வெளியிடப்பட்ட நேரம்: 08:17 (16/11/2018)

கடைசி தொடர்பு:08:23 (16/11/2018)

கார்த்திகை மாத விழாக்கள், விசேஷங்கள்! #VikatanPhotoStory

கார்த்திகை மாத விழாக்கள், விசேஷங்கள்! #VikatanPhotoStory

கார்மேகம், சோனை மழை பொழியும் மாதம் கார்த்திகை. மகாவிஷ்ணு, பிரம்மா இருவருக்கும் சிவபெருமான் ஜோதிப் பிழம்பாய் காட்சியளித்த மாதம் கார்த்திகை. கடும் தவமிருந்து அன்னை பார்வதி தேவி சிவபெருமானின் திருமேனியில் இட பாகத்தைப் பெற்றதும் கார்த்திகை மாதத்தில்தான். திருவண்ணாமலை மகா தீபம், கார்த்திகை பௌர்ணமி என்று விசேஷங்கள் நிறைந்தது கார்த்திகை மாதம். 

கார்த்திகை மாதத்தில் வரும் விழாக்கள் மற்றும் விசேஷங்கள் பற்றிப் பார்க்கலாம்..!

கார்த்திகை

19.11.18 கார்த்திகை துவாதசி

துவாதசி விரதம்

கார்த்திகை மாத துவாதசி அன்னதானமிட உகந்த நாள். துவாதசியன்று ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினால் கங்கைக் கரையில் ஆயிரம் பேருக்கு அன்னதானமிட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். 

20.11.18 திருவண்ணாமலை தேரோட்டம்

தேரோட்டம்

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் தேரோட்டம் நடைபெறுகிறது. விருச்சிக லக்கினத்தில் தேரோட்டம் தொடங்குகிறது.

21.11.18 மிலாடி நபி

மிலாடி நபி

இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் புனித நாள் ’மிலாடி நபி’. இன்று மசூதிகளில் சிறப்புத் தொழுகை நடைபெறும். 

22.11.18 பௌர்ணமி

திருவண்ணாமலை

மகாவிஷ்ணு, பிரம்மா இருவருக்கும் சிவபெருமான் ஜோதிப் பிழம்பாய் காட்சி அளித்த நாள், கார்த்திகை பௌர்ணமி தினமாகும். ஜோதிப் பிழம்பே மலையாக எழுந்தருளும் திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொண்டால் பாவங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் வந்து சேரும் என்பது ஐதீகம். 

23.11.18 திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபம்

மகாதீபம்

அதிகாலை 4 மணிக்குக் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. இதையடுத்து, மாலை 6 மணிக்கு அண்ணாமலையில் ஜோதி ஸ்வரூப மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதே நாளில் அர்த்தநாரீஸ்வரரும் காட்சி தருகிறார். 

24.11.18 வாஸ்து நாள்

வாஸ்து நாள்

வாஸ்து பகவான் உறக்கத்திலிருந்து எழும் நாளில் பூமி பூஜை செய்து கட்டுமானத்தைத் தொடங்குவது சிறப்பாக இருக்கும். வாஸ்து தினமான இன்று காலை மணி 10.54 முதல் 11.30 வரை பூஜை செய்வதற்கு ஏற்ற நேரம். புது வீடு கட்டப்போகிறவர்கள் தவறவிடக்கூடாத நாள்.

1.12.18 பகவான் யோகி ராம்சுரத்குமார் ஜயந்தி

ராம்சுரத்குமார்

காசியிலிருந்து வந்து திருவண்ணாமலையிலேயே தங்கி, பக்தர்களுக்கு அருளியவர் `விசிறி சாமியார்’ என அழைக்கப்படும் பகவான் ஸ்ரீயோகி ராம்சுரத்குமார். இன்று, அவரது ஜயந்தி நன்னாள்.  

6.12.18 கார்த்திகை மாத சர்வ அமாவாசை

அமாவாசை வழிபாடு

பித்ரு பூஜை செய்வதற்கு உகந்த தினம் அமாவாசை நாள். பக்தியுடனும், நம்பிக்கையுடனும் இறந்த நம் முன்னோர்களுக்கு நீர்நிலைகளில் நீராடி, தர்ப்பணம் செய்து வழிபட்டால் முன்னோர்களின் அருளும் ஆசியும் கிடைக்கும். வாழ்க்கையும் வளமாக அமையும். 

8.12.18 தேவமாதா கருவுற்ற திருநாள்

தேவமாதா

ஏசுவின் தாயான தேவமாதா கருவுற்ற திருநாள் இன்று. இன்றைய நாளில் அனைத்து தேவாலயங்களிலும் காலையில் சிறப்பு திருப்பலி நடைபெறும். மாலை நேரத்தில் தேர்த்திருவிழாவும் நடைபெறும். 

13.12.18 கார்த்திகை சஷ்டி விரதம்

சஷ்டி விரதம்

ஒவ்வொரு மாதமும் வரும் சஷ்டியன்று விரதமிருப்பது விசேஷமானது. முருகப்பெருமானுக்கு உகந்த கார்த்திகை மாதத்தில் வரும் சஷ்டி மிகவும் சிறப்பு வாய்ந்தது. கார்த்திகை சஷ்டியன்று அதிகாலையில் எழுந்து நீராடி விரதமிருந்து முருகப் பெருமானை வழிபட்டால் முருகப் பெருமானின் பரிபூரண அருள் பெற்று குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்