திருப்பதியில் லட்டு தயாரிக்க ரூ. 21.75 கோடி செலவில் நவீன கிச்சன்! | Tirumala Tirupati Devasthanam to build new high-end 'laddu' kitchen

வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (21/12/2018)

கடைசி தொடர்பு:15:40 (21/12/2018)

திருப்பதியில் லட்டு தயாரிக்க ரூ. 21.75 கோடி செலவில் நவீன கிச்சன்!

திருப்பதி என்றவுடன் வேங்கடேசப் பெருமாள் நினைவுக்கு வருவதைப்போலவே லட்டும் நினைவுக்கு வந்துவிடும். பிரமாண்டமான மடப்பள்ளிகளில் தினமும் லட்சக்கணக்கில் லட்டுகள் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக லட்டு தயாரிக்கும் மடப்பள்ளிகளில் அடிக்கடித் தீ விபத்துகள் நிகழ்ந்து வருவது தேவஸ்தானத்தையும் பக்தர்களையும் கவலையடையச் செய்துள்ளது.

 

திருப்பதி

தற்போது அங்கு எரிவாயு அடுப்புகளே பயன்பாட்டில் உள்ளன. லட்டு தயாரிக்க உருக்கப்படும் நெய் கசிந்து விபத்து ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. இதைத் தடுக்கவும் வேலை செய்யும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் திருப்பதியில் 21.75 கோடி செலவில் புதிய தொழில்நுட்பத்தில் மடப்பள்ளிகள் அமைக்கத் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

லட்டு

தெர்மோ ஃபுளூயிட்  எனப்படும் இந்தத் தொழில் நுட்பத்தின்படி வெப்ப ஆற்றல், குழாய்கள்  மூலம் அனுப்பப்படும். சூடாகும் குழாய்கள் லட்டு தயாரிக்கத் தேவையான நெய்யைச் சூடுபடுத்தும். இதனால் நேரடியாக நெருப்போடு பொருள்கள் தொடர்புகொள்ள வேண்டிய தேவையிருக்காது . இதன் மூலம் தீ விபத்துகள் நிச்சயம்  தடுக்கப்படும். மேலும், வரும் நாள்களில் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதோடு ஒரு நாளைக்கு ஐந்து லட்சம் லட்டுகள்  என்னும் இலக்கையும் எட்டமுடியும் என்று திருமலா திருப்பதி தேவஸ்தான செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க