வெளியிடப்பட்ட நேரம்: 16:05 (01/12/2018)

கடைசி தொடர்பு:16:05 (01/12/2018)

மடிப்பாக்கம் ஐயப்பன் கோயிலில் பிரம்மோற்சவ விழா நிறைவு!

சென்னை மடிப்பாக்கம் சபரி சாலையில் இருக்கும் ஐயப்பன் கோயிலில், பிரம்மோற்சவ விழா  16 - ம் தேதி தொடங்கி, 10 நாள்கள் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, வாண வேடிக்கைகளும்  சுவாமி ஊர்வலமும் நடைபெற்றன. 

ஐயப்பன் கோயில்

கோயிலில், சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. படி பூஜை விழாவும் சிறப்பாக நடைபெற்றது.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடைப்பிடிக்கப்படும் அனைத்து அம்சங்களும் இந்தக் கோயிலில் கடைப்பிடிக்கப்படுவது இதன் சிறப்பம்சமாகும். இந்தக் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள பதினெட்டுப் படிகளில், சபரி மலையைப் போலவே படி பூஜை நடைபெறுகிறது. பிரம்மோற்சவ விழாவையொட்டி 10 நாள்களுக்குப் படி பூஜை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இரண்டு நாள்கள் சங்காபிஷேகமும் நடைபெற்றது. 

படி பூஜை

சபரிமலையில் நடை சாத்தப்பட்டிருக்கும் நாள்களில் இங்குள்ள பதினெட்டுப் படிகளில் ஏற பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அருகாமையில் இன்னொருவழியாகச் சென்று  சுவாமி தரிசனம் செய்யலாம்.  பதினெட்டுப் படிகளில் இருந்தவாறே சுவாமியை எல்லோரும் தரிசிக்கும் வண்ணம் இந்தக் கோயில் வடிவமைக்கப்படுள்ளமை மற்றுமொரு சிறப்பாகும்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க