வெளியிடப்பட்ட நேரம்: 08:37 (29/10/2018)

கடைசி தொடர்பு:08:37 (29/10/2018)

இந்த வார ராசிபலன் அக்டோபர் 29 முதல் நவம்பர் 4 வரை 12 ராசிகளுக்கும்.

மகரராசி அன்பர்களுக்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும். கணவன் - மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு மறைந்து அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

இந்த வார ராசிபலன் அக்டோபர் 29 முதல் நவம்பர் 4 வரை 12 ராசிகளுக்கும்.

ராசி

மேஷம்மேஷராசி அன்பர்களே! 
பணவசதி திருப்திகரமாக இருக்கும். குடும்பச் சூழ்நிலை நிம்மதி தருவதாக அமையும். தேவையற்ற செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. திருமண முயற்சிகள் சாதகமாக முடியும்.  பழைய கடன்கள் தொல்லை தரக்கூடும் என்பதால், சற்று கவனம் தேவை. தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

அலுவலகத்தில் உங்கள் வேலைகளைச் சிறப்பாகச் செய்து உயர் அதிகாரிகளின் பாராட்டு களைப் பெறுவீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சலுகைகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

வியாபாரத்தில் சற்று பிற்போக்கான நிலைமையே காணப்படும். எதிர்பார்த்தபடி லாபம் கிடைப்பதற்கில்லை. அவசியம் ஏற்பட்டால் தவிர கடன் வாங்கவேண்டாம்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராதபடி வருமானம் அதிகரிக்கும். சம்பள பாக்கி கைக்கு வரும்.

மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்கள் பாடம்  நடத்தும்போது கூர்ந்து கவனிப்பீர்கள். தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் கிடைக்கும்.

குடும்ப நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டுள்ள பெண்களுக்கு மன மகிழ்ச்சி தரும் வாரமாக இருக்கும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை சந்தோஷம் தருவதாக அமையும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 
அசுவினி: 29, 30, 31, 3, 4; பரணி: 30, 31, 1, 4; கிருத்திகை: 29, 31, 1, 2 

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1, 5

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
அசுவினி: 1, 2; பரணி: 29, 2, 3; கிருத்திகை: 30, 3, 4

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜை அறையில்  தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுவனே.

 

ரிஷபம்ரிஷபராசி அன்பர்களே! 
எதிர்பார்த்ததை விடவும் வருமானம் கூடுதலாகக் கிடைக்கும்.  வீடு, மனை வாங்கும் முயற்சிகள் சாதகமாகும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.  உறவினர், நண்பர்கள் வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திருமண வயதில் உள்ள மகன் அல்லது மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும்.

அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலையே காணப்படும். வேலைகளைச் சிறப்பாகச் செய்வீர்கள். ஒரு சிலருக்கு வேறு ஊருக்கு மாற்றல் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட கூடுதல் விற்பனை நடப்பதுடன் லாபமும் அதிகரிக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். சில வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியாதபடி குடும்பச் சூழ்நிலை அமையும்.

மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் குறையக்கூடும். சிரத்தை எடுத்துப் படித்தால்தான் ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறமுடியும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு வீட்டுச் செலவுகளைச் சமாளிப்பது சற்று கடினமாகத்தான் இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 
கிருத்திகை: 29, 31, 1, 2; ரோகிணி: 29, 30, 1, 2, 3; மிருகசீரிடம்: 29, 30, 31, 2, 3, 4

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 5, 6

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
கிருத்திகை: 30, 3, 4; ரோகிணி: 31, 4; மிருகசீரிடம்: 1

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பாள்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டுப் பூஜை அறையில்  தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்

மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த 
அணியே, அணியும் அணிக்கு அழகே,அணுகாதவர்க்கு 
பிணியே பிணிக்கு மருந்தே அமரர்தம் பெருவிருந்தே
பணியேன் ஒருவரை நின்பத்மபாதம் பணிந்த பின்னே

 

மிதுனம்மிதுனராசி அன்பர்களே!
பண வரவு திருப்திகரமாக இருக்கும். உடல் நலம் சீராகும். வாழ்க்கைத் துணையின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம். திருமண வயதில் உள்ள மகன் அல்லது மகளுக்கு வரன் தேடும் முயற்சியை இந்த வாரம் மேற்கொள்ளவேண்டாம். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். ஆனாலும், அதிகாரிகளின் பாராட்டுகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும். எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைப்பது தாமதமாகும்.

வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். கடையை வேறு இடத்துக்கு மாற்றும் முயற்சி நல்லபடி முடியும். பங்குதாரர்களை அனுசரித்துச் செல்லவும்.

கலைத்துறை அன்பர்களுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைத் தவறாமல் பயன்படுத்திக் கொள்வது அவசியம். சக கலைஞர்களுடன் இணக்கமாகப் பழகுவது அவசியம்.

மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது கவனமாகக் கேட்பது அவசியம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு ஓரளவுக்கு மன நிம்மதி தரும் வாரம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 
மிருகசீரிடம்: 29, 30, 31, 2, 3, 4; திருவாதிரை: 30, 31, 1, 3, 4; புனர்பூசம்: 31, 1, 2, 4

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2, 4

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
மிருகசீரிடம்: 1; திருவாதிரை:  29, 2; புனர்பூசம்: 29, 30, 3

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டுப் பூஜை அறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

துதிப்போர்க்கு வல்வினை போம் துன்பம் போம் - நெஞ்சில்
பதிப்போர்க்கு செல்வம் பலித்து கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும் நிமலரருள் கந்த
சஷ்டி கவசந்தனை
அமரர் இடர் தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.

 

கடகம்கடகராசி அன்பர்களே!
தேவையான அளவுக்கு பணவரவு இருக்கும். சகோதரர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். குடும்பம் மற்றும் பிள்ளைகளின் திருமணம் தொடர்பான முக்கிய முடிவுகளை இந்த வாரம் எடுப்பது சாதகமாக முடியும். ஒரு சிலருக்கு உணவு தொடர்பான வயிற்று பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கவனமாக இருக்கவும்.

அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலையே காணப்படும். உங்கள் பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

வியாபாரத்தில் எதிர்பார்த்த விற்பனையும், லாபமும் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடை தாமதம் ஏற்படும். சக கலைஞர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் இருக்காது. தேவையற்ற எண்ணங்களால் மனக்குழப்பம் ஏற்படும். 

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு ஓரளவு மகிழ்ச்சியான வாரமாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:
புனர்பூசம்: 31, 1, 2, 4 ; பூசம்: 29, 1, 2, 3 ; ஆயில்யம்: 29, 30, 2, 3, 4 

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 5

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
புனர்பூசம்: 29, 30, 3; பூசம்: 30, 31, 4; ஆயில்யம்: 31, 1

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி

பரிகாரம்: தினமும் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

உருவலர் பவளமேனி ஒளிநீ றணிந்து  உமையோடும் வெள்ளை விடைமேன்
முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி  திசை தெய்வ மானபலவும்
அருநெறி நல்லநல்ல அவைநல்ல நல்ல  அடியா ரவர்க்கு மிகவே.    

 

சிம்மம்சிம்மராசி அன்பர்களே!
பணவரவு திருப்தி தரும். குடும்பத்தில் மற்றவர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் குடும்ப விஷயத்தில் மற்றவர்களைத் தலையிட அனுமதிக்கவேண்டாம். கணவன் - மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால், ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்குப் புண்ணிய தலங்களைத் தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும்.

வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். அதனால் மனதில் சோர்வு உண்டாகும். சிலருக்குச் சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விடக் கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி தரும். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு ஆறுதல் தரும்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு ஓரளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். சக கலைஞர்களிடம் பக்குவமாகப் பழகுவது  அவசியம்.

மாணவர்களுக்குப் படிப்பில் கவனம் செலுத்தமுடியாத சூழ்நிலை ஏற்படும். பெற்றோர், ஆசிரியரின் அலோசனை கேட்டு நடப்பது நல்லது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்பப் பொறுப்புகள் அதிகரிப்பதால் மன அமைதி குறையும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது தாமதமாகும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 
மகம்:  29, 30, 31, 3, 4; பூரம்: 30, 31, 1, 4; உத்திரம்:  29, 31, 1, 2 

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1, 3

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
மகம்: 1, 2; பூரம்: 29, 2, 3; உத்திரம்: 30, 3, 4

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.

 

கன்னிகன்னிராசி அன்பர்களே!
பணவரவு சுமாராகத்தான் இருக்கும். அதனால் மன உளைச்சல் ஏற்பட்டு அன்றாடப் பணிகளில் கவனத்துடன் ஈடுபடமுடியாது. கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை. திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். குடும்ப விஷயங்களை மூன்றாவது நபர்களிடம் சொல்லவேண்டாம்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். அதனால் உடல் அசதி உண்டாகும். சக பணியாளர்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.

வியாபாரத்தில் சில பிரச்னைகளைச் சமாளிக்கவேண்டி இருக்கும். பணியாளர்களிடம் தேவையான ஒத்துழைப்பை எதிர்பார்க்கமுடியாது.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும், சந்தர்ப்பச் சூழ்நிலை காரணமாக வாய்ப்புகளைப் பயன்படுத்தமுடியாமல் போகும்.

மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் உண்டாகும். ஞாபக சக்தி அதிகரிக்கும். ஆசிரியர்களின் பாராட்டுகள் கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு ஓரளவு நிம்மதி தரும் வாரமாக அமையும். அலுவலகத்தில் இறுக்கமான சூழ்நிலை காணப்படும். பொறுமையாக இருப்பது அவசியம்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:
உத்திரம்: 29, 31, 1, 2; அஸ்தம்: 29, 30, 1, 2, 3; சித்திரை: 29, 30, 31, 2, 3, 4

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 5, 7

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
உத்திரம்: 30, 3, 4; அஸ்தம்: 31, 4; சித்திரை: 1

வழிபடவேண்டிய தெய்வம்: பெருமாள்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

விண்கடந்த சோதியாய்விளங்கு ஞான மூர்த்தியாய்
பண்கடந்த தேசமேவு பாவநாச நாதனே
எண்கடந்த யோகினோடி ரந்துசென்று மாணியாய்
மண் கடந்த வண்ணம்நின்னை யார்மதிக்க வல்லரே.

 

துலாம்துலாராசி அன்பர்களே!
பண வரவு திருப்தி தருவதாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷமும் நிம்மதியும் இருக்கும். ஆனால், சகோதரர்கள் வகையில் சங்கடங்கள் உண்டாகும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவர். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்கள் உங்களுடைய பணிகளைப் பகிர்ந்துகொள்வது மனதுக்கு ஆறுதலாக இருக்கும்.

வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்வது அவசியம்.

மாணவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வாரமாக இருக்கும். நல்ல மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர் களிடமும் பெற்றோர்களிடமும் பாராட்டு பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு பிரச்னை இல்லாத வாரம். செலவுக்குத் தேவையான பணம் கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:
சித்திரை: 29, 30, 31, 2, 3, 4; சுவாதி: 30, 31, 1, 3, 4; விசாகம்: 31, 1, 2, 4

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 5

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
சித்திரை: 1; சுவாதி: 29, 2; விசாகம்: 29, 30, 3 

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசுவண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே

கிருஷ்ணதுளசி

 

விருச்சிகம்விருச்சிகராசி அன்பர்களே!
பணவரவு எதிர்பார்த்தபடி இருக்காது என்பதால் வெளியில் கடன் வாங்க நேரும். அந்நியர்களால் குடும்பத்தில் பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை. சிலருக்குச் சிறிய அளவில் ஆரோக்கியம் பாதிக்கப்படும். வழக்குகள் எதுவும் இருந்தால் உங்களுக்குச் சாதகமாக முடியும். வராது என்று நினைத்த கடன் தொகை வந்து சேரும்.

அலுவலகத்தில் வழக்கமான பணிகளையும் கூடுதல் கவனத்துடன் செய்வது அவசியம். சிறு தவறுகளும் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடும். சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பங்குதாரர்களிடம் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதமாகக் கிடைக்கும். பாக்கிகள் வசூலாவது  தாமதமாகும்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும் வருமானம் எதிர்பார்த்தபடி இருக்காது. மூத்த கலைஞர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

மாணவர்களுக்குப் படிப்பில் கூடுதல் கவனம் தேவை. ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது அக்கறையுடன் கவனிக்கவும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சற்று அமைதிக் குறைவான வாரம். பொறுமையும் சகிப்புத்தன்மையும் அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் இழுபறிக்குப் பிறகு கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 
விசாகம்: 31, 1, 2, 4; அனுஷம்: 29, 1, 2, 3; கேட்டை: 29, 30, 2, 3, 4

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2, 4

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
விசாகம்: 29, 30, 3; அனுஷம்: 30, 31, 4; கேட்டை: 31, 1

வழிபடவேண்டிய தெய்வம்: மகாவிஷ்ணு

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்வது நல்லது.

நின்னையே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான் 
தன்னையே தான்வேண்டும் செல்வம்போல் மாயத்தால் 
மின்னையே சேர்திகிரி விற்றுவக்கோட் டம்மானே 
நின்னையே தான்வேண்டி நிற்ப னடியேனே 

 

தனுசுதனுசுராசி அன்பர்களே!
வருமானம் திருப்திகரமாக இருக்கும். அலுவலகத்திலும் வீட்டிலும் கூடுதலான பொறுப்புகள் ஏற்படும் என்பதால், உடல் அசதியும், மனச்சோர்வும் ஏற்படக்கூடும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். உறவினர்கள் அனுசரணையாக இருப்பார்கள். உடல் நலனில் அக்கறை அவசியம். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சமயத்தில் வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்குச் செல்லத் தோன்றும். ஆனால், அவசரப்பட்டு முடிவு எடுக்கவேண்டாம். பொறுமை அவசியம்.

வியாபாரத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். பணியாளர்களாலும்  பங்குதாரர்களாலும் பிரச்னைகள் ஏற்படக்கூடும். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கவேண்டாம்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகளும் தாமதமும் உண்டாகும். வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள கடுமையாக உழைக்கவேண்டி வரும்.

