பழநி கோயில் உண்டியல் வசூல் ரூ.1.32 கோடி! | Rs.1.32 crores collected in Palani temple

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (13/12/2018)

கடைசி தொடர்பு:18:40 (13/12/2018)

பழநி கோயில் உண்டியல் வசூல் ரூ.1.32 கோடி!

முருகனின் அறுபடை வீடுகளில் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில், முன்றாவது படைவீடாகும். பிரசித்திபெற்ற இந்தத் தலத்தின் மூலவர், நவபாஷாணத்தால் ஆனவர்.  450 அடி உயரத்தில் உள்ள  மலைக்கோயிலுக்கு  690 படிகள் கடந்துசெல்ல வேண்டும்.

பழனி கோயில்

ஆவினன்குடி, தென்பொதிகை  என்று அழைக்கப்படும் இக் கோயிலில், ஆண்டுதோறும் தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம் ஆகிய விழாக்கள் சிறப்பு வாய்ந்தவை. குறிப்பாக,  இங்கு நடைபெறும் தங்கத்தேர் வழிபாடு புகழ்மிக்கது. 

பழனி


விழாக்களைத் தவிர வழக்கமாக சுற்றுலாப் பயணிகளின் கூட்டமும் இங்கு அதிகமாக இருக்கும். இதனால், தைப்பூசம் காணிக்கை 
அடிக்கடி  எண்ணப்படும். இந்நிலையில், இங்குள்ள கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் என்னும் பணி தொடங்கியது . 14 நாள்களில்  வசூலான தொகையை  எண்ணும் பணியில் மாணவ மாணவிகள், சமூக ஆர்வலர்கள்  கலந்துகொண்டனர். இதில், ரொக்கமாக ரூ. 1 கோடியே 32 லட்சத்து 17 ஆயிரத்து 660 இருந்தது.  

பழனி கோயில்


இது தவிர, தங்கம் 725 கிராம், வெள்ளி 4190 கிராம் மற்றும் இலங்கை, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர்  உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி    ரூ. 12. 29 லட்சமும் இருந்தது. அத்துடன் தங்கம்,வெள்ளியில் செய்யப்பட்ட வேல்கள், தாலி, சங்கிலி,வெள்ளிப்பாதம் போன்ற பொருள்களும்  நவதானியங்கள், வெள்ளிப் பாத்திரங்கள் உள்பட ஏராளமான பொருள்களும் இருந்தன.