வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (14/12/2018)

கடைசி தொடர்பு:18:00 (14/12/2018)

உலக நன்மைக்காக சுதர்சன மகா ஹோமம்!

கவான் மகாவிஷ்ணுவின் திருக்கரத்தில் பிரகாசிப்பவரும், ஶ்ரீசுதர்சன ஆழ்வார், சக்கரத்தாழ்வார் என்றெல்லாம் பக்தர்களால் போற்றி வழிபடப் பெறுபவருமான ஶ்ரீசுதர்சன ஆழ்வாரை வழிபடுவது, அளவற்ற நன்மைகளை அருளவல்லது. மகாவிஷ்ணுவின் ஆயுதமாக பகவானுக்கு சேவை செய்வதோடு, அவரின் பக்தர்களை விரைந்துவந்து காப்பவரான ஶ்ரீ சக்கரத்தாழ்வாரின் பெருமையை வேதங்களும், புராணங்களும் பலவாறு போற்றுகின்றன.

ஹோமம்

ஶ்ரீசுதர்சன ஆழ்வாருக்கு ஹோமம் செய்து வேண்டிக்கொண்டால், எதிரிகளால் இன்னல்கள் எதுவும் ஏற்படாது. கண் திருஷ்டி உள்ளிட்ட சகல தோஷங்களும் விலகும் என்று ஞானநூல்கள் தெரிவிக்கின்றன. ஶ்ரீலஷ்மி நரசிம்மாச்சாரியார்

மிகவும் சக்திவாய்ந்ததும், வேண்டும் வரத்தை உடனே தரக்கூடிய ஆற்றல் கொண்டதுமான ஶ்ரீசுதர்சன ஹோமத்தை , உலக நன்மையை முன்னிட்டு, சென்னை ஷெனாய் நகர், மேற்கு கிளப்  சாலையில் அமைந்துள்ள ஶ்ரீஷீர்டி சாய் மகாலில் 16.12.18 அன்று காலை, மேல்கோட்டை மணவாள மாமுனிகள் மடத்தின் மடாதிபதியான ஶ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகளின் தலைமையில், ஶ்ரீசுதர்சன உபாசகரும், கடந்த 40 வருடங்களாக ஆயிரக்கணக்கில் சுதர்சன ஹோமம் நடத்தியவருமான ஶ்ரீலக்ஷ்மி நரசிம்மாச்சாரியார் நடத்திவைக்க உள்ளார். 

அது பற்றி ஶ்ரீலக்ஷ்மி நரசிம்மாச்சாரியாரிடம் பேசியபோது, ''உலக நன்மைக்காகவும், இயற்கைச் சீற்றங்கள் ஏற்படாமல் இருக்கவும், ஶ்ரீசுதர்சன ஹோமம் நடத்த ஏற்பாடாகியுள்ளது. 16-ம் தேதி காலை 5 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 7 மணிக்கு சுதர்சன ஹோமம், 10.30 மணிக்கு பூர்ணாஹுதி, மாலை 3 மணிக்கு திருமஞ்சனம் ஆகிய வைபவங்கள் நடைபெற உள்ளன. 

இந்த ஹோமத்தில் கலந்துகொள்பவர்களுக்கு சத்ருபயம் நீங்கும். கடன் தொல்லை நீங்கி சுபிட்சம் உருவாகும். ஆயுள், ஆரோக்கியம் கூடும். அனைத்து விதமான குறைகளும் நிவர்த்தியாகும்'' என்றார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க