தஞ்சையில் தொடங்கியது ராஜராஜன் சதய விழா! | Rajarajan sadhaya festival started in Tanjore

வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (19/10/2018)

கடைசி தொடர்பு:16:15 (19/10/2018)

தஞ்சையில் தொடங்கியது ராஜராஜன் சதய விழா!

ஞ்சை பெரிய கோயிலில் சோழப் பேரரசன் ராஜராஜனின் 1033 வது ஆண்டு சதய விழா மங்கள இசையுடன் தொடங்கியுள்ளது. விழாக் குழுவின் தலைவர் துரை.திருஞானம் வரவேற்புரை அளிக்க, மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் தலைமை உரையாற்றி விழாவைத் தொடங்கி வைத்திருக்கிறார்கள்.

சதய விழா


பிற்கால சோழர்கள் வம்சத்தில் பொற்கால ஆட்சி செலுத்தியவன் பேரரசன் ராஜராஜ சோழன். ராஜராஜனின் பிறந்த நட்சத்திரம் ஐப்பசி மாதம் வரும் சதய நட்சத்திரம். அதனால் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாத சதய நட்சத்திர தினத்தை ராஜராஜனின் பிறந்த தினமாகத் தஞ்சையில் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த வருடமும் ராஜராஜனின் பிறந்த நட்சத்திரமான ஐப்பசி சதய தினம் அரசு விழாவாக இன்றும் நாளையும் கொண்டாடப்படுகிறது. இதனால் தஞ்சையே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக நாளை சோழப் பேரரசன் ராஜராஜன் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. திருமுறைத் திருவீதி உலாவும் நிகழவிருக்கிறது. இதை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

60 ஆண்டுகள் கழித்து மாமன்னர் ராஜராஜன் சிலை குஜராத்திலிருந்து திரும்பியிருக்கும் நிலையில் இந்த வருடம் சதயத் திருவிழா கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க