24.36 லட்சம் லட்டுகள்...16.14 கோடி உண்டியல் வருமானம்! - திருப்பதி பிரம்மோற்சவ அப்டேட் | Tirupati Navarathri Bramorsavam data report

வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (22/10/2018)

கடைசி தொடர்பு:16:59 (22/10/2018)

24.36 லட்சம் லட்டுகள்...16.14 கோடி உண்டியல் வருமானம்! - திருப்பதி பிரம்மோற்சவ அப்டேட்

திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம் கடந்த 10-ம் தேதி தொடங்கி, 18-ம் தேதி வரை நடைபெற்றது.  பிரம்மோற்சவத்தையொட்டி தினமும் காலை மாலை இரண்டு வேளைகளிலும் திருமலையிலிருக்கும் நான்குமாட வீதிகளில் சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. 14-ம் தேதி காலை 9 மணிக்கு மோகினி அவதாரத்தில் சுவாமி வீதி உலா  நிகழ்ச்சியும் இரவு 7 மணிக்குக் கருட சேவையும் நடைபெற்றன. இதில் லட்சக்கணக்கில் பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த நடனம் மற்றும் கூத்துக் கலைஞர்கள் விழாவில் கலந்துகொண்டு கலைநிகழ்ச்சிகளை நடத்தி விழாவை வண்ணமயமாக்கினர். வண்ண விளக்குகளால் திருமலை முழுவதும் அலங்கரிக்கப்பட்டு பூலோக சொர்க்கமாகக் காட்சி அளித்தது. பக்தர்களுக்கு உணவு, குடிநீர் ஆகியவை இலவசமாக வழங்கும் சேவையில் 2,000 பக்தர்கள் ஈடுபட்டனர்.

திருப்பதி பிரம்மோற்சவம்

பிரம்மோற்சவத்தையொட்டி அனைத்து வகையான சிறப்பு தரிசனங்கள், ஆர்ஜித சேவைகள், மூத்தக் குடிமக்கள், கைக்குழந்தைகளுடன் வருபவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தரிசன சலுகைகள் அனைத்தையும் திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்திருந்தது.


இந்த பிரம்மோற்சவத்தின்போது  7 நாள்களில் 7 லட்சத்து 15 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.கடந்த மாதம் நடைபெற்ற `வருடாந்திர பிரம்மோற்சவ'த்தின் போது நடைபெற்ற கருடசேவையில் 85,000 பேர்தான் சுவாமி தரிசனம் செய்திருந்தனர். இந்த `நவராத்திரி பிரம்மோற்சவ'த்தில் 14-ம் தேதி நடைபெற்ற கருடசேவையின்போது ஒரு லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். 24 லட்சத்து 36 ஆயிரம் லட்டுகள் விற்பனையாகி உள்ளன.

மலையப்ப சுவாமியின் உண்டியல் வசூலாக 16 கோடியே 14 லட்சம் ரூபாய்  கிடைத்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close