வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (06/12/2018)

கடைசி தொடர்பு:07:00 (06/12/2018)

இன்று கார்த்திகை அமாவாசை : முன்னோர்களை வழிபட சிறந்த நாள்!

சிவபெருமான் ஜோதி வடிவில் தோன்றிய தினமான கார்த்திகை மாத பௌர்ணமி எப்படிச் சிறப்பு வாய்ந்ததோ, அதே மாதிரிதான் கார்த்திகை மாத அமாவாசையும் சிறப்பு மிக்கதாகும். இன்று கார்த்திகை மாத அமாவாசை தினமாகும். முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வழிபடச் சிறந்த நாளாகும்.

அமாவாசை

மகான் ஸ்ரீதர ஐயாவாள் வீட்டுக் கிணற்றில் கங்கை நதியே பிரவாகமெடுத்து வந்தது இந்தக் கார்த்திகை மாத அமாவாசை தினத்தில்தான். அதனால், இந்த தினங்களில் நீர் நிலைகளில் நீராடினால் கங்கை நதியில் நீராடிய புண்ணியம் கிடைக்கும். இந்த நாளில் அனைத்து வித பாவங்களையும் போக்கும் பூஜைகளையும், வழிபாட்டையும் செய்யலாம். குலதெய்வ வழிபாடு செய்தால் மேலும் சிறப்பு. பசு, காகம் ஆகியவற்றுக்கு உணவளித்த பிறகு ஆதரவற்ற மக்களுக்குத் தானமளித்தால் புண்ணியம் பல மடங்கு பெருகும். 
இந்த நாளில் விரதமிருந்து அரச மரத்தைச் சுற்றி வந்து வழிபட்டால் குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

கார்த்திகை அமாவாசையன்று வால்பாறை மாசாணியம்மன் கோயிலில் வழிபடுவது நல்லது. மேலும் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி மறைந்த முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்தால் மறைந்த முன்னோர்கள் மகிழ்ச்சியடைவர். அவர்களின் அருளால் அனைத்து வளங்களும் வாழ்வில் ஏற்படும்

நீங்க எப்படி பீல் பண்றீங்க