வெளியிடப்பட்ட நேரம்: 09:51 (06/12/2018)

கடைசி தொடர்பு:11:06 (06/12/2018)

மார்கழி மாத ராசிபலன் மேஷம் முதல் கன்னி வரை 6 ராசிகளுக்கு

மார்கழி மாத ராசிபலன் மேஷம் முதல் கன்னி வரை 6 ராசிகளுக்கு

மேஷ ராசிமேஷ ராசி அன்பர்களே!

9-ல் சூரியன், சனி; 11, 12-ல் செவ்வாய்; 7, 8-ல் சுக்கிரன்; 8, 9-ல் புதன்; 8-ல் குரு; 4-ல் ராகு; 10-ல் கேது.

அரசாங்கக் காரியங்கள் இழுபறியாக இருக்கும்.எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும். மாதப் பிற்பகுதியில் புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உறவினர்களாலும் நண்பர்களாலும் நன்மைகள் ஏற்படக்கூடும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். ஆனால், தந்தையுடன் வீண் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உண்டு. தந்தை வழி உறவுகளாலும் அலைச்சலும் செலவுகளும் ஏற்படக்கூடும். சிலருக்குச் சிறிய அளவில் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். என்றாலும் பெரிய அளவில் பாதிப்பு  இருக்காது. மாத முற்பகுதியில் வாழ்க்கைத்துணையால் பிரச்னைகளும் ஏற்படக்கூடும். நவீன ரக மின்சார, மின்னணு சாதனங்களை வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். உறவினர்களால் அனுகூலம் ஏற்படும் என்றாலும், சில பிரச்னைகளும் ஏற்படக் கூடும். சகோதரிகளின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு மகிழ்ச்சி தரும். தாய்மாமன் வகை உறவுகளால் சில அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். என்றாலும் சக ஊழியர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். மேலதிகாரிகள் உங்களுக்கு அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் சுமாரான நிலையே காணப்படும். பற்று வரவில் கவனம் தேவை. மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். சக வியாபாரிகளுடன் இணக்கமாகப் பழகுவது நல்லது.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு மாதப் பிற்பகுதியில் வாய்ப்புகள் கிடைக்கும்.  அரசாங்கத்தால் கௌரவிக்கப்படுவீர்கள். படப்பிடிப்பு தொடர்பாக வெளிமாநில, வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள நேரிடலாம்.

மாணவர்கள் கஷ்டப்பட்டு படித்தால் மட்டுமே தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும்.  சந்தேகங்களை அவ்வப்போது ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சற்று சிரமங்கள் ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இருக்காது. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

சாதகமான நாள்கள்: டிசம்பர்: 18, 19, 23, 24, 29, 30, 31; ஜன: 1,7, 8, 9, 10, 11, 14
சந்திராஷ்டம நாள்கள்: ஜன: 2, 3, 4
அதிர்ஷ்ட எண்கள்:  4,7,9

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான், துர்கை

பரிகாரம்: தினமும் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வது நல்லது. வெள்ளிக்கிழமைகளில் ராகுகால வேளையில் துர்கைக்கு நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்வதும் நன்மை தரும்

ரிஷபம்ரிஷபராசி அன்பர்களே!

8-ல் சூரியன், சனி; 10, 11-ல் செவ்வாய்; 6, 7-ல் சுக்கிரன்; 7, 8-ல் புதன்; 7-ல் குரு; 3-ல் ராகு; 9-ல் கேது.

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. முன்னேற்றத்துக்குத் தடை இருக்காது. புதிய பொருள்களின் சேர்க்கை உண்டாகும். சிலருக்குப் பயணங்களும் அதன் மூலம் ஆதாயமும் ஏற்படும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். ஆனால், பெரும்பாலான கிரகங்கள் சாதகமாக இல்லை என்பதால், குடும்பத்தில் அடிக்கடி வீண் விவாதம், கணவன் - மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வதன் மூலம் பாதிப்புகளைத் தவிர்க்கலாம். மாதத்தின் பிற்பகுதியில் குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும். பிள்ளைகள் வகையில் பெருமை சேரும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். வெளியூர்ப் பயணங்களின்போது கைப்பொருள்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளவும்.

உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால், சக ஊழியர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். கூடுமானவரை உங்கள் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். உயர் அதிகாரிகளுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். 
தொழில், வியாபாரம் விறுவிறுப்பாக இருக்கும். போட்டிகளால் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். ஆனாலும்,. சக வியாபாரிகளால் மறைமுக எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டி வரும். வீண் அலைச்சலும் அதனால் மனச் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். வியாபாரத்தை முன்னிட்டு வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும்.

 கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்கள் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளை கவனமாகப் பயன் படுத்திக் கொள்வது அவசியம். மாதப் பிற்பகுதியில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். முயற்சிகளில் இருந்த தடை, தாமதங்கள் நீங்கும்.
மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது மிகவும் அவசியம். கஷ்டப்பட்டுப் படித்தால்தான் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும். சந்தேகங்களை ஆசிரியர் களிடம் உடனுக்குடன் கேட்டுத் தெளிவு பெறுவது நல்லது. 
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. மாதப் பிற்பகுதியில் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதுக்கு உற்சாகம் தரும். வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் தங்கள் பொறுப்புகளில் கவனமாக இருப்பது மிகவும் அவசியம். 

சாதகமான நாள்கள்: டிச: 16, 17, 20, 21, 22, 25, 26, 31, ஜன: 1, 2, 3, 10, 11, 12
சந்திராஷ்டம நாள்கள்: ஜன: 5, 6
அதிர்ஷ்ட எண்கள்: 3, 7, 9

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான், பைரவர்

பரிகாரம்: அஷ்டமி தினத்தில் பைரவருக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதும், செவ்வாய்க் கிழமைகளில் முருகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதும் நன்மை தரும்.

மிதுனம் மிதுனராசி அன்பர்களே!

7-ல் சூரியன், சனி; 9,10-ல் செவ்வாய்; 5, 6-ல் சுக்கிரன்; 6, 7-ல் புதன்; 6-ல் குரு; 2-ல் ராகு; 8-ல் கேது.

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அரசாங்கக் காரியங்கள் தாமதமானாலும் நல்லபடி முடியும். ஆனால், மாதப் பிற்பகுதியில் செவ்வாய் அனுகூலமாக இருப்பதால், எதிலும் வெற்றியே ஏற்படும். எதிரிகள் பணிந்து போவர். அவர்களால் மறைமுக ஆதாயமும் உண்டாகும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. ஆனால், மாதப் பிற்பகுதியில் சகோதரர்களுடன் சிறுசிறு கருத்துவேறுபாடு ஏற்பட்டுச் சரியாகும். மாதப் பிற்பகுதியில் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். 6-ல் இருக்கும் குருவால் சிற்சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை. மாதத்தின் பிற்பகுதியில் உறவினர்களாலும் நண்பர்களாலும் ஆதாயம் உண்டாகும். அவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். ஆனால், 7-ல் சனி இருப்பதால்,  வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும். கணவன் - மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும்.

உத்தியோகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். சிறு தவறும்கூட சிக்கலை ஏற்படுத்திவிடக்கூடும். சக பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
தொழில், வியாபாரத்தில் பற்று வரவில் கவனமாக இருக்கவும். பெரிய அளவில் கடன் தரவேண்டாம். பழைய பாக்கிகளைக் கறாராகப் பேசித்தான் வசூலிக்கவேண்டி இருக்கும்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு மாத முற்பகுதியில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும், மாதப் பிற்பகுதியில் வாய்ப்புகள் கிடைப்பதில் சிரமம் இருக்காது. சக கலைஞர்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படக்கூடும். 
மாணவர்கள் மாத ஆரம்பத்தில் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். மாதப் பிற்பகுதியில் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். 

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.  அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

சாதகமான நாள்கள்: டிச: 16, 17, 18, 19, 23, 24, 27, ஜன: 2, 3, 4, 5, 6, 12, 14
சந்திராஷ்டம நாள்கள்: ஜன: 7, 8, 9
அதிர்ஷ்ட எண்கள்: 3,5,7

பரிகாரம்: விநாயகருக்கு வெள்ளிக்கிழமைகளில் தேங்காய் எண்ணெய்யில் தீபம் ஏற்றி, அறுகம்புல்லால் அர்ச்சனை செய்வது நல்லது. மேலும் வியாழக்கிழமைகளில் தட்சிணா மூர்த்திக்கு மஞ்சள் மலர் கொண்டு அர்ச்சித்து வழிபடுவதும் நன்மை தரும்.


கடகம் கடகராசி அன்பர்களே!

6-ல் சூரியன், சனி; 8, 9-ல் செவ்வாய்; 4, 5-ல் சுக்கிரன்; 5, 6-ல் புதன்; 5-ல் குரு; 1-ல் ராகு; 7-ல் கேது.

குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்படும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உறவினர்களும் நண்பர்களும் மிகவும் உதவியாக இருப்பார்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் உறவினர்கள் வகையில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படச் சாத்தியம் உள்ளதால், பொறுமையுடன் இருப்பது மிகவும் அவசியம். கேது சாதகமாக இல்லாத காரணத்தினால் கணவன் - மனைவிக்கிடையே சிறுசிறு கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும். ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டு. மாதத்தின் பிற்பகுதியில் எதிரிகளால் பிரச்னைகளும், கடன் தொல்லைகளும் ஏற்படக்கூடும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சிலருக்கு வெளியூர், வெளி மாநிலப் புண்ணியத் தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு உண்டாகும். குடும்பப் பெரியவர்களின் அறிவுரையின்படி நடந்துகொண்டு, அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் செல்வாக்கு அதிகரிக்கும். பணிகளில் அவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் உங்களை உற்சாகப்படுத்தும். அலுவலகத்தில் உங்களுடைய எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.

தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் இருந்தால், அதற்கான முயற்சிகளில் இந்த மாதம் ஈடுபடலாம். 
கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு புதுப் புது வாய்ப்புகள் கதவைத் தட்டும். பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும். படைப்புகள் பெரும் வரவேற்பு பெறும். பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கௌரவிக்கப்படுவீர்கள். 

மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுகள் கிடைக்கும். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். 
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உறவினர்களிடையே மதிப்பு மரியாதை அதிகரிக்கும். தோழியர்கள் வட்டாரத்தில் உங்கள் செயல்கள் பாராட்டப்படும். பணிக்குச் செல்லும் பெண்களுக்கு, அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். 

சாதகமான நாள்கள்: டிச: 18, 19, 20, 21, 22, 25, 29, 30, ஜன: 5,6, 7, 9, 14
சந்திராஷ்டம நாள்கள்: ஜன: 10, 11
அதிர்ஷ்ட எண்கள்:1,7,9

பரிகாரம்: வியாழக்கிழமைகளில் நவகிரகங்களில் குருபகவானுக்கு மஞ்சள் மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவதும், சனிக்கிழமைகளில் அனுமனுக்கு அர்ச்சனை செய்து, அனுமன் சாலீசா படிப்பதும் நன்மை தரும்.

சிம்மம்சிம்மராசி அன்பர்களே!

5-ல் சூரியன், சனி; 7, 8-ல் செவ்வாய்; 3, 4-ல் சுக்கிரன்; 4, 5-ல் புதன்; 4-ல் குரு; 12-ல் ராகு; 6-ல் கேது.

திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். பிள்ளைகள் வழியில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். நண்பர்கள் அனுகூலமாக இருப்பார்கள். அவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். தெய்வ பக்தி அதிகரிக்கும். எடுத்த செயலை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி, சுமுகமான சூழ்நிலை உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். மாதப் பிற்பகுதியில் குடும்பப் பெரியவர்களும் நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். ஆண்களுக்குப் பெண்களாலும் பெண்களுக்கு ஆண்களாலும் நன்மைகள் ஏற்படும். சிலருக்கு புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.  ஆனால், குரு 4-ல் இருப்பதால், உடல்நலனில் கவனம் தேவைப்படுகிறது. தாயாருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும்.அவருடைய உடல் ஆரோக்கியமும் சிறிய அளவில் பாதிக்கப்படக்கூடும் என்றாலும் பாதிப்பு இருக்காது. தாய்வழி உறவினர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.

அலுவலகத்தில் அதிக பணிச்சுமை ஏற்படுவதால், மனதில் சோர்வும், உடல் அசதியும் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்துப் போவது எதிர்காலத்துக்கு நல்லது. சிலருக்கு திடீர் இடமாற்றம்,. பணிமாற்றம் ஏற்படக்கூடும். எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைப்பதில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும்.

தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலையே காணப்படும். உழைப்புக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். பங்குதாரர்களுடன் இணக்கமான சூழ்நிலை காணப்படுகிறது. ஆனாலும், மறைமுகப் பிரச்னைகளைச் சமாளிக்கவேண்டி இருக்கும். மாதப் பிற்பகுதியில் கொடுக்கல் - வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கை அவசியம்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் சாமர்த்தியமாகப் பேசி வாய்ப்புகளைப் பெறுவார்கள். ஆண் கலைஞர்களுக்கு பெண் கலைஞர்களாலும், பெண் கலைஞர்களுக்கு ஆண் கலைஞர்களாலும் நன்மைகள் ஏற்படச் சாத்தியம் உள்ளது.
மாணவர்களுக்குப் பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. தேவையற்ற சகவாசத்தைத் தவிர்க்கவேண்டியது அவசியம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உறவினர்கள் மத்தியில் மதிப்பு மரியாதை கூடும். கணவரின் அன்பும் அவர் வழி உறவினர்களால் நன்மைகளும் ஏற்படும். சிலருக்கு வெளியூர் புண்ணிய தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்குச் சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

சாதகமான நாள்கள்: டிச: 20, 21, 22, 23, 24, 31, ஜன: 1, 7, 9, 10, 11
சந்திராஷ்டம நாள்கள்: டிச: 16, 17, ஜன: 12, 13
அதிர்ஷ்ட எண்கள்: 4,6

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர், பெருமாள்

பரிகாரம்: விநாயகர் அகவல் பாராயணம் செய்வதும், விநாயகருக்கு அறுகம்புல் மாலை அணிவித்து, தும்பைப் பூக்களால் அர்ச்சனை செய்வதும் நன்மைகளைத் தரும்.

கன்னிகன்னிராசி அன்பர்களே!

4-ல் சூரியன், சனி; 6, 7-ல் செவ்வாய்; 2, 3-ல் சுக்கிரன்; 3, 4-ல் புதன்; 3-ல் குரு; 11-ல் ராகு; 5-ல் கேது.

பணவரவு கணிசமாக உயரும். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதையும் சாதிக்கவேண்டும் என்ற மன உறுதி ஏற்படும். பழைய வாகனத்தை மாற்றிவிட்டு, புதிய வாகனம் வாங்குவீர்கள். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேருவார்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். குடும்பத்துடன் விருந்து விசேஷங்களுக்குச் சென்று வருவீர்கள். உறவினர்களால் உதவிக் கிடைக்கும் அதே நேரத்தில் அவர்களால் சிறு உபத்திரவமும் ஏற்படலாம். உறவினர்கள் வகையில் சற்று பக்குவமாக நடந்துகொள்வது நல்லது. வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். வாழ்க்கைத்துணை வழி உறவுகள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் மத்தியில் உங்கள் கௌரவம் ஒரு படி உயரும்.
அலுவலகத்தில் இதுவரை இருந்து வந்த இறுக்கமான சூழ்நிலை மாறும். உங்கள் பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். 

தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் சுமாராகத்தான் கிடைக்கும். மாத முற்பகுதியில் வீண் விரயம் ஏற்படச் சாத்தியமுள்ளது. புதிய முயற்சிகளைத் தவிர்ப்பதுடன், வியாபாரத்தை விரிவு படுத்தும் முயற்சிகளையும் தவிர்க்கவும். 
கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு எதிர்பார்த்த புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பட்டங்களும் விருதுகளும் பெறும் வாய்ப்பு உண்டாகும். அரசால் கௌரவிக்கப்படுவீர்கள். 

மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஆலோசனையைக் கேட்டு நடப்பது நல்லது.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு பல வகைகளிலும் முன்னேற்றம் தரும் மாதமாக இருக்கும். புகுந்த வீட்டு உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும். கணவரின் பாராட்டுகள் கிடைக்கும்.அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு சிறப்பான பலன்கள் ஏற்படக்கூடும். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கக்கூடும்.

சாதகமான நாள்கள்: டிச: 16, 17, 23, 24, 29, 30, ஜன: 2, 3, 4, 10, 11, 12
சந்திராஷ்டம நாள்கள்: டிச: 18,19, ஜன: 14
அதிர்ஷ்ட எண்கள்:1,3,7

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான், விநாயகர்

பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானுக்கு செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்வதும், கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வதும் நன்மை தரும்.


 


டிரெண்டிங் @ விகடன்