வெளியிடப்பட்ட நேரம்: 16:25 (17/10/2018)

கடைசி தொடர்பு:16:25 (17/10/2018)

காஞ்சி முனிவரின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் அற்புதக் கொலு!

வராத்திரி விழாவின்போது கொலு அமைப்பது சிறப்பானது. இதில் விதவிதமான பொம்மைகளை ஏழு, ஒன்பது என்ற எண்ணிக்கையில் அமைந்த படிகளில் அடுக்கி வைத்திருப்பார்கள். இதில் சற்று வித்தியாசமாக, காஞ்சி மகா பெரியவர் பொம்மைகளை மட்டுமே வைத்து அவரின் பக்தர்களான மயிலாப்பூரைச் சேர்ந்த சுதா பாலுவும் கணேஷ் ஷர்மாவும் கொலு அமைத்துள்ளனர்.

கொலு

சென்னை, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் மகா பெரியவா பொம்மைகளை அழகாக அடுக்கி வைத்து நவராத்திரி விழாவைக் கொண்டாடி வருகிறார்கள்.

“நவராத்திரி விழாவைச் சிறப்பா கொண்டாடுன அந்த மகானின் பெருமைகளை இந்த நவராத்திரியின்போது எல்லாருக்கும் சொல்லணும்னு ஆரம்பிச்சதுதான், 'பெரியவா நவராத்திரி' முழுக்க முழுக்க அவரை முன்னிலைப்படுத்தி இந்தக் கொலு பொம்மைகளை உருவாக்கியிருக்கோம்'' என்ற கணேஷ் சர்மா, தொடர்ந்து “பெண்கள் எந்த இடத்துல மதிக்கப்படறாங்களோ, அந்த இடத்துலதான் தெய்வங்கள் எல்லாமே வந்து அருள் புரியறதா தர்ம சாஸ்திரங்கள் சொல்லுது. பெண்மை, அன்பு, பாசம், தாய்மையைத்தான் கடவுளின் உருவமான அம்பாளா உருவகப்படுத்தியிருக்காங்க. அந்தப் பெண்மையைப் போற்றி கொண்டாடுறதுதான் நவராத்திரி திருவிழா. கல்வி, செல்வம், வீரம் இந்த மூணும்தான் மனுஷனோட வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம். இது மூன்றையும் மனிதர்களுக்கு அளிக்கற பெண் சக்திகளைப் போற்றி வழிபடுறதுதான் நவராத்திரி விழா' என்று மகா பெரியவா அருளியிருக்கிறார். அவரே நவராத்திரி காலங்களில் மூன்று வேளைகளும் அம்பிகைக்கு குங்கும அர்ச்சனை செய்வார். நவராத்திரியின் மகத்துவத்தை விளக்கிய காஞ்சி மகா ஸ்வாமிகளைப் போற்றும் விதமாகத்தான், மகா பெரியவா நவராத்திரி என்று முழுக்க முழுக்க அவருடைய திருவுருவ பொம்மைகளை வைத்து இந்தக் கொலுவை அமைத்திருக்கிறோம். அவரோட சின்ன வயசு படத்துலேருந்து அவரு சமாதி அடைஞ்ச காலம் வரைக்கும் `108 மகா பெரியவா’ங்கற தலைப்புல கொலு பொம்மைகள அடுக்கியிருக்கோம். மக்களோட கலாசாரத்தைப் பற்றி எல்லாரும் தெரிஞ்சிக்கணும்னு கலாசார பொம்மைகளையும் அடுக்கி வச்சிருக்கோம். தினமும் நிறைய பேர்கள் வந்து பார்த்து, கொண்டாடிட்டுப் போறாங்க'' என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

இந்த விழாவைக் கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்த சுதா பாலு நம்மிடம் “இந்த எண்ணம் உதிச்சதே மகாபெரியவாளோட அருள்தான். ஆறு மாசத்துக்கு முன்னாடி, வீட்டுல மகாபெரியவா கொலு பொம்மைய வைக்கலாம்னுதான் யோசிச்சேன். ஆனா, அப்புறம்தான் ஒரு பொது இடத்துல வச்சா நல்லா இருக்குமேன்னு தோணிச்சு. அதனாலதான் பாரதிய வித்யா பவனில் மகா பெரியவா கொலு வச்சிருக்கோம். எல்லாமே மகா பெரியவா அருள்தான்'' என்று சிலிர்ப்புடன் பகிர்ந்துகொண்டார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க