டுக்கு உடையவர் சனி. சிம்ம லக்னக்காரருக்கு சனி மீனத்திலோ, ரிஷபத்திலோ, கடகத்திலோ இருந்தால் அவர்களுக்குத் திருமண யோகம்தான். 

5-ம் பார்வையாக உத்திரட்டாதி, ரேவதி, 7-ம் பார்வையாக கார்த்திகை, ரோகிணி, 9-ம் பார்வையாகப் பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்களைப் பார்வை செய்வதால், இந்த நட்சத்திரக்காரர்களுக்கு குருபலம் வந்துவிட்டது, திருமணம் செய்யலாம். லக்னத்துக்கு 7 - ம் வீட்டுக்கு உடையவர் விருச்சிகத்திலிருந்தாலும் அவர்களுக்குத்   திருமணம் நடைபெறும். விருச்சிகம், மீனம், கடகம் ஆகியவை ஜல ராசி என்பதால், இவர்களுக்கு நீரைக் கடந்து அதாவது கடல் கடந்து வெளிநாட்டு வாழ்க்கைத் துணை அமையும் வாய்ப்பு அதிகமாக உள்ளது'' என்று கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க