வெளியிடப்பட்ட நேரம்: 05:51 (15/11/2018)

கடைசி தொடர்பு:08:45 (15/11/2018)

திருவண்ணாமலை தீபத் திருவிழா... வீதியுலா வாகனங்கள், நிகழ்ச்சி நிரல்கள்..! #VikatanPhotoStory

பத்து நாள் தீபத் திருவிழாவில் ஜோதி தரிசனம் பெற்று அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனின் அருள் பெறுவோம்...

திருவண்ணாமலை தீபத் திருவிழா... வீதியுலா வாகனங்கள், நிகழ்ச்சி நிரல்கள்..! #VikatanPhotoStory

ஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக விளங்குவது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மிகப் பிரமாண்டமாக தீபத் திருவிழா பத்து நாள்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாகத் தொடங்கியது. பத்து நாள் தீப திருவிழாவில் ஜோதி தரிசனம் பெற்று அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனின் அருள் பெறுவோம்...

தீபத் திருவிழா

14.11.18 முதல் நாள் திருவிழா

அண்ணாமலையார் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியிருக்கிறது கார்த்திகைத் தீப திருவிழா. இதையடுத்து பஞ்சமூர்த்திகள் மூஷிகம், மயில், அதிகார நந்தி, சிம்ம வாகனத்தில் எழுந்தருளுகிறார்கள்.

கொடியேற்றம்

15.11.18 இரண்டாம் நாள் திருவிழா

பஞ்ச மூர்த்திகள் வெள்ளி மற்றும் இந்திர வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி புரிகிறார்கள்

திருவண்ணாமலை

16.11.18 மூன்றாம் நாள் திருவிழா 

விநாயகர், சந்திரசேகரர் ஆகியோர் பூத வாகனத்திலும், பஞ்சமூர்த்திகள் சிம்ம வாகனம் மற்றும் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளுவார்கள்.

மூன்றாம் நாள்

 

17.11.18 நான்காம் நாள் திருவிழா

விநாயகர் மற்றும் சந்திரசேகரர் நாக வாகனத்திலும், பஞ்ச மூர்த்திகள் காமதேனு வாகனத்திலும் எழுந்தருளுவார்கள்.

திருவிழா

18.11.18 ஐந்தாம் நாள் திருவிழா 

பஞ்சமூர்த்திகள் மூஷிகம், வெள்ளி மயில் மற்றும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளுகிறார்கள்.

அண்ணாமலையார்

19.11.18 ஆறாம் நாள் திருவிழா 

காலை 6.30 மணிக்கு 63 நாயன்மார்களின் புறப்பாடு நடைபெறுகிறது. இதையடுத்து மாலை பஞ்ச மூர்த்திகள் மகா ரதத்தில் உலாவந்து ஆஸ்தான மண்டபம் வந்து சேர்வார்கள்.

தேர்

20.11.18 ஏழாம் நாள் திருவிழா

காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் தேரோட்டம் நடைபெறுகிறது. விருச்சிக லக்கினத்தில் தேரோட்டம் தொடங்குகிறது.

தேரோட்டம்

21.11.18 எட்டாம் நாள் திருவிழா 

மாலை 4.30 மணிக்கு தங்கமேருவில் பிட்சாண்டவர் உற்சவம் நடைபெறுகிறது.

பிச்சாண்டவர்

22.11.18 ஒன்பதாம் நாள் திருவிழா

விநாயகர், சந்திரசேகரர் புருஷாமிருக வாகனத்திலும், பஞ்சமூர்த்திகள் காமதேனு வாகனத்திலும் எழுந்தருளுகிறார்கள்.

திருவண்ணாமலை

23.11.18 தீபத் திருவிழா

அதிகாலை 4 மணிக்குப் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. இதையடுத்து மாலை 6 மணிக்கு அண்ணாமலையில் ஜோதி ஸ்வரூப மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதே நாளில் அர்த்தநாரீஸ்வரரும் காட்சிதருகிறார்.

தீபத் திருவிழா

24.11.18 - 26.11.18 தெப்பல் திருவிழா

மூன்று நாள்களிலும் சந்திரசேகரர், அம்மன் மற்றும் சுப்பிரமணியர் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. 

தெப்பல்

25.11.18  அண்ணாமலையார் கிரிவலம்

25 - ம் தேதி அதிகாலையில் உண்ணாமுலையாள் உடனுறை அண்ணாமலையார் கிரிவலம் நடைபெறுகிறது.  

அண்ணாமலையார்

மலை உருவில் அருள்புரியும் அண்ணாமலையாரின் தீப தரிசனத்தைப் பெற்று பெருவாழ்வு வாழ்வோம்...
 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்