வெளியிடப்பட்ட நேரம்: 17:03 (19/11/2018)

கடைசி தொடர்பு:18:06 (19/11/2018)

மண்ணின் மாமலை திருவண்ணாமலை: கார்த்திகை மாத இறையருள் மின்னிதழ் #EBook

மண்ணின் மாமலை திருவண்ணாமலை: கார்த்திகை மாத இறையருள் மின்னிதழ் #EBook

சிவபெருமான் பஞ்சபூதங்களின் நாயகன். அவரே பஞ்சபூத தத்துவமாகவும் விளங்குகிறார். இந்தப் பூமியில் பஞ்சபூதத் தலங்கள் என்று ஐந்து தலங்களில் பஞ்சபூதத் தத்துவத்தை உணர்த்தும் வண்ணம் எழுந்தருளியிருக்கிறார். அவற்றுள் திருவண்ணாமலை திருத்தலம் அக்னி தத்துவத்தை உணர்த்தும் தலமாகும். 

திருவண்ணாமலை

பிரம்மா, விஷ்ணு ஆகியோருக்கு அக்னி மலையாய் எழுந்தருளியதும்; அன்னை உமையவளுக்கு தன் திருமேனியில் சரிபாதி அருளியதும்; மலையே சிவமாகத் திகழும் பெருமை பெற்றதும்; கிரிவலம் வந்தால் அற்புதப் பலன்களை அருள்வதும்; கிரிவலப் பாதையில் எட்டுத்  திசை பாலகர்கள் பூஜித்த சிவலிங்க மூர்த்தங்கள் அமைந்திருப்பது என்று எண்ணற்ற பல சிறப்பம்சங்களைத் தன்னகத்தே கொண்ட திருத்தலம் திருவண்ணாமலை திருத்தலம்!

கார்த்திகை மாதம் நெருங்கிவிட்டாலே, அனைவரும் நினைவுகூர்வது திருவண்ணாமலை தீபத் திருநாளைத்தான். கார்த்திகை தீப நாள் முழுவதும் விரதமிருந்து, சதா காலமும் சிவசிந்தையிலேயே திளைத்திருந்து, மாலையில் திருவண்ணாமலை மலை மீது ஏற்றப்படும் தீபத்தை தரிசிப்பதன் மூலம் சகல செல்வங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழலாம் என்பது ஐதீகம். இந்த மாதம் 23-ம் தேதி திருக்கார்த்திகை தீபத் திருநாள் வருவதை முன்னிட்டு, கார்த்திகை மாத மின்னிதழான இறையருள் `திருவண்ணாமலை’ பற்றிய அரிய பல தகவல்களைத் தாங்கி வருகிறது.

இதுவரைக்கும் `இறையருள்' மின்னிதழை நேரடியாக லிங்க் மூலம் டிரைவிலிருந்து டவுன்லோடு செய்து படித்துவந்தீர்கள். ஆனால், இனிமேல் நேரடியாக விகடன் ஆப்பிலேயும் படிக்கலாம். 

bit.ly/2EL4PL7 - இந்த லிங்க்கை க்ளிக் செய்து முதலில் விகடன் ஆப்பை டவுன்லோடு செய்து, பின்னர் `Magazines' பகுதிக்குச் செல்லவும். அங்கே லேட்டஸ்ட் 'இறையருள்' இதழ் இடம்பெற்றிருக்கும். அதை 'க்ளிக்' செய்து டவுன்லோடு செய்துகொள்ளலாம். ஒருமுறை டவுன்லோடு செய்துவிட்டால், பின்னர் இணைய இணைப்பு இல்லாதபோதும்கூட படித்துக்கொள்ளலாம். முந்தைய இதழ்களும் ஒரே இடத்தில் வரிசையாக இடம்பெற்றிருக்கும். அவற்றையும் டவுன்லோடு செய்து படித்துக்கொள்ளலாம்.

கார்த்திகை மாத `இறையருள்’ மின்னிதழ், ஒரு பக்திபூர்வமான, பரவசம் நிறைந்த அனுபவத்தை உங்களுக்குத் தரும் என்று நம்புகிறோம். இதழ் குறித்த உங்கள் கருத்துகளை bodynsoul@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரியில் பகிர்ந்துகொள்ளுங்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க