வெளியிடப்பட்ட நேரம்: 09:04 (17/12/2018)

கடைசி தொடர்பு:09:04 (17/12/2018)

இந்த வார ராசிபலன் டிசம்பர் - 17 முதல் 23 வரை

இந்த வார ராசிபலன் டிசம்பர் - 17 முதல் 23 வரை

மேஷம்மேஷராசி அன்பர்களே!

பணவரவுக்குக் குறைவிருக்காது. வார முற்பகுதியில் தேவையற்ற குழப்பங்களால் குடும்ப நிர்வாகத்தில் கவனம் செலுத்தமுடியாது. மூத்த சகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்றாலும் பாதிப்பு இருக்காது. குழந்தைகள் வகையில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். வாரப் பிற்பகுதியில் உறவினர் வருகை மகிழ்ச்சி தரும்.

அலுவலகத்தில் உங்களின் பணித் திறன் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெற்றுத் தரும். பதவி உயர்வு ஊதிய உயர்வு போன்ற சலுகைகளையும் எதிர்பார்க்கலாம்.
வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.பணியாளர்கள் நல்ல முறையில் பணி செய்வார்கள். பங்குதாரர்கள் உதவி செய்வார்கள்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் வரும். வருமானமும் கூடுதலாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
மாணவர்கள் படிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் கவனம் செலுத்துவர். அதன் காரணமாக தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சற்று பொறுப்புகள் கூடுவதால் மனதில் சோர்வும் அமைதிக் குறைவும் உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை திருப்தி தருவதாக இருக்கும். சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 18, 19, 23
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 5,7
வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்
பரிகாரம்: தினமும் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.


ரிஷபம்ரிஷபராசி அன்பர்களே!

எதிர்பார்த்ததைவிட வருமானம் கூடுதலாகவே இருக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அவ்வப்போது சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டு மனதில் லேசான சோர்வை உண்டாக்கும். வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான போக்கு ஏற்படும். தேவையற்ற செலவுகள் ஏற்படுவதற்கில்லை. சிறிது சேமிக்கவும் முடியும்.

அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. சக பணியாளர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கவேண்டாம். 
வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகமாக வரும் என்றாலும் அதற்காகக் கூடுதலாக உழைக்கவும் வேண்டி இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடனுதவி கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும், தங்கள் தொழிலில் மிகவும் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.
மாணவர்கள் மனதில் தோன்றும் தேவையற்ற சஞ்சலத்தின் காரணமாகப் படிப்பில் கவனம் செலுத்தமுடியாமல் போகும். பெற்றோர் ஆலோசனை பயன் தரும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மன நிம்மதி உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 17, 20, 21, 22
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1,5

வழிபடவேண்டிய தெய்வம்: அபிராமி அம்பிகை
பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த
அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப் 
பிணியே பிணிக்கு மருந்தே அமரர்தம் பெருவிருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே


மிதுனம் மிதுனராசி அன்பர்களே!

குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் காணப்படும். பொருளாதார வசதிக்குக் குறைவு எதுவும் இருக்காது. புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். உடல்நலம் சீராகும். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் முரண்டு பிடித்தாலும் அவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

வேலைக்கு விண்ணப்பித்துக் காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தரும். சலுகைகளும் கிடைக்கும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்காது. போட்டிகளைச் சமாளிக்க கடுமையாகப் பாடுபடவேண்டி இருக்கும். புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம்.

கலைத்துறையினர் கடுமையான முயற்சி செய்தால்தான் வாய்ப்புகள் வரும். அப்படி வரக்கூடிய வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.

மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 17, 18, 19, 23
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6
வழிபட வேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி
பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயான் திருநிறே!.

ராசிபலன்


கடகம் கடகராசி அன்பர்களே!

பொருளாதார வசதிக்குக் குறைவில்லை. செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். நெருங்கிய உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்வதன் மூலம், தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருக்கும் வேலையில் இருந்து வேறு வேலைக்கு இப்போது முயற்சி செய்யவேண்டாம். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும்.
வியாபாரத்தில் புதிய முதலீடுகள் இப்போது வேண்டாம். சக வியாபாரிகளின் பேச்சைக் கேட்டு புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும், அதிக உழைப்பின் காரணமாக உடல் அசதி ஏற்படக்கூடும் என்பதால் தேவையான அளவுக்கு ஓய்வு எடுத்துக் கொள்வது அவசியம்.

மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வமும் நினைவாற்றலும் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்று பெற்றோரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு அதிக பொறுப்புகளால் மனதில் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தருவதாக இருக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 18, 19, 20, 21, 22
அதிர்ஷ்ட எண்கள்: 2 ,3, 7
வழிபடவேண்டிய தெய்வம்: மீனாட்சி அம்மன்
பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை
பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறை முடித்த
ஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு
செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே

சிம்மம் சிம்மராசி அன்பர்களே!

வார முற்பகுதியில் நீங்கள் நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். பேச்சினால் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். செலவுகள் அதிகரித்தாலும்கூட அதற்கேற்ப பணவரவு இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும்.

 அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையே காணப்படும். புதிய வேலைக்கு விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிதாக வியாபாரம் தொடங்க நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளைத் தொடங்கலாம். அனுகூலமாக முடியும்.

கலைஞர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைத்தாலும் அதற்கேற்ற பணவரவு இருக்காது. சக கலைஞர்களை அனுசரித்துச் செல்லவும்.
மாணவர்களுக்கு அவர்கள் விரும்பித் தேர்ந்தெடுத்த பாடப் பிரிவில் சிறப்பான மதிப்பெண் களுடன் தேர்ச்சி பெறமுடியும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகள் கூடுவதால் சற்று சிரமப்பட்டே சமாளிக்க வேண்டி இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சலுகைகள் எதையும் எதிர்பார்க்கமுடியாது.

அதிர்ஷ்ட நாள்கள்: 20, 21, 22, 23
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு 
அதிர்ஷ்ட எண்கள்: 3,5,7
சந்திராஷ்டம நாள்கள்: 17
வழிபடவேண்டிய தெய்வம்: முருகன்
பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

         உருவாய் அருவாய் உளதாய் இலதாய் 
         மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
        கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க் 
         குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!


கன்னி கன்னிராசி அன்பர்களே!

இந்த வாரம் நீங்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டும். அவசரப்பட்டு எவருக்கும் எந்த வாக்குறுதியும் தரவேண்டாம். பொருளாதார நிலை சுமாராகத்தான் இருக்கும். வெளியிடங்களுக்குச் செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும். சகோதரர்களுடன் அனுசரித்துச் செல்லவும். கணவன் - மனைவிக்கிடையே சிறுசிறு கருத்துவேறுபாடுகள் தோன்றக் கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்லவும்.

 அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருந்தாலும் அதற்கேற்ற சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். சக ஊழியர்கள் உதவி செய்வார்கள்.

வியாபாரத்தை விரிவுபடுத்தவும், வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்குக் கடையை மாற்றவும் வாய்ப்பு உண்டாகும்.
கலைத்துறையினர் சக கலைஞர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். வாய்ப்புகள் கிடைப் பதிலும் சில தடைகள் ஏற்படக்கூடும்.
மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும். வெளியில் தங்கிப் படிப்பவர்கள் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் இணக்கமாக நடந்துகொள்ளவும். அலுவலகம் செல்பவர்களுக்கு திருப்தி தரும் வாரம். சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 17, 23
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்கள்:3, 5
சந்திராஷ்டம நாள்கள்: 18, 19
வழிபடவேண்டிய தெய்வம்: வேங்கடேச பெருமாள்
தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே 


துலாம் துலாராசி அன்பர்களே!

வார முற்பகுதி சுமாராகத்தான் இருக்கும். பிற்பகுதியில் வருமானம் திருப்திகரமாக இருக்கும். சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். முக்கிய முடிவுகள் எடுக்கும்போது நன்கு ஆலோசித்து எடுப்பது நல்லது. வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடை பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் சேரும்.

