சபரிமலை விவகாரம்: 10 லட்சம் பெண்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு பா.ஜ.க எதிர்ப்பு!   | Bjp opposed kerala awareness programme

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (18/12/2018)

கடைசி தொடர்பு:23:00 (18/12/2018)

சபரிமலை விவகாரம்: 10 லட்சம் பெண்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு பா.ஜ.க எதிர்ப்பு!  

சபரிமலை விவகாரம்: 10 லட்சம் பெண்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு பா.ஜ.க எதிர்ப்பு!  

 பரிமலைக்குச் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதியளித்து சமீபத்தில் உத்தரவு  பிறப்பித்தது. இதனால் கடும் சர்ச்சை 
எழுந்தது. நிறைய போராட்டங்கள் நடைபெற்றன. இதையடுத்து அங்கு சென்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

சபரிமலை

இந்நிலையில், அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலைக் கோயிலுக்குச் செல்ல வலியுறுத்தி 'பெண்கள் சுவர்' என்ற நிகழ்ச்சிக்குக் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஏற்பாடு செய்துள்ளார்.

பெண்கள்

இந்த விழிப்பு உணர்வு நிகழ்ச்சி 2019 ஜனவரி 1-ம் தேதி நடைபெற உள்ளது. காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரை சுமார் 10 லட்சம் பெண்கள் சுவர் போன்று நின்று சபரிமலை கோயிலுக்குச் செல்வது தொடர்பாக விழிப்பு உணர்வு ஏற்படுத்த உள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்கு பா.ஜ.க உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. காங்கிரஸாரும் எதிர்த்து போராட்டம் நடத்தினர். இதற்கிடையே பெண்கள் சுவர் விழிப்பு உணர்வு நிகழ்ச்சிக்குக் கட்டாயப்படுத்தி பெண்களை அழைத்து வர ஆளும்கட்சித் திட்டமிட்டுள்ளதாக பா.ஜ.க புகார் தெரிவித்துள்ளது.

அவ்வாறு பெண்களை அழைத்து வந்தால் தடுத்து நிறுத்திப் போராட்டம் நடத்தப்படும் என்று  பா.ஜ.க மாநிலப் பொதுச் செயலாளர் கே.சுரேந்திரன் எச்சரித்துள்ளார். இதனால் நிலக்கல், பம்பை, பத்தினம்தட்டா, சந்நிதானம் ஆகிய இடங்களில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் திட்டமிட்டபடி நிகழ்ச்சி நடைபெறும் என ஆளும் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.