வெளியிடப்பட்ட நேரம்: 20:11 (10/12/2018)

கடைசி தொடர்பு:20:11 (10/12/2018)

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிகழ்ச்சிகள்!

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயில், தொண்டை மண்டலக் கோயில்களில் மிகவும் பிரசித்திபெற்றது. 108  திவ்யதேசங்களில் முக்கியமான திருத்தலமாகவும் போற்றப்படுகிறது. 

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்

தமிழகம் முழுவதும் உள்ள வைணவக் கோயில்களில், 'பகல்பத்து ராப்பத்து' நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது. இதையொட்டி, பெருமாள் கோயில்களில் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் பாசுரங்கள் பாடப்பட்டுவருகின்றன.

வருகிற டிசம்பர் 18 -ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழாவுக்காக, சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன. 

இதையொட்டி, தினமும் சுவாமிக்கு செய்யப்படும் அலங்காரங்கள் மற்றும் பூஜைகள் பற்றிய விவரங்கள்:

 

11 - 12 - 18 - செவ்வாய்க்கிழமை - சக்கரவர்த்தித்திருமகன் திருக்கோலம்

12-12-18 -  புதன்கிழமை -  ஏணிக்கண்ணன் திருக்கோலம்

13 -12-18 - வியாழக்கிழமை - பரமபதநாதன் திருக்கோலம் 

14-12-18 -  வெள்ளிக்கிழமை - பகாசுரவதம் திருக்கோலம் 

15-12-18 -  சனிக்கிழமை - ராமர் பட்டாபிஷேகம் 

16-12-18 -  ஞாயிற்றுக்கிழமை - முரளிக்கண்ணன் திருக்கோலம்  

17-12-18 -  திங்கள்கிழமை - நாச்சியார் திருக்கோலம் 

18-12-18 -  செவ்வாய்க்கிழமை -  ராப்பத்து முதல் நாள்

அதிகாலை 2.30 மணி முதல் நள்ளிரவு - 11 மணி வரை

மூலவர் தரிசனம்

அதிகாலை 4.30 மணிக்கு பரமபத வாசல் திறப்பு  

19 -12- 2018 - புதன்கிழமை - வேணுகோபாலன் திருக்கோலம்

20-12-2018 - வியாழக்கிழமை - நம்மாழ்வார்

21-12-2018 - வெள்ளிக்கிழமை - நம்மாழ்வார்

22-12-2018 - சனிக்கிழமை - நம்மாழ்வார்

23-12-2018  - ஞாயிற்றுக்கிழமை - திருவேங்கடமுடையான் திருக்கோலம்.

24 -12-2018 - திங்கள்கிழமை - உற்சவர் முத்தங்கி சேவை

25 - 12 - 2018 - செவ்வாய்க்கிழமை - ராஜமன்னார் திருக்கோலம்

26 - 12 - 2018 - புதன்கிழமை - கோவர்த்தனகிரிகோலம்

27 - 12 - 2018 -  வியாழக்கிழமை - நம்மாழ்வார் திருவடி தொழல்

28 - 12- 2018 - வெள்ளிக்கிழமை - இயற்பா சாற்றுமுறை

வருகிற 19 -ம் தேதி முதல் 26 -ம் தேதி வரை மாலை 5.30 மணிக்கும்

27 - ம் தேதி காலை 9 மணிக்கும் பரமபதவாசல் சேவை நடைபெறும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க