மாணவர்களுக்குப் படிப்பில் சிறந்த முன்னேற்றம் ஏற்படக்கூடும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு அதிக பொறுப்புகளின் காரணமாக அசதியும் சோர்வும் உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்கள் அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:
மூலம்: 29, 30, 31, 3, 4; பூராடம்:  30, 31, 1, 4; உத்திராடம்: 29, 31, 1, 2 

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1, 5

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
மூலம்: 1, 2; பூராடம்: 29, 2, 3; உத்திராடம்: 30, 3, 4

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்வது நல்லது.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய் 
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க் 
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

 

மகரம்மகரராசி அன்பர்களே!
வருமானம் திருப்திகரமாக இருக்கும். கணவன் - மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு மறைந்து அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி  கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சகோதரர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது. சிலருக்கு திடீர் அதிர்ஷ்டயோகம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

அலுவலகத்தில் பணிகளைச் சிறப்பாகச் செய்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.  சிலருக்குப் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

வியாபாரம் நல்லபடியே நடக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் முதலீடு செய்வதற்கான கடனுதவி கிடைக்கும்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு எதிர்பார்த்தபடியே நல்ல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வருமானமும் திருப்திகரமாக இருக்கும்.

மாணவர்களுக்கு அவ்வப்போது மனதில் சிறுசிறு சலனம் ஏற்பட்டு நீங்கும். பெற்றோருடன் மனம்விட்டுப் பேசுவதன் மூலம் ஆறுதல் கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சில சிரமங்கள் இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சலுகைகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 
உத்திராடம்: 29, 31, 1, 2; திருவோணம்: 29, 30, 1, 2, 3; அவிட்டம்: 29, 30, 31, 2, 3, 4

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2, 3

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
உத்திராடம்: 30, 3, 4; திருவோணம்: 31, 4; அவிட்டம்: 1

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்வது நல்லது.

வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை
பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறை முடித்த
ஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு
செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே


கும்பம்கும்பராசி அன்பர்களே!
எதிர்பார்த்ததை விட பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஒரு சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியக் குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. நண்பர்களிடம் எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். சிலருக்குப் புராதனமான புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். பணிகளில் உற்சாகமாக ஈடுபடமுடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சலுகைகளை இந்த வாரம் எதிர்பார்க்கலாம்.

வியாபாரத்தில் எதிர்பார்த்த விற்பனையும் லாபமும் கிடைக்கும். பணியாளர்கள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். பங்குதாரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உதவியாக இருப்பார்கள்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வருமானமும் கூடுதலாகக் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டாகும்.

மாணவர்களுக்கு அவ்வப்போது தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும் என்பதால், படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். ஆனாலும் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இருக்காது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்பத்தை நிர்வகிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது. மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் கிடைக்கும் சலுகைகள் உற்சாகத்தைத் தரும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 
அவிட்டம்: 29, 30, 31, 2, 3, 4; சதயம்: 30, 31, 1, 3, 4; பூரட்டாதி: 31, 1, 2, 4

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4, 5

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
அவிட்டம்: 1; சதயம்: 29, 2; பூரட்டாதி: 29, 30, 3

வழிபடவேண்டிய தெய்வம்: பெருமாள்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

ஊரிலேன் காணியில்லை உறவு மற்றொருவர் இல்லை
பாரில் நின் பாதமூலம் பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ணனே என் கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர்க் களைகண் அம்மா அரங்க மாநகருளானே.

 

மீனம்மீனராசி அன்பர்களே!
வருமானம் திருப்திகரமாக இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம். வயிறு சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.  கணவன் - மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் என்று சொல்லமுடியாது. உங்கள் பணிகளை நீங்களே முடிப்பது நல்லது. எதிர்பார்த்த சலுகைகள் இழுபறிக்குப் பிறகு கிடைக்கும்.

வியாபாரத்தில் கடுமையாகப் பாடுபடவேண்டி வரும். பணியாளர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். பங்குதாரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் கிடைப்பதில் தடை தாமதம் ஏற்படும். ஆனால், எதிர்பார்த்தபடி வருமானம் கிடைப்பதில் பிரச்னை இருக்காது.

மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். ஆசிரியர்களின் பாராட்டுகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் உற்சாகம் ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பணிச் சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது தாமதமாகும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 
பூரட்டாதி: 31, 1, 2, 4; உத்திரட்டாதி: 29, 1, 2, 4; ரேவதி: 29, 30, 1, 2, 3

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2, 5

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
பூரட்டாதி: 29, 30, 3; உத்திரட்டாதி: 30, 31, 3; ரேவதி: 31, 4

வழிபடவேண்டிய தெய்வம்:  சிவபெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணை தென்பால் வெண்ணெய் நல்லூரருட்துறையுள் 
அத்தா உனக்காளாயினி அல்லேன் எனலாமே 

 


டிரெண்டிங் @ விகடன்