வெளியிடப்பட்ட நேரம்: 18:45 (19/10/2018)

கடைசி தொடர்பு:18:45 (19/10/2018)

திருவரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்துக்கு புதிய பீடாதிபதி!

திருவரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்துக்கு புதிய தலைவர்  21 - ம் தேதி பதவி ஏற்கிறார். திருச்சி மாவட்டம், காவிரிக்கரையில் அமைந்திருக்கும் ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும். வைஷ்ணவர்களுக்குக் கோயில் என்றாலே திருவரங்கம்தான். வைணவர்களுக்கு உரிய 108 திவ்ய தேசங்களில் முதலிடம் பெற்றது. ஶ்ரீராமாநுஜர் பல ஆண்டுகள் தங்கி, பெருமாள் கைங்கர்யத்தில் ஈடுபட்ட திருத்தலம். . 

திருவரங்கம்

108 வைஷ்ணவ திவ்ய தேசங்களில் முதலிடம் வகிக்கும் திருவரங்கம் திருத்தலத்தில், ஶ்ரீவைஷ்ணவ வடகலை சம்பிரதாயத்தின்படி வைணவ நெறிகளைப் பரப்பும் தொண்டில், கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டிருக்கும் ஶ்ரீரங்கம் ஶ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்தில் இதுவரை 11 மகான்கள் பீடாதிபதிகளாகப் பொறுப்பேற்று, வைணவம் தழைக்க அரும் தொண்டாற்றியுள்ளனர். 
ஶ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்தின் 11-வது பட்டம் ஜீயர் ஸ்வாமிகளாக இருந்த ஶ்ரீமுஷ்ணம் ஶ்ரீமத் ஆண்டவன் ஶ்ரீரங்க ராமாநுஜ மகாதேசிகன் ஜீயர் ஸ்வாமிகள், திருநாடு அலங்கரித்ததைத் தொடர்ந்து, 12-வது பட்டம் ஜீயர் ஸ்வாமிகளாக, ஶ்ரீமான் யமுனாசார்யார் ஸ்வாமி (11-வது ஜீயர் ஸ்வாமிகளின் திருக்குமாரர் ) ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார். 


ஶ்ரீமுஷ்ணம் ஆண்டவன் அருள்வாக்கின்படி, இந்தப் பாரம்பர்யமிக்க ஆஸ்ரமத்தின் 12 - வது ஆண்டவன் ஸ்வாமிகளாக 21 - ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக்கொள்கிறார். இதற்கான நிகழ்ச்சி,  ஶ்ரீரங்கம் மேலூர் ரோட்டில் அமைந்துள்ள ஶ்ரீரங்கம் ஶ்ரீமத் பெரிய ஆண்டவன் ஆஸ்ரமத்தில், சம்பிரதாய முறைப்படி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. பல பகுதிகளிலிருந்தும் ஆண்டவன் சிஷ்யர்கள் இந்த வைபவத்தில் கலந்துகொண்டு அனுக்ரகம் பெறுவார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க