திருப்பதி விழா நிகழ்ச்சிகளை `யூடியூப்’ சேனலில் நேரலையாகப் பார்த்து மகிழலாம்! | We can enjoy the live festival of the Tirupati festival on the YouTube channel!

வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (28/11/2018)

கடைசி தொடர்பு:20:20 (28/11/2018)

திருப்பதி விழா நிகழ்ச்சிகளை `யூடியூப்’ சேனலில் நேரலையாகப் பார்த்து மகிழலாம்!

திருமலை திருப்பதியில் வேங்கடேசப் பெருமாளுக்கு அன்றாடம் நடைபெறும் நிகழ்ச்சிகளைத் தற்போது வேங்கடேஸ்வரா பக்தி சேனல் (எஸ்.வி.பி.சி) ஒளிபரப்பி வருகிறது. இதில் சுப்ரபாதம், கல்யாணோத்ஸவம், சகஸ்ரதீப அலங்கார சேவை ஆகிய சேவைகள் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன. 

திருப்பதி


திருப்பதிக்குச் செல்ல முடியாத பக்தர்கள் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் வீட்டிலேயே இருந்தபடி டிவி-யில் கண்டுகளித்து வருகின்றனர். குறிப்பாக, திருமலையில் நடைபெறும் 
பிரம்மோற்சவம், ரதசப்தமி, வைகுண்ட ஏகாதசி போன்ற விழாக்கள், ஆன்மிகச் சொற்பொழிவுகள் ஆகியவற்றை நேரடியாக ஒளிபரப்பி வருகின்றனர்.
இவைத்தவிர, திருமலையில்  ஒவ்வோர் நாளும் அறைகள் காலியாக இருக்கும் நிலவரம், சேவைகள் பதிவு செய்வதற்கு உரிய விவரங்கள், திருமலையில் பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் போன்ற பயனுள்ள தகவல்களையும் தினந்தோறும் வழங்கி வருகிறார்கள். 
இப்போது இந்த எஸ்.வி.பி.சி சேனலின் நிகழ்ச்சிகள் 'யூ டியூப்'பிலும் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது. இதனால், பக்தர்கள் வீட்டிலிருந்தாலும், ரயில், பஸ் போன்றவற்றில் பயணித்துக்கொண்டிருந்தாலும் தங்களின் மொபைல் போனிலேயே பார்த்து மகிழலாம். இதற்கான தொழில்நுட்ப வசதிகளை தற்போது திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க