வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (23/11/2018)

கடைசி தொடர்பு:16:20 (23/11/2018)

`வீடுகளில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு உகந்த நேரம் எது?’

கார்த்திகை என்றாலே அனைவருக்கும் `கார்த்திகைத் தீபத் திருவிழா’ தான் நினைவுக்கு வந்து செல்லும். தமிழரின் தொன்மையான பண்டிகைதான் இந்த விழா. தமிழர்கள் தீபாவளி, நவராத்திரி பண்டிகைகளைக் கொண்டாட ஆரம்பிக்கும் முன்பே கார்த்திகை தீபம் விளக்கீட்டுத் திருவிழா கொண்டாடும் வழக்கம் தமிழகத்தில் இருந்துள்ளது. நற்றிணை, புறநானூறு ஆகிய சங்க இலக்கியங்களில் கார்த்திகை விளக்கீட்டுத் திருவிழா காட்சிகளைக் காண முடிகிறது. 

கார்த்திகை தீபம்

கார்த்திகை மாதத்தில் பௌர்ணமியும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்வதுதான் திருக்கார்த்திகை விழா. சர்வாலய தீபம் என்றும் இந்த நாளைக் கொண்டாடுவர். திருவண்ணாமலைக் கோயிலில் இன்று அதிகாலை நான்கு மணியளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலை ஆறு மணிக்கு அர்த்தநாரீசுவரர் கோயில் பிராகாரத்தில் எழுந்தருளுவார். அவர் எழுந்தருளும்போது மலைமீது லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் மகாதீபம் ஏற்றப்படும். 

``இன்று மாலை 5.30 மணிக்கு மேல் வீடுகளில் விளக்கு ஏற்றுவதற்கு உகந்த நேரம். இருளை நீக்கும் தீப ஒளியானது மன இருளையும் போக்கும்” என்று திருநள்ளாறு சனிபகவான் கோயில் அர்ச்சகர் கோடீஸ்வர சிவாசாரியார் தெரிவித்தார்.

விளக்கேற்றுதல்

திருக்கார்த்திகையின்போது குறைந்தபட்சம் வீடுகளில் 27 தீபங்கள் ஏற்றப்பட வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. 27 என்பது 27 நட்சத்திரங்களைக் குறிக்கும். வீடு முற்றம், சமையலறை, திண்ணை, மாடம், பூஜையறை, குப்பைக் குழி, ஆடு மற்றும் மாட்டுப் பட்டி, கொல்லைப்புறம் என்று அனைத்து இடங்களிலும் தீபம் ஏற்றுவது சிறப்பு மிக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க