''உடம்பு சொல்றதைக் கேட்டு நடந்தா குரல்ல எந்தப் பிரச்னையும் வராது'' - அனுராதா ஶ்ரீராம்! | anuradha sriram voice maintenance tips

வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (09/12/2018)

கடைசி தொடர்பு:12:24 (09/12/2018)

''உடம்பு சொல்றதைக் கேட்டு நடந்தா குரல்ல எந்தப் பிரச்னையும் வராது'' - அனுராதா ஶ்ரீராம்!

''உடம்பு சொல்றதைக் கேட்டு நடந்தா குரல்ல எந்தப் பிரச்னையும் வராது'' - அனுராதா ஶ்ரீராம்!

''னசு சொல்றதைக் கேட்கிற நாம, உடம்பு சொல்றதைப் பெருசா கேட்குறதில்ல. மனசு போலவே நம்ம உடம்பும் நம்மக்கிட்ட பேசிக்கிட்டே இருக்கும். அது என்ன சொல்லுதுங்கிறதை நாம கவனமா கேட்டு அதுக்குத் தகுந்தமாதிரி நடந்துகிட்டோம்னா குரல்ல எந்தப் பிரச்னையும் வராது'' என்கிறார் பின்னணிப் பாடகி அனுராதாஶ்ரீராம். 

அனுராதாஶ்ரீராம்


நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் பின்னணிப் பாடி  தனித்துவமான தனது குரலால் முன்னணியில் இருப்பவர். 1995 முதல் பாடத் தொடங்கி இதுவரை 4 ஆயிரம் பாடல்களுக்குமேல் பாடியுள்ள அனுராதா ஸ்ரீராமிடம், "குரல் வளத்தை எப்படிப் பாதுகாக்கிறீர்கள் அதற்கென பிரத்தியேகமான ஆரோக்கிய வழிமுறைகளைக் கையாளுகிறீர்களா?" எனக் கேட்டோம்.

"பின்னணி பாடுறவங்களுக்கு இசையும் குரலும் இரண்டு கண்கள் மாதிரி. பாடல் பாடுற திறமையை வெளிப்படுத்துறதே குரல்வழியாகத்தான். அதனால அந்தக்குரலுக்கு தீங்கு எதையும் நான் செய்ய மாட்டேன்.
அதுக்காக, ரொம்ப கவனம் எல்லாம் எடுத்துக்கமாட்டேன்.

சின்ன வயசிலே இருந்தே இதைத்தான் சாப்பிடுவேன், இதைத்தான் குடிப்பேன்னு  நிபந்தனை விதிச்சுக்கிறதும் இல்லை. வீட்டில் எது  இருக்குதோ அதுதான்.  அதிக எண்ணெயுள்ள உணவு வகைகளான வடை, பஜ்ஜி, மிக்சர், முறுக்கு போன்ற பொருட்களைத் தவிர்ப்பேன்.   

அனுராதாஶ்ரீராம்

எப்போ சாப்பிட்டாலும் எவ்வளவு தேவையோ அவ்வளவுதான். ஸ்பைஸியான உணவுகளைத் தவிர்த்தாலே நாம அளவாகத்தான் சாப்பிடுவோம். அவங்க அவங்க உடம்பு எதையெல்லாம் ஏத்துக்குதோ அதுக்குத் தகுந்தமாதிரி நம்மை மாத்திக்கிறது நல்லது.

ஐஸ்க்ரீம், ஸ்வீட் எதையும் தள்ளிவைக்கிறதில்லை. அன்னிக்கு உடல்நிலை எப்படி இருக்குங்கிறதைப் பொறுத்துத்தான் முடிவு பண்ணுவேன். விருந்துகள்லகூட, எனக்கு எது சேருமோ அதைத்தான் சாப்பிடுவேன். 'உணவே மருந்து மருந்தே உணவு'ங்கிறதை எப்பவும் மறக்கமாட்டேன். 

மனசு சொல்றதைக் கேட்கிற நாம, உடம்பு சொல்றதைக் கேட்குறதில்ல. மனசு போலவே நம்ம உடம்பும் நமக்கிட்ட பேசிக்கிட்டே இருக்கும். அது என்ன சொல்லுதுங்கிறதை  கவனமா கேட்டு அதுக்குத் தகுந்தமாதிரி நடந்துக்கிட்டோம்னா நம்ம குரல்ல எந்தப் பிரச்னையும் வராது.

அனுராதாஶ்ரீராம் தம்பதி
 

உடற்பயிற்சினு பார்த்தா ரெகுலரா அரைமணி நேரம் வாக்கிங் போவேன். அரை மணி நேரம் யோகா பண்ணுவேன். அப்படியே கொஞ்ச நேரம் தியானம் பண்ணுவேன். இந்த மூணும் பண்ணும்போது நம்ம உடம்பு, மனசு, மெட்டபாலிசம் எல்லாமே சரியா இருக்கும். இப்படி இருந்தாலே, நம் குரலுக்கு எந்தப் பிரச்னையும் வராது. அதனால இந்த மூணையும் மிஸ் பண்ணாம கண்டிப்பா பண்ணுவேன். ரொபவும் முடியாத நிலைமையா இருந்துச்சுனா கண்டிப்பா வாக்கிங் போயிடுவேன். அதைமட்டும் நிறுத்தவே மாட்டேன்.

இன்னொரு முக்கியமான விஷயம்... நிறைய பேசமாட்டேன். தேவைப்படும்போது மட்டும்தான் பேசுவேன். அதேமாதிரி ரெகுலரா சாதகம் (பாட்டுப் பயிற்சி) பண்ணுவேன்னு சொல்லமுடியாது. பத்து பதினைஞ்சு நிமிஷம் பண்ணுவேன். தொண்டை நல்லா இருந்துச்சுனா கொஞ்ச நேரம் கூடுதலாக பாடல் பயிற்சியை எடுத்துக்குவேன்... சரியில்லாம இருந்துச்சுனா அன்னிக்குப் பயிற்சிக்கு லீவு விட்டுடுவேன்.

இதுக்கெல்லாம் மேல இந்தக் குரல் பகவான் கொடுத்தது. அவன்தான் பாடுறான். அவன்தான் பாட்டு. அவன்தான் கேட்கிறான்கிற ஞானம் வந்துடுச்சுனா எந்தத் தடங்கலும் நம்குரலுக்கு வராது. பக்தியும் பிரார்த்தனையும் இல்லன்னா இசை, பாட்டுனு எதுவும் கிடையாது. இந்தப் புகழ், இந்த வாழ்க்கை எல்லாமே இறைவன் கொடுத்ததுதான் '' என்கிறார் அனுராதாஶ்ரீராம் தன் சிலிர்ப்பான குரலில்.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்