மார்கழி மாத விழாக்கள், விசேஷங்கள்! #VikatanPhotoStory | Photo story about Margazhi month festivals...

வெளியிடப்பட்ட நேரம்: 18:05 (18/12/2018)

கடைசி தொடர்பு:18:05 (18/12/2018)

மார்கழி மாத விழாக்கள், விசேஷங்கள்! #VikatanPhotoStory

மார்கழி மாத விழாக்கள், விசேஷங்கள்! #VikatanPhotoStory

மிழ் மாதங்களில் சிறப்பு மிக்கது தனுர் மாதம் என்று அழைக்கப்படும் மார்கழி மாதம். `மாதங்களில் நான் மார்கழி’ என்று கிருஷ்ணரே கீதையில் கூறியிருக்கிறார். மார்கழி மாத விழாக்களையும், விசேஷங்களையும் தெரிந்துகொள்வோம்.

22.12.18 -பௌர்ணமி விரதம்

பௌர்ணமி விரதம்

மார்கழி மாத பௌர்ணமி விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. மார்கழி பௌர்ணமியன்று சிவபெருமானை வழிபட்டால் அனைத்து நலன்களும் கிட்டும்.  

23.12.18 - ஆருத்ரா தரிசனம்

ஆருத்ரா தரிசனம்

திருவாதிரை நட்சத்திரம் சிவபெருமானுக்குரியது. இந்த நாளில் சிவபெருமான் ஆடல் கோலத்தில் நடராஜப் பெருமானாக ஆருத்ரா தரிசனம் தருகிறார். இந்த நாளில் நிகழ்த்தப்படும் நடராஜர் அபிஷேகம் சிறப்பானது. சிதம்பரத்தில் இந்தத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். 

24.12.18 -பரசுராம ஜயந்தி

பரசுராம ஜயந்தி

தசாவதாரங்களில் ஆறாவது அவதாரம் பரசுராமர் அவதாரம். பரசுராமர் அவதரித்த தினத்தில் பரசுராமரையோ அல்லது மகா விஷ்ணுவையோ வழிபடுவது மிகுந்த நன்மையையும், மனவலிமையையும் அளிக்கும்.

25.12.18 -கிறிஸ்துமஸ்

கிறிஸ்துமஸ்

மனிதர்களின் பாவத்தைப் போக்க ஏசு கிறிஸ்து, மண்ணில் சாதாரண மனிதராக அவதரித்த புண்ணிய தினமே கிறிஸ்துமஸ் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. 

30.12.18  சூரிய வழிபாடு சிறப்பு

சூரிய வழிபாடு

சூரிய வழிபாடு செய்வதற்கு உகந்த நாள் இன்று. கதிரவன் உதிக்கும் முன்னே நீராடிவிட்டு சூரிய உதயத்தின்போது கிழக்கு நோக்கி நின்று வணங்கினால் நவகிரக தோஷங்கள் விலகும். 

01.01.19 ஆங்கில வருடப் பிறப்பு

ஆங்கில வருடப் பிறப்பு

ஆங்கிலப் புத்தாண்டு தொடக்க நாள். இந்த நாளில் எல்லா ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

4.1.19 மாதாந்திர சிவராத்திரி

சிவராத்திரி

சிவனுக்குரிய விரதங்களில் முதன்மையானது சிவராத்திரி விரதம். இன்று மார்கழி மாத சிவராத்திரி. இன்று விரதமிருந்து சிவபெருமானை வழிபட பிறப்பில்லாப் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

5.1.19 அனுமன் ஜயந்தி

அனுமன்

இன்று அனுமன் ஜயந்தி தினம். அமாவாசையும் மூல நட்சத்திரமும் கூடிய இந்த நாளில் அனுமனுக்கு வடை மாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை, வெண்ணெய்க் காப்பு அலங்காரம் செய்தும் வழிபட அனுமனின் பரிபூரண அருள் கிடைக்கும். சத்ரு பயம், கடன் தொல்லைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

5. 1. 19  மார்கழி அமாவாசை

மார்கழி

முன்னோர்கள் வழிபாடு செய்வதற்கு உகந்த நாள் இன்று. நீர் நிலைகளில் நீராடி, முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்தால் அவர்களின் ஆசி கிடைக்கும். 

11.1.18 கூடார வல்லி

கூடார வல்லி

சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் ஆண்டாள், தனது 27 - வது பாசுரமான `கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா’ என்ற பாசுரம் பாடிய தினம். ராமானுஜர், ஆண்டாள் வேண்டிக் கொண்டபடி அக்கார அடிசிலும் வெண்ணெய்யையும் அழகருக்குப் படைத்துக் கொண்டாடிய நாள்.  

12.1.18 விவேகானந்தர் பிறந்த தினம்

விவேகானந்தர்

நரேந்திரநாத் தத்தா எனும் இயற்பெயர் கொண்ட விவேகானந்தரின் பிறந்த தினம் இன்று. ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடராகி ஞானம் பெற்று, பின் இளைஞர்கள் பலரை ஆன்மிக எழுச்சி அடையச் செய்த இவரது பிறந்த தினத்தைக் கொண்டாடும் விதமாகப் பல்வேறு நிகழ்ச்சிகள் நாடெங்கும் நடத்தப்படுகின்றன. 

14.1.18 போகிப் பண்டிகை

போகிப்பண்டிகை

மார்கழி மாதத்தின் கடைசி நாளான இன்று போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் தொடக்கமான போகியன்று காப்புக் கட்டி, தைத் திருநாளை வரவேற்க மக்கள் ஆயத்தமாகும் நாள் இன்று.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்