வேலைக்குச் செல்லும் அன்பர்கள் வேறு வேலைக்கு முயற்சி செய்வதில் அவசரம் காட்ட வேண்டாம். அலுவலகப் பணிகளிலும் கவனமாக இருப்பது அவசியம்.

வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்றாலும் ஓரளவு திருப்திகரமாக இருக்கும். கடையை புதிய இடத்துக்கு மாற்ற நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம்.

கலைஞர்களுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதில் சில தடங்கல்கள் ஏற்படக்கூடும்.
மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம். சந்தேகங்களை உடனுக்குடன் ஆசிரியர்களிடம் கேட்டுத் தெளிவு பெறுவது அவசியம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனதில் அவ்வப்போது லேசான சோர்வு ஏற்படக்கூடும். அலுவலகம் செல்லும் பெண்கள் சில சலுகைகளைப் பெற வாய்ப்பு உண்டு.ஜோதிட மாமணி கிருஷ்ணதுளசி

அதிர்ஷ்ட நாள்கள்: 18, 19
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2,3,4
சந்திராஷ்டம நாள்கள்: 20, 21, 22
வழிபடவேண்டிய தெய்வம்: அம்பாள்
பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்கண்ட பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே


விருச்சிகம் விருச்சிகராசி அன்பர்களே!

பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கும். அவ்வப்போது சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும் உடனுக்குடன் சரியாகிவிடும். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்குவதற்கான சூழ்நிலை கனிந்து வரும். பழைய கடன்கள் தீருவதற்கு வாய்ப்பு உண்டு. பிள்ளைகளால் ஆதாயம் கிடைக்கக்கூடும்.

வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை நிலவும். ஒரு சிலருக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைப்பதற்கு சாத்தியமுண்டு.
வியாபாரத்தில் முக்கிய முடிவுகள் எதையும் இப்போது எடுக்கவேண்டாம். மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு பெரிய அளவில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும்.

கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பதற்கும், அதன் மூலம் பணவரவு கூடுவதற்கும் வாய்ப்பு உண்டு.
மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். ஆனால், உடன் சக நண்பர்களுடன் பழகுவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சந்தோஷமும் நிம்மதியும் தரும்  வாரம். வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். 

அதிர்ஷ்ட நாள்கள்: 18, 19, 20, 21, 22
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்கள்:7, 9
சந்திராஷ்டம நாள்: 23
வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்.
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.  

கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நான்அறியேன்
ஏற்றாய்அடிக்கே இரவும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன்அடியேன் அதிகைக்கெடில வீரட்டானத்துறை அம்மானே.

தனுசுதனுசுராசி அன்பர்களே!

பொருளாதார நிலை நல்லபடி இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. கணவன் - மனைவிக்கிடையே சிறு சிறு பிரச்னைகள் தோன்றக்கூடும்.   சுபநிகழ்ச்சி களுக்கான பேச்சு வார்த்தை நல்லபடி  முடியும். கருத்து வேறுபாட்டின் காரணமாகப் பிரிந்து சென்ற உறவினர்கள் உங்களைப் புரிந்துகொண்டு வருத்தம் தெரிவிப்பார்கள்.

அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவிகரமாக இருப்பார்கள். ஒரு சிலருக்கு அவர்கள் விரும்பியபடி இட மாறுதல் கிடைக்கும்.
வியாபாரத்தின் காரணமாக சிலர் தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ள நேரும். பணியா ளர்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு தருவார்கள். சக வியாபாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை உண்டாகும்.
கலைத்துறையினருக்கு புதுப்புது வாய்ப்புகளும் தாராளமான பணவரவும் கிடைக்கும். மூத்த கலைஞர்களை அனுசரித்துச்  செல்வது நல்லது.

மாணவர்கள் தேவை இல்லாமல்  வெளியில் செல்வதைத் தவிர்ப்பதுடன் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உறவினர்கள் வருகையால்பொறுப்புகள் அதிகரிக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 20, 21, 22, 23
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9
வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல் 
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும் 
ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக் 
காதலால் கூப்புவர் தம்கை 


மகரம் மகரராசி அன்பர்களே!

