வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (03/12/2018)

கடைசி தொடர்பு:17:40 (03/12/2018)

திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் பிரம்மோற்சவம்... 9-ம் தேதி கருட சேவை!

திருமலை திருப்பதியில், வேங்கடேசப் பெருமாள் பிறந்த மாதம், புரட்டாசி மாதம் திருவோணம் நட்சத்திரம் என்று சொல்லப்படுவதால் அந்த மாதத்தில் ஆண்டுதோறும் பிரமோற்சவம் நடைபெற்று வருகிறது. இதேபோல் பத்மாவதி தாயார் பிறந்த மாதமான கார்த்திகையில் ஆண்டுதோறும் திருச்சானூரில் பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் திருச்சானூரில் நாளை 4-ம் தேதி ( செவ்வாய்க்கிழமை) தொடங்கி, 10 நாள்களுக்கு நடைபெறுகிறது.

 திருப்பதி திருச்சானூர் 

திருச்சானூரில் இருக்கும் அலர்மேல் மங்கை (பத்மாவதி தாயார்) சந்நிதி 1,100 ஆண்டுகள் பழைமையானது. சர்வ சுதந்திர வீரலட்சுமி என்றும் அலர்மேல் மங்கையை அழைப்பார்கள். 'திருமலைக்குச் செல்லும் முன் தாயாரை வணங்கிச் செல்ல வேண்டும்' என்பதும் ஐதிகம்.

 

பத்மாவதி தாயார்

 
பத்மாவதி தாயார் பிரம்மோற்சவத்தையொட்டி 2-ம்தேதி ஞாயிற்றுக்கிழமை அங்குரார்ப்பண நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. இன்று 3-ம் தேதி குங்குமார்ச்சனை நிகழ்ச்சி நடைபெற்றது. தினமும் காலை, இரவு என்று இரண்டு வேளைகளும் பத்மாவதி தாயார் பல்வேறு வாகனங்களில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

திருச்சானூர் பிரம்மோற்சவ நிகழ்ச்சி விவரம்:

 

 

 

பத்மாவதிதாயார் கோயில்

4.12.2018  செவ்வாய்க்கிழமை  துவஜாரோகணம், சிறிய சேஷ வாகனம்.
5.12.2018  புதன்கிழமை பெரிய சேஷ வாகனம்
6-12-2018  வியாழக்கிழமை முத்துப்பந்தல், ஹம்ஸ வாகனம்
7-12-2018  வெள்ளிக்கிழமை கற்பக விருட்ச வாகனம், அனுமந்த வாகனம்

குங்குமார்ச்சனை


8.12.2018  சனிக்கிழமை முத்துப் பல்லக்கு, கஜ வாகனம்
9.12.2018   ஞாயிற்றுக்கிழமை சர்வ பூபால வாகனம், கருட சேவை

பத்மாவதி தாயார்


10.12.2018 திங்கள்கிழமை சூரியபிரபை வாகனம், சந்திரபிரபை வாகனம்
11.12.2018 செவ்வாய்க்கிழமை திருத்தேர், குதிரைவாகனம் 

12.12.2018  புதன்கிழமை சக்கரஸ்நானம்
13.12.2018  வியாழக்கிழமை புஷ்பாஞ்சலி 
பிரம்மோற்சவம் பற்றிய இந்த விவரங்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க