திருவரங்கம் உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் 'பகல்பத்து ராப்பத்து உற்சவம்' தொடக்கம்! | All the Perumal temples including Srirangam are 'Pakalpattu Raapattu Utsavam' will begin tomorrow

வெளியிடப்பட்ட நேரம்: 11:47 (07/12/2018)

கடைசி தொடர்பு:11:47 (07/12/2018)

திருவரங்கம் உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் 'பகல்பத்து ராப்பத்து உற்சவம்' தொடக்கம்!

பகவான் ஶ்ரீமன் நாராயணனின் 108 திவ்ய தேசங்களில் திருப்பாற்கடல், வைகுண்டம் ஆகிய திவ்ய தேசங்களை நாம் இந்த நிலவுலகில் தரிசிக்க முடியாது. ஒரு மனிதனின் புண்ணியப் பலனாக பகவானின் அனுக்ரகம் பெற்றால் மட்டுமே, அந்த இரண்டு திவ்ய தேசங்களையும் நாம் தரிசிக்க முடியும். ஆனால், திருவரங்கத் திருத்தலத்தில் அருளும் ரங்கநாத பெருமாளை தரிசிப்பதன்மூலம் அந்த இரண்டு திவ்ய தேசங்களையும் தரிசித்த புண்ணியம் நமக்குக் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

திருவரங்கம்

அதனால்தான், வைஷ்ணவர்களுக்குக் கோயில் என்றாலே திருவரங்கம் என்று சொல்லும் அளவுக்கு சிறப்பு பெற்ற தலமாக திருவரங்கம் விளங்குகிறது. ஆழ்வார்கள் அருளிச்செய்ததும், வேதங்களுக்கு இணையாகப் போற்றப்படுவதுமாகிய நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்களுக்கு, வேதங்களுக்கு நிகரான சிறப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, திருவரங்கத்தில் பகவத் ராமாநுஜரால் ஏற்படுத்தப்பட்ட ஒரு வைபவம்தான், பகல் பத்து ராப்பத்து உற்சவம்.

திருவரங்கம்

மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியையொட்டி, வைகுண்ட ஏகாதசிக்கு முன்பாக பத்து நாள்களும், பிறகு பத்து நாள்களும் என பகல் பத்து, ராப்பத்து வைபவம் அனைத்து பெருமாள் கோயில்களிலும் நடைபெறும்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருவரங்கத்தில் இன்று (7.12.18) இரவு, ரங்கநாதரின் சந்நிதியில் ஆழ்வார்களின் பாசுரங்கள் பாடப்படும். 'திருநெடுந்தாண்டகம்' என்னும் நிகழ்ச்சியுடன் பகல் பத்து, ராப் பத்து உற்சவம் தொடங்கியது.
தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சிகள்:

திருவரங்கம்

 8 - 12 - 18 -  சனிக்கிழமை - பகல் பத்து தொடக்கம் 
17-12 - 18 - திங்கள்கிழமை  - மோகினி அலங்காரம்
18-12-18   - செவ்வாய்க்கிழமை - வைகுண்ட வாசல் திறப்பு (அதிகாலை 5 மணி) 
24-12-18 - திங்கள்கிழமை  - திருக்கைத்தல சேவை
25-12-18 - செவ்வாய்க்கிழமை - திருமங்கை மன்னன் வேடுபறி
27-12-18 - வியாழக்கிழமை - தீர்த்தவாரி
28 -12-18 - வெள்ளிக்கிழமை - நம்மாழ்வார் மோட்சம்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close