பொருளாதார நிலைமை திருப்தி தருவதாக இருக்கும். கணவன் - மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணங்களை மேற் கொள்ளவேண்டி இருக்கும்.  உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உறவினர்கள் வழியில் நீண்ட நாள்களாக எதிர்பார்த்திருந்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

அலுவலகத்தில் திருப்திகரமான போக்கே காணப்படும். வேறு வேலைக்குச் செல்ல விரும்பு பவர்கள் அதற்கான முயற்சிகளை இந்த வாரம் மேற்கொண்டால் சாதகமாக முடியும்.
வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். சிலர் வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்குக் கடையை மாற்றி விரிவு படுத்துவீர்கள்.

கலைத் துறையினருக்கு சிற்சில தடை தாமதங்களுக்குப் பிறகே எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் ஓரளவு திருப்தி தரும்.
மாணவர்கள் படிப்பில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். உங்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் உதவிகளையும் ஆசிரியர்கள் தருவார்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் கூடுதல் வேலை செய்யவேண்டி இருக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 17, 23
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 7
வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி
பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

உருவலர் பவளமேனி ஒளிநீ றணிந்து  உமையோடும் வெள்ளை விடைமேன்
முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி  திசை தெய்வ மானபலவும்
அருநெறி நல்லநல்ல அவைநல்ல நல்ல  அடியா ரவர்க்கு மிகவே.    


கும்பம் கும்பராசி அன்பர்களே!

வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தேவையற்ற செலவுகள் எதுவும் இருக்காது. கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் ஏற்படும். மற்றவர்களுடன் பேசும் போது  மனஸ்தாபம் ஏற்படும் என்பதால் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். 

அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். உங்கள் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டியது முக்கியம். எதிர்பார்க்கும் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

வியாபாரத்தில் சற்று கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். பற்று வரவு சுமுகமாக நடக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
கலைத் துறையினர் கடுமையாகப் பாடுபடவேண்டி இருக்கும். ஆனால், அதற்கேற்ற வருமானம் கிடைப்பதால் சோர்வு மறைந்து உற்சாகம் ஏற்படும்.

மாணவர்கள் உற்சாகமாகப் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். சிலருக்குப் படிப்பு சம்பந்தமாக வெளியூர்களுக்குச் செல்லவேண்டி இருக்கும். அதனால் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். 
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு பிரச்னை இல்லாத வாரம். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்ப்புகள் ஓரளவு நிறைவேறும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 18, 19
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 6, 8
வழிபடவேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர்
பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே  ஒன்று பெற்ற அணங்கைகண்டு  ; அயலான் ஊரில
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன்  நம்மை அளித்து காப்பான் 


மீனம் மீனராசி அன்பர்களே!

பொருளாதாரம் திருப்திகரமாக இருக்கும். அநாவசிய செலவுகள் எதுவும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை. பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் செல்ல நேரும். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள். தந்தை வழியில் நீண்டநாள்களாக எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

அலுவலகத்தில் உங்கள் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். சிலருக்கு விரும்பிய இடத்தில் மாறுதல் கிடைக்கும்.
வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக வியாபாரிகளுடன் இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி சுமுகமான போக்கு ஏற்படும். 
கலைத்துறையினருக்கு புதுப்புது வாய்ப்புகள் வரும். அதனால் எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் வருமானம் கிடைக்கும்.
மாணவர்கள் பாடங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆசிரியர்களின் ஆலோசனைகள் பயனுள்ளதாக இருக்கும். பெற்றோர் நீங்கள் கேட்பதை வாங்கித் தருவார்கள்.

குடும்பநிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு பொறுப்புகள் கூடும். ஆனால், போதிய பணம் இருப்பதால் சிரமம் எதுவும் இருக்காது. அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 20, 21, 22
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை
அதிர்ஷ்ட எண்கள்: 2,3,6
வழிபடவேண்டிய தெய்வம்: பழநியாண்டவர்
பரிகாரம்: தினமும் காலையில்
பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்!
வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்! - நெஞ்சில்
ஒரு கால் நினைக்கில் இரு காலும் தோன்றும்!
முருகா என்று ஓதுவார் முன்!


டிரெண்டிங் @ விகடன்