வெளியிடப்பட்ட நேரம்: 12:18 (04/12/2018)

கடைசி தொடர்பு:12:18 (04/12/2018)

சக்தி விகடன் நடப்பு இதழில் பரவசமும் பலனும் தரும் 8 பகுதிகள்!

இந்த இதழ் சக்தி விகடன்: https://bit.ly/2U7f4Nw

'அப்போது சபரி மலைப் பகுதி, தமிழக கேரளா எல்லைப் பகுதியாக விளங்கிய காரணத்தால், வணிகர்களின் நடமாட்டம் மிகுந்திருந்தது. அப்போது அப்பகுதி கொள்ளையர் வசமானது.  ஒருமுறை, கொள்ளையர் தலைவன் உதயணன் என்பவன், சபரிமலை ஆலயத்தைத் தீக்கிரையாக்கினான். அதன்பின்...' - இப்படி வியத்தகு தகவல்களைத் தருகிறது 'சரணம் ஸ்வாமி சரணம்! - சபரிமலை... அறியவேண்டிய அபூர்வ தகவல்கள்!' எனும் சிறப்புக் கட்டுரை.

திருமண வயதை அடைந்த பிறகும் சரியான வரன் கிடைக்காமல் தள்ளிப் போனாலும், திருமணத் தடை நீங்கவும், எந்த விதச் சிரமமும் இல்லாமல் நல்லபடியாக தகுதியான துணை கிடைக்கவும், சரியான வயதில்- பொருத்தமான முறையில் திருமணம் நடக்கவும் சுயம்வர பார்வதி ஹோமம் செய்வது உகந்தது. இது குறித்த முழுமையான வழிகாட்டுதலைத் தருகிறது 'திருமணத் தடை நீக்கும் சுயம்வர பார்வதி ஹோமம்!' எனும் கட்டுரைப் பகுதி. 

குரு மூலிகை, லட்சுமி மூலிகை என்றெல்லாம் சிறப்பிக்கப்படும் கல்லால இலையை வீட்டில் வைத்து வழிபட வேண்டும் என்பது ஞான நூல்கள் தரும் அறிவுரை. இதனால் குடும்பத்தில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும்; வறுமை, கடன் தொல்லைகள் யாவும் நீங்கும்... - இப்படி பலன் தரும் தகவல்களைத் தருகிறது 'அள்ளக் குறையாத செல்வம் தரும் கல்லாலம்!' எனும் ஜோதிடப் பகுதி. 

புதுச்சேரி நகரில், கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது, புகழ் பெற்ற  மணக்குள விநாயகர்  திருக்கோயில். இவரை மையமாக வைத்து பிரெஞ்சு ஆட்சியாளர்களுக்கு எதிராக, நெசவாளர்கள் போராடி, அதுவே விடுதலைப் போராட்டத்திற்கு உந்து சக்தியாக அமைந்தது... - ஆலயத்தின் அற்புதங்களை அடுக்கிறது  'வெள்ளைக்காரன் வீதியில் தொள்ளைக்காதர்...!' எனும் பகுதி.

ஒருவருக்கு உடனடியாக குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றால், அதற்கான அமைப்புகள் அவரது ஜாதகத்திலும், கைரேகையிலும் நன்றாக இருக்கவேண்டும். அந்த வகையில், குழந்தைச் செல்வத்தைக் காட்டும் கைரேகை அமைப்பு பற்றி காட்டுகிறது 'குழந்தை ரேகைகள்!' எனும் ஜோதிடப் பகுதி. 

மற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியைச் செய்துகொண்டே இருப்பீர்கள். ஆனால், செய்த உதவியை விளம்பரப்படுத்திக் கொள்ளமாட்டீர்கள். வாக்கு சாதுர்யத்தால் பல காரியங்களைச் சாதிப்பீர்கள். ஒருவரைப் பார்த்தவுடனேயே நல்லவரா, கெட்டவரா, அவருடைய நோக்கம் ஆகியவற்றை எடைபோட்டுவிடும் ஆற்றல்மிக்கவர்கள்... புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் குறித்து முழுமையாகச் சொல்கிறது 'நட்சத்திர குணாதிசயங்கள்: புண்ணியம் மிகுந்த புனர்பூசம்!' பகுதி

இந்த இதழ் சக்தி விகடன்: https://bit.ly/2U7f4Nw

குருபலம் மிக்க ஜாதகருக்குப் பொன்னும் பொருளும் ஏராளமாகச் சேரும். ஒருவரது ஜாதகத்தில் குருவானவர் தனுசு, மீனம் ஆகிய ராசிகளில் ஆட்சியாகவோ, தனுசில் மூலத்திரிகோண பலம் பெற்றோ, கடகத்தில் பரமோச்ச நிலை அடைந்தோ இருந்தால், அவருக்கு ஏராளமான தங்கம் சேரும்... ஜோதி ரீதியில் அலசி 'உங்களிடம் தங்கம் தங்குமா?' என்பதை நிறுவியிருக்கிறார் நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகர பாரதி. 

ஒருமுறை, கூடலூரிலிருந்த இஸ்லாமிய மாணவர் ஒருவர் எஸ்.எஸ்.எல்.சியில் மற்ற பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தும், தமிழில் பதினாறு மதிப்பெண்களே பெற்றிருந்ததால், தேர்ச்சி பெறவில்லை. இளைஞர் தனக்குத் தெரிந்த தமிழ் அறிஞரான திருஞானசம்பந்தம் என்பவரிடம் போய், தமிழில் தனக்குத் தனிப்பாடம் (ட்யூஷன்) எடுக்கும்படி வேண்டினார். அவரோ, ஞானியார் சுவாமிகளின் கல்விச் சிறப்பை விளக்கி, அவரிடம் அந்த இளைஞரை அனுப்பினார். அதன்பின்... 'திருவருள் செல்வர்கள்!' தொடரின் அத்தியாயத்தை வாசிக்கத் தவறாதீர்.

அந்தச் சம்பவத்துக்குப் பிறகு வடகாலம்மன், திருடர்களைக் கண்டுபிடித்துத் தரும் தெய்வமாகிவிட்டாள். அவளுக்கு உற்ற காவலனாக இருந்து இப்போது சத்தியனும் உதவி செய்கிறான்! - முழுமையான தகவல்களைத் தருகிறது 'மண்... மக்கள்... தெய்வங்கள்!' தொடர் பகுதி.


 
பூஜை அறையில் தெய்வப் படங்கள் தெற்கு நோக்கி இருக்கலாமா? * செவ்வாய் தோஷத்தின் பாதிப்பு ஒருவருக்கு எவ்வளவு காலம் நீடிக்கும். அதற்கு என்ன பரிகாரம் செய்வது? * சனிக்கிழமைகளில் முடிவெட்டக்கூடாது என்று சொல்வது ஏன்? * பெண்கள் கருத்தரித்திருக்கும் போது வேறு வீட்டுக்குக் குடி போகலாமா? - ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார், சென்னை `காளிகாம்பாள் கோயில்'  சிவஸ்ரீசண்முக சிவாசார்யர். 

இந்த வார சக்தி  விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க:   https://bit.ly/2StJAiT