வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (07/12/2018)

கடைசி தொடர்பு:16:45 (07/12/2018)

மார்கழி மாதப் பிறப்பு! - திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பூஜை நேரம் மாற்றம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு வரும் 16-ம் தேதி முதல் முக்கிய விழா தினங்களில் பூஜை நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது என திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழ் மாதங்களில் மார்கழி மாதம் தெய்விக மாதமாகவும், இறைவழிப்பாட்டுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்கழி மாதப் பிறப்பு, ஆருத்ரா தரிசனம், ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் தைப் பொங்கல் திருநாள் ஆகியவற்றை முன்னிட்டு நடை திறப்பு நேரம் மற்றும் பூஜை நேரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக திருக்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து திருக்கோயில் இணை ஆணையர் பாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ``மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு வரும் 16-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. தொடர்ந்து, அதிகாலை 3.30 மணி விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், அதைத்தொடர்ந்து தீபாராதனை, காலை 7.30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம் மற்றும் தீபாராதனை, மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 6 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடைபெறுகிறது.

திருச்செந்தூர்

இரவு 8 மணிக்கு பள்ளியறை தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு நடை திருக்காப்பிடுதல் ஆகியவை நடைபெறுகிறது. வரும் 23-ம் தேதி ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அதிகாலை 2 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. 2.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 3 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், அதைத்தொடர்ந்து தீபாராதனைக்குப் பிறகு மற்ற கால பூஜைகள் தொடர்ந்து நடைபெறுகிறது.

அதேபோல, ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஜனவரி 1-ம் தேதி அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, அதிகாலை 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், அதைத்தொடர்ந்து தீபாராதனை, காலை 7.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், அதைத்தொடர்ந்து தீபாராதனை, மாலை 3.30 மணி சாயரட்சை தீபாராதனை, மாலை 6 மணி ராக்கால அபிஷேகம், அதைத்தொடர்ந்து தீபாராதனை, இரவு 8 மணிக்கு பள்ளியறை தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு நடை திருக்காப்பிடுதல் நடக்கிறது.

ஜனவரி மாதம் 15-ம் தேதி தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, அதிகாலை 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் தீபாராதனை நடக்கிறது. மற்ற காலங்கள் தொடர்ந்து நடக்கிறது.” என தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க