அயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை... தொடங்கியது ராமாயண ரயில் சேவை | 'Ramayana express' special train service starts

வெளியிடப்பட்ட நேரம்: 12:45 (17/11/2018)

கடைசி தொடர்பு:12:45 (17/11/2018)

அயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை... தொடங்கியது ராமாயண ரயில் சேவை

ந்தியாவின் புகழ் பெற்ற இதிகாசமான ராமாயணம், நம் பாரத தேசத்தின் பெரும்பாலான மக்கள் அறிந்த ஒன்றாகும். ராமாயணக் கதைகளைக் கேட்கும்போதெல்லாம், அவை நடந்த இடங்களுக்குச் சென்று வர வேண்டும் என்ற ஆவல் ஏற்படுவது இயற்கை. 

சிறப்பு ரயில்

அந்த ஆவலைப் பூர்த்தி செய்யும்விதமாக அயோத்தியில் தொடங்கி, ராமேஸ்வரம் வரை செல்லும் சிறப்பு ரயில் சேவையை ரயிவே துறை செயல்படுத்தியுள்ளது. அதைத்தொடர்ந்து அங்கிருந்து இலங்கை தலைநகர் கொழும்பு செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் ஏற்பாடு செய்துள்ள  இந்த ரயில் சேவைக்கு `ராமாயண எக்ஸ்பிரஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் 800 இருக்கைகள் உள்ளன. இந்த சேவை நவம்பர் 14-ம் தேதி தில்லி சப்தர் ஜங் ரயில் நிலையத்தில் தொடங்கியது. 

இதில் பயணிக்கும் பக்தர்கள் முதலில் ராமர் பிறந்த இடமான அயோத்தி சென்று அங்கிருக்கும் ராமர் அனுமான் கோயில்களை தரிசனம் செய்கின்றனர். இதைத் தொடர்ந்து  நந்திகிராமம், ஜனக்பூர், வாரணாசி, பிரயாகை, சித்ராகூடம், நாசிக், ஹம்பி மற்றும் ராமேஸ்வரம் ஆகிய ராமரின் வாழ்க்கைப் பயணத்தில் வரும் புண்ணிய ஸ்தலங்களுக்கு பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள்.

ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி கோயில், ராமர்பாதம், கோதண்டராமர் கோயில் உள்ளிட்டவற்றைப் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.   இங்கு தரிசனம் முடித்ததும், ராமாயணா எக்ஸ்பிரஸ் சென்னை வந்தடைகிறது. ஒரு பயணிக்கு இதற்காக ரூ. 15,120 கட்டணமாக (இந்தியாவுக்குள் மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உணவு, இரவில் தங்கும் வசதி உள்ளிட்டவற்றை  ரயில்வே துறையே கவனித்துக் கொள்கிறது. 

 ரயில்

இலங்கை செல்ல விருப்பமுள்ளவர்கள், சென்னையிலிருந்து கொழும்புக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்படுவார்கள்.
அங்கிருந்து நுவரேலியாவில் உள்ள சீதை கோயில், அனுமன் கோயில்களுக்குச் சென்று தரிசிக்கலாம். இதற்கு, கட்டணம் தனியாக வசூலிக்கப்படும்.

இதேபோல மற்றொரு ராமாயண யாத்திரை மதுரையிலிருந்து தொடங்கி வைக்கப்பட்டது. இந்த ரயில் திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், சென்னை சென்ட்ரல் வழியாக ஹோஸ்பேட் செல்கிறது. அங்கிருந்து வட இந்திய திருத்தலங்களை தரிசனம் செய்த பிறகு ராமேஸ்வரம் வருகிறது. இதற்குக் கட்டணமாக ரூ. 15,830 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

 


[X] Close

[X] Close