திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் டிச.12-ல் மகா கும்பாபிஷேகம்! | Thiruvanaikaval Jambukeswarar, maha kumbapisheka on12 th December

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (10/12/2018)

கடைசி தொடர்பு:19:30 (10/12/2018)

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் டிச.12-ல் மகா கும்பாபிஷேகம்!

திருச்சியை அடுத்த திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோயில் ஜீர்னோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வருகிற 12 - ம் தேதி புதன்கிழமை நடைபெறுகிறது.  

திருவானைக்காவல்

முன்னதாக, 9 - ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பரிவார மூர்த்திகள், பரிவார விமானங்கள், உற்ஸவமூர்த்திகளுக்குக் கும்பாபிஷேக பூஜைகள் மற்றும் தீப தூப ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பஞ்சபூதங்களான நீர், நிலம், நெருப்பு, ஆகாயம், காற்று ஆகியவற்றால்தான் உலக இயக்கமே சிறப்பாக நடக்கிறது. இறைவன்  இந்த பஞ்சபூத தலங்களில் உறைவதாக சைவர்களிடம்  அசைக்கமுடியாத நம்பிக்கை நிலவி வருகிறது.   

கோபுர வாசல்

இதில் சிதம்பரம் (ஆகாயம்), திருவண்ணாமலை (நெருப்பு), திருவானைக்காவல் (நீர்), காளஹஸ்தி (வாயு - காற்று), காஞ்சிபுரம் (நிலம்) என்றும் வகுத்து வைத்து பன்னெடுங்காலமாக வழிபாடுகள் செய்து வருகின்றனர். 

நாவல் மர நிழலில் லிங்கம்

இந்த ஸ்தலம் பஞ்சபூத தலங்களில் அப்புத் தலமாக (நீர்) திகழ்ந்து வருகிறது. இங்குள்ள மூலவர் `ஜம்பு' எனும் நாவல் மரத்தடியில் இருப்பதால், ஜம்புகேஸ்வரர் என அழைக்கப்பெறுகிறார். கருவறையில் எப்போதும் நீரோட்டம் இருந்துகொண்டே இருக்கும். ஆனைக்காவிலிருந்து அருள்புரியும் அகிலாண்டேஸ்வரி வேண்டுபவர்களுக்கு வேண்டும் வரம் தருபவளாக இருக்கிறாள். இந்தத் தளம் திருச்சியிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க