வெளியிடப்பட்ட நேரம்: 23:15 (24/10/2018)

கடைசி தொடர்பு:23:15 (24/10/2018)

1000 கிலோ அரிசி காய்கறிகளுடன் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம்!

ஐப்பசி மாதத்தில் பவுர்ணமி தினத்தில் சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.அதன் படி இன்று தஞ்சாவூர் பெரியகோயிலில் அன்னாபிஷகேத்தை முன்னிட்டு பெருவுடையாருக்கு 1 டன் அரிசியில் வடிக்கப்பட்ட சாதம் மற்றும் 1 டன் காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருவுடையாரே என கோஷமிட்டபடி வணங்கினர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர் பெரிய கோயில் உலக புகழ் பெற்று விளங்கி வருகிறது.இக்கோயிலுக்கு  தினம் தோறும் வரும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், ஏராளமான பக்தர்களும் பெருவுடையாரை வணங்கி செல்கின்றனர். மேலும் பெரியகோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா, நவராத்திரி, சதயவிழா, அன்னாபிஷேகம் என பல்வேறு விழாக்கள் வெகு விமர்சையாக நடைபெறும். குறிப்பாக பிரதோஷ நாட்களில்  நந்திக்கு நடைபெறும் அபிஷேகத்தை காணவும், சாமி தரிசனம் செய்யவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள்.இத்தகைய சிறப்புகள் வாய்ந்த பெரிய கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பவுர்ணமி தினத்தில் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் நடைபெறும்.இந்த அபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் இன்று காலை தொடங்கியது.பக்தர்கள் வேண்டி கொண்டு அரிசி மற்றும் காய்கறிகளை காணிக்கையாக கொடுத்தனர்.

மாலை நடைபெற்ற அன்னாபிஷேகத்திற்காக 1 டன் அரிசியில் சாதம் வடிக்கப்பட்டது.காய்கறிகள் கோர்த்து வைக்கப்பட்டன.பின்னர்  பெருவுடையார்  திருமேனிக்கு 1000 கிலோ அரிசியில் சமைக்கப்பட்ட அன்னம், 1000 கிலோ  எடைக் கொண்ட காய்கறி வகையால் அலங்காரம் செய்யப்பட்டன.பின்னர் சிறப்பு  அபிஷேகமங்களும் நடைபெற்றன இதனை தொடர்ந்து  சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.இதில் கலந்து கொண்ட பக்தர்கள் பெருவுடையாரே என கைகூப்பி வணங்கி வேண்டி கொண்டனர்.மேலும் சாமி  தரிசனம் செய்த பக்தர்களுக்கு  அன்னாபிஷேகம் செய்த அன்னம் பிரசாதமாக கொடுக்கப்பட்டன